search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேரடி தாக்குதலுக்கு பின்னர் ஜெர்மனி பிரதமரை சந்தித்தார் டிரம்ப்
    X

    நேரடி தாக்குதலுக்கு பின்னர் ஜெர்மனி பிரதமரை சந்தித்தார் டிரம்ப்

    ரஷியாவிடம் இருந்து சமையல் எரிவாயு இறக்குமதி செய்வது தொடர்பாக ஜெர்மனி பிரதமரை நேரடியாக தாக்கி பேசிய அமெரிக்க அதிபர் இன்று அவரை சந்தித்து பேசினார்.
    புருசெல்ஸ்:

    ரஷியாவில் இருந்து பைப்லைன் வழியாக சமையல் எரிவாயு இறக்குமதி செய்யும் விவகாரம் தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் நேரடியாக குற்றம்சாட்டி இருந்தார். மேலும், ராணுவத்துக்காக அந்நாடு மிக அதிகமாக செலவு செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

    ஜெர்மனியின் எரிபொருள் தேவையில் ரஷியாவிடம் ஏஞ்சலா மெர்க்கல் சரணாகதி அடைந்து விட்டதாக டிரம்ப் குறிப்பிட்டது ஏஞ்சலா மெர்க்கலை ஆவேசம் அடைய வைத்தது.

    முன்னர் ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்ததுபோல் தற்போது ஜெர்மனி இல்லை. எங்கள் நாடு முழுமையான தனி இறையாண்மை பெற்ற நாடு என்பதை டிரம்ப் நினைவில் கொள்ள வேண்டும் என ஏஞ்சலா மெர்க்கல் பதிலடி தந்தார்.


    இந்நிலையில், பெல்ஜியம் நாட்டு தலைநகரான புருசெல்ஸ் நகரில் நடைபெறும் ‘நாட்டோ’ நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று  ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து இருநாடுகள் இடையிலான ராணுவம் மற்றும் வர்த்தக தொடர்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், ஜெர்மனியுடனும் பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடனும் மிக நல்ல உறவுமுறைகளை அமெரிக்கா பேணி வருவதாக குறிப்பிட்டார். டிரம்ப்புடன் வர்த்தகம் மற்றும் குடியுரிமை பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்ததாவும், ஜெர்மனியின் கூட்டாளியாக அமெரிக்கா எப்போதுமே இருந்து வந்துள்ளதாகவும் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்தார். #TrumpMerkelmeet #NATOsummit
    Next Story
    ×