search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fans"

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையேயான ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது.
    • நேற்றிரவில் இருந்து நூற்றுக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு முன் குவிந்துள்ளனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையேயான ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான டிக்கெட்டுகளும் ரூ.2,000, ரூ.2,500 டிக்கெட்டுகளும் கவுண்ட்டரிலும் விற்பனை செய்யப்படுகிறது. பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் கணிசமான டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    முன்னதாக நேற்றிரவில் இருந்து நூற்றுக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு முன் குவிந்துள்ளனர். கட்டுகடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.

    • விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய 2 படங்கள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 தியேட்டர்களில், உரிய அனுமதியின்றி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
    • 5 திரையரங்குகளையும் 3 நாட்களுக்கு மூட மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்தார்.

    ஆத்தூர்:

    கடந்த பொங்கல் பண்டிகையை யொட்டி, ஜனவரி மாதம் 11-ம் தேதி விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய 2 படங்கள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 தியேட்டர்களில், உரிய அனுமதியின்றி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.

    இந்த சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட ஆத்தூரில் உள்ள கேசவன், என்.எஸ், பத்மாலயா, பிரியாலயா, விஸ்வநாத் ஆகிய 5 திரை யரங்கு உரிமையாளர்க ளிடம் விளக்கம் கேட்டப் பட்டது. ஆனால் திரைய ரங்கு உரிமை யாளர்கள் முறையாக பதில் அளிக்காததால், இந்த 5 திரையரங்குகளையும் 3 நாட்களுக்கு மூட மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்தார்.

    இந்த நிலையில் இன்று வழக்கம்போல் 5 திரையரங்குகளிலும் காலை காட்சிக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் கொடுத்து திரை யரங்கில் அனுமதிக்கப் பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் தாசில்தார் தலைமைலான அதிகாரிகள், உடனடியாக படத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டு, திரையரங்கில் இருந்த ரசிகர்களை வெளி யேற்றினர். இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியே சென்றனர்.

    • வாட்ஸ் அப்-பில் இரண்டு நடிகர்களின் படம் வைப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்ப்பட்டது
    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிகுமாரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏலூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் பவன் கல்யாண் ரசிகர்.

    அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஹரிகுமார். இவர் பிரபல நடிகரான பிரபாஸ் ரசிகர் மன்றத்தின் செயலாளராக உள்ளார்.

    ஓவியர்களான இருவரும் மேற்கு கோதாவரி மாவட்டம் அத்திலிக்கு வேலை தேடி வந்தனர். நேற்று மாலை இருவரும் வேலை முடிந்து மது குடித்தனர். அப்போது ஹரிக்குமாரின் செல்போனில் நடிகர் பிரபாசின் படம் வைத்து இருந்தார்.

    இதனைக் கண்ட கிஷோர் உன்னுடைய ஸ்டேட்டஸில் நடிகர் பவன் கல்யாண் படத்தை வைக்க வேண்டும் என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிகுமார் இரும்பு கம்பி மற்றும் கற்களால் கிஷோரை தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரி குமாரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போட்டிக்காக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
    • காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

    தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது. போட்டிக்காக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

    இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் ஒருநாள் போட்டியை காண வரும்.ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி வழக்கப்பட்டுள்ளது. அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • பெண்களுக்கு தனியாக கவுண்டர் அமைத்தால் நன்றாக இருக்கும்.
    • டிக்கெட் விற்பனையை காலை 7 முதல் 8 மணிக்குள் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் நேற்று இரவு முதலே குவிந்து இருந்தனர். அவர்கள் கூறியதாவது:-

    மகேஷ், சாந்தகுமார், பரணி (காஞ்சீபுரம்):-நாங்கள் காஞ்சீபுரத்தில் இருந்து நேற்று மாலையே இங்கு வந்துவிட்டோம். அப்போது கவுண்டர் பகுதியில் தடுப்பு வேலி கூட அமைக்கவில்லை. அதன் பிறகுதான் அமைத்தனர்.

    3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடப்பதால் அதை பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளோம். ஆன்லைனில் டிக்கெட் சீக்கிரம் விற்று தீர்ந்துவிட்டது. இதனால் கவுண்டரில் டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்று நேற்று மாலையிலேயே வந்துவிட்டோம்.

    முரளி (சென்னை):-நான், நண்பர்கள் 7 பேருடன் டிக்கெட் வாங்க வந்தேன். இப்போட்டியை பார்க்க உற்சாகத்துடன் இருக்கிறோம். நள்ளிரவு முதலே இங்கு தூங்காமல் காத்திருந்தோம். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதுதான் முக்கியம். கண்டிப்பாக இந்தியா ஜெயிக்கும்.

    ராஜசேகர்-புவனேஸ்வரி தம்பதி (நாவலூர்):-இன்று அதிகாலை 4.30 மணிக்கு நாவலூரில் இருந்து இங்கு வந்தோம். காலை 5.30 மணிக்கு இங்கு வந்தபோது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

    ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் வழங்கப்படுவதால் நாங்கள் இருவரும் டிக்கெட் வாங்க வந்தோம். எங்களுக்கு டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு தனியாக கவுண்டர் அமைத்தால் நன்றாக இருக்கும்.

    முல்லைவேந்தன் (சோழிங்கநல்லூர்):-நான் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். அதிகாலை 4 மணிக்கு இங்கு வந்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு சேப்பாக்கத்தில் போட்டி நடப்பதால் அதை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

    ஆன்லைனில் டிக்கெட் சீக்கிரம் விற்று தீர்ந்தது. இதனால் கவுண்டரில் டிக்கெட் வாங்க வந்தேன். டிக்கெட் விற்பனையை காலை 7 முதல் 8 மணிக்குள் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.

    • சிறிது நேரம் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாமல் போனதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக எருது விடும் விழா நிறுத்தப்பட்டது.
    • ஆவேசம் அடைந்த ரசிகர்கள் வாலிபர் ஒருவரை காளை போல் அலங்காரம் செய்து கயிறுகட்டி அழைத்துச்சென்று ஓடவிட்டனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஊராட்சி பகுதியில் எருது விடும் விழா நடைப்பெற்றது.

    இந்த விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஓசூர், ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்கு பின்னரே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் கடந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ.80 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.70 ஆயிரம் என 40 பரிசுகளும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    இந்நிலையில் எருது விடும் விழாவில் சிறிது நேரம் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாமல் போனதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக எருது விடும் விழா நிறுத்தப்பட்டது.

    இதனால் ஆவேசம் அடைந்த ரசிகர்கள் வாலிபர் ஒருவரை காளை போல் அலங்காரம் செய்து கயிறுகட்டி அழைத்துச்சென்று ஓடவிட்டனர்.

    மேலும் இந்த விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு்பட்டனர். 

    • விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாவதையொட்டி பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • இன்று தியேட்டர்கள் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    நெல்லை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி நடிகர் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு திரைப்படங்கள் இன்று வெளியானது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் இந்த திரைப்படங்கள் திரை யிடப்பட்டது. நெல்லை மாநகரில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் 6 தியேட்டர்களில் உள்ள 11 திரைகளில் வெளியானது.

    நீண்ட ஆண்டுகளுக்கு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாவதை யொட்டி பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சிறப்பு காட்சிகள்

    இந்நிலையில் படம் வெளியானதையொட்டி விஜய், அஜித் ரசிகர்கள் இன்று தியேட்டர்களில் திருவிழாபோல் கொண்டாடி னர். ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியாக அதிகாலை 1 மணிக்கு துணிவு திரைப்படமும், 4 மணிக்கு வாரிசு திரைப்படமும் வெளியானது. எனினும் ரசிகர்கள் நேற்று இரவு முதலே தியேட்டர்களில் குவிந்தனர். அவர்கள் ஆட்டம், பாட்டம் உற்சா கத்துடன் கொண்டா டத்தில் ஈடுபட்டனர்.

    தள்ளுமுள்ளு

    பொங்கல் திரைப்படங்கள் வெளியாவதையொட்டி ரசிகர்கள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறி இருந்தார்.

    இதையொட்டி தியேட்டர்கள் முன்பு இன்று ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை தியேட்டர்களில் ரசிகர்களுக்குள் திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு உதவி கமிஷனர்கள் விஜய குமார், ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர்.

    தொடர்ந்து அவர்கள் திரைப்படத்தினை பார்த்து சென்றனர். இன்று திரைப்படங்கள் வெளியா வதையொட்டி தியேட்டர்கள் முன்பு விஜய், அஜித்தின் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் தியேட்டர் முன்பு திருவிழாபோல் காணப்பட்டது.

    • தஞ்சை பெரிய கோவில் முன்பு நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
    • தஞ்சாவூர் புகழ் உலக அளவில் பரவ தொடங்கியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை பெரிய கோவில் முன்பு நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதே போல் பல இடங்களிலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு வரும் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடு சுற்றுலா பயணிகள் இந்த போர்டு முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு தற்போது உலக அளவில் பரவி புகழ்பெற்று விளங்குகிறது. கத்தார் நாட்டில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பல ரசிகர்கள் நம்ம தஞ்சாவூர் என்ற பதாகையை காண்பித்தவாறு போட்டியை ரசித்து வருகின்றனர்.

    தினந்தோறும் நடக்கும் போட்டியில் நம்ம தஞ்சாவூர் என்ற பதாகை தென்படுவதை நம்மால் காண முடிகிறது.

    என் மூலம் தஞ்சாவூர் புகழ் உலக அளவில் பரவ தொடங்கியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

    ஓமலூரில் நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் பட பேனர்களை அகற்ற முயன்ற அதிகாரிகளுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Viswasam
    ஓமலூர்:

    ஓமலூரில் நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படம் இன்று வெளியானது இதற்கு வரவேற்பு தெரிவித்தும், படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கபட்டுள்ளது.

    இந்த நிலையில் ஓமலூர் பேரூராட்சி பகுதிகளில் பேனர்கள் வைக்க அஜித்குமார் ரசிகர்கள் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஓமலூர் பேரூராட்சி வணிக வளாகத்தின் மேலே உள்ள விளம்பர தட்டிகள் மீதும் வைக்கப்பட்டது. இதனிடையே ஓமலூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அஜித் பேனர் வைக்கப்பட்டது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓமலூர் பேரூராட்சி அதிகாரிகள் பேனர் வைக்கப்பட்ட வணிக வளாகத்திற்கு சென்று ஆய்வுகள் செய்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்ற முயன்றனர்.

    அப்போது அங்கே வந்த திமுக சமூக ஊடாக பிரிவு நிர்வாகிகள் பிரகாஷ், சீனிவாசன் ஆகியோரும், அஜித் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். பேனரை அகற்றகூடாது என்றும் அகற்றினால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். அப்போது பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி வணிக வளாக பகுதிகளில் அனுமதின்றி பேனர் வைக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தொடர்ந்தே இங்கே வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

    இதனை திமுக நிர்வாகிகள் மற்றும் அஜித் ரசிகர்கள் ஏற்க மறுத்த தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை விரட்டி அடித்தனர். தொடர்ந்து வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டு, அதற்காக அமைக்கபட்டிருந்த இரும்பு தூண்களும் அகற்றப்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #Viswasam
    பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 53வது பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவு முதலே அவரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
    மும்பை:

    பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    ஷாருக் கான் தற்போது நடித்து வரும் ஜீரோ உள்ளிட்ட இரண்டு படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

    இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஷாருக் கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.



    இந்நிலையில், மும்பையில் உள்ள மன்னாட் பகுதியில் வசித்து வரும் ஷாருக் கான் வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் குவிய தொடங்கினர்.

    ரசிகர்கள் கூடியதை அறிந்த ஷாருக் கான், தனது வீட்டின் பால்கனிக்கு வந்து நின்றார். அங்கிருந்து தனது ரசிகர்களை பார்த்துக் கையசைத்து வாழ்த்து பெற்றார். இதனால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
    உலக கோப்பை கால்பந்து மற்றும் விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டி என இரண்டு இறுதி போட்டிகள் விருந்து படைக்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். #Finals #WorldCupFootball #WimbletonTennis #Fans
    லண்டன்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் போட்டிகள் மற்றும் நாக் அவுட் சுற்று போட்டிகள் முடிந்துள்ளன. இன்று முதல் காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. இதையடுத்து அரையிறுதி போட்டிகளும், அடுத்த வாரம் இறுதி போட்டியும் நடக்கவுள்ளது.

    இதேபோல், பிரபலமான டென்னிஸ் போட்டியான விம்பிள்ட்ன் டென்னிஸ் போட்டிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் இறுதிப் போட்டி அடுத்த வாரம் இறுதியில் நடைபெறவுள்ளது.

    இந்த மாபெரும் இரண்டு இறுதி போட்டிகளும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் மிகையில்லை.



    இந்த இறுதி போட்டிகளை ஒளிபரப்ப அனைத்து தொலைக்காட்சிகளும் முழு வீச்சில் ஏற்பாடுகளை தயார் செய்து  வருகின்றன. பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனமும் தனது நிகழ்ச்சிகளை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

    விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி குறைந்த பட்சம் 2 மணி 45 நிமிடங்கள் நடைபெறும். உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியும் குறைந்தது 2 மணி நேரம் நடைபெறும் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ரஷியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றாலும், லண்டனில் வசிப்பவர்கள் தங்களது இங்கிலாந்து அணி இறுதி போட்டியில் நுழைய வேண்டும் என்பதற்காக காத்திருக்கின்றனர்.

    எது எப்படியோ, இரண்டு மெகா இறுதிப் போட்டிகளை பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்கள் தயாராக உள்ளனர். #Finals #WorldCupFootball #WimbletonTennis #Fans
    மக்கள் நீதி மய்யம் கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பொறுப்புக்களில் தனது ரசிகர்களையே நியமிக்க கமல் அதிரடியாக முடிவு எடுத்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி புதுக்கட்சியை தொடங்கிய கமல் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் நிலவும் முக்கிய பிரச்சனைகளை தனது ரசிகர்கள் மூலமாக அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு காணவும் முயற்சி மேற்கொண்டார்.

    கமல் புதிய கட்சியை தொடங்கி 100 நாட்களாகி விட்டது. இந்த காலகட்டத்தில் மகளிர் அணியினருக்கான மாநாட்டை நடத்தியதுடன், திருவள்ளூர் மாவட்டம் அதுகத்தூரில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

    கட்சியில் இளைஞர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க திட்டமிட்டுள்ள கமல், கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தவும் முடிவு செய்துள்ளார்.

    கட்சியின் பல்வேறு அமைப்புகளுக்கும் புதிய பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பொறுப்புக்களில் தனது ரசிகர்களையே நியமிக்க கமல் அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.

    நற்பணி இயக்கம் என்ற பெயரில் கமல் கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்களை ஒருங்கிணைத்து வைத்துள்ளார். இந்த நற்பணி இயக்கத்தின் மூலமாக ரசிகர்கள் ரத்ததானம் உள்ளிட்ட நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    இப்படி நற்பணிகளில் தீவிர ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் ரசிகர்களுக்கே மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்புகளை கமல் வழங்க உள்ளார். இதற்காக அவர்களை நேரில் அழைத்து பேசவும் திட்டமிட்டுள்ளார். அப்போது நேர்காணல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

    கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கூடுதலாக பெண் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் இது போன்று பெண்கள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளனர்.

    தென் மாவட்டங்களில் ரஜினி சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்த போது மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. இதனை பயன்படுத்தி அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை கூடுதலாக சேர்க்கவும் மாநில நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். பொது மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக கமல் தொடங்கிய மய்யம் விசில் செயல் மூலமாக மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த செயலியில் தினமும் 500 புகார்கள் குவிகிறது. இந்த புகார்களை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்து வருகிறார்கள்.

    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று ஏற்கனவே கமல் அறிவித்துள்ளார். இப்போது அதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அடுத்த 2 மாதங்களில் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தி விட்டு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும் கமல் முடிவு செய்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    ×