search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகின்  மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 8-வது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்
    X

    உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 8-வது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்

    ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். #AngelaMerkel #ForbeslistMostInfluentialWomen
    வாஷிங்டன்:

    உலகின் பெரும் செல்வந்தர்கள் மற்றும் சக்தியும் செல்வாக்கும் நிறைந்த ஆண், பெண்களின் பட்டியலை ஆண்டுதோறும்  ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

    வர்த்தகம், தொழில்நுட்பம், நிதித்துறை, ஊடகம் மற்றும் கேளிக்கைத்துறை, அரசியல் மற்றும் கொள்கை, கொடையாளர்கள் என மொத்தம் 6 பிரிவுகளில் 100 பேர் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள்.

    பிரிட்டன் பிரதமர் தெரசா மே

    அவ்வகையில், இந்த ஆண்டு நிலவரப்படி உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம் பிடித்துள்ளார். அவரையடுத்து, பிரிட்டன் பிரதமர் தெரசா மே இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த இடத்தை தெரசா மே தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்கவைத்து கொண்டுள்ளார்.

    இவர்களை தொடர்ந்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்ட்டைன் லகார்டே மூன்றாவது இடத்தில் உள்ளார். #AngelaMerkel #ForbeslistMostInfluentialWomen
    Next Story
    ×