search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drunk"

    பாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    பாகூர் அருகே குடியிருப்பு பாளையத்தை சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 52). இவர் கடலூரில் உள்ள ஒரு பழக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள முகமது உசேன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். அதுபோல் நேற்றும் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி பாத்திமா கண்டித்தார்.

    இதனால் மனமுடைந்த முகமது உசேன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிற்றால் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கணவரை உயிரோடு தீ வைத்து எரித்த மனைவி செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் சோமையனூர் தெற்கு வீதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுமதி (வயது 40). இவர் தடாகம் அரசு பள்ளியில் சத்துணவு சமையலராக உள்ளார்.

    முருகேசனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு சுமதியை தொந்தரவு செய்தார். தொல்லை தாங்க முடியாமல் சுமதி அவ்வப்போது பணம் கொடுத்து வந்தார்.

    நேற்றும் வழக்கம்போல் குடிக்க பணம் கேட்டு சுமதியை தொந்தரவு செய்தார். தன்னிடம் பணம் இல்லை என்று அவர் கூறினார். இருந்தாலும் தொடர்ந்து முருகேசன் தொந்தரவு செய்தார்.

    இரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்றனர். வேலை முடிந்து வந்த சுமதி அயர்ந்து தூங்கினார். ஆனால் முருகேசன் குடிக்க பணம் கேட்டு சத்தம்போட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த சுமதி அங்கிருந்த மண்எண்ணை கேனை எடுத்து படுத்திருந்த கணவர் மீது ஊற்றினார். மனைவி தன் மீது மண்எண்ணையை ஊற்றியதை அறிந்த கணவர் தன்னை தீ வைத்து கொன்றுவிடும்படி கூறினார். சற்றும் தயங்காத சுமதி அவர் மீது தீ வைத்தார். தீ முருகேன் மீது பற்றி எரிந்தது. வேதனை தாங்க முடியாமல் அவர் அலறி சத்தம்போட்டார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முருகேசன் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் போதையில் விமான ஊழியர்களிடம் தகராறு செய்து ரவுடித்தனம் செய்த பெண் கைது செய்யப்பட்டார். #AirIndia
    மும்பை:

    மும்பையில் இருந்து கடந்த 10ம் தேதி சென்ற ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் மதுபோதையில் இருந்த பெண் ஒருவர், அதிக மது கொடுக்காததால் விமான ஊழியர்களிடம் தகராறில்  ஈடுபட்டு உள்ளார். நான் ஒரு சர்வதேச வக்கீல், நீங்கள் பணம் பறிப்பவர்கள் என கூறி  தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

    மேலும் விமான பைலட் மீது எச்சில் துப்பி உள்ளார். அங்கிருந்தவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த விமானம் லண்டன் சென்றடைந்ததும் அந்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.


    ரவுடி போல் நடந்துகொண்ட அந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

    மற்றொரு வீடியோவில், பாலஸ்தீன மக்களுக்கு உதவிய ஒரு சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர் என்று அந்த பெண்  கத்துகிறார். #AirIndia
    வில்லியனூரில் மதுகுடிப்பதற்கு மகன் பணம் கொடுக்காததால் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் ஒதியம்பட்டு ஸ்ரீராம் நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது62). இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராஜேந்திரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் தினமும் மகனிடம் பணம் வாங்கி கொண்டு மதுகுடித்து வந்தார். அதேபோல் நேற்று ராஜேந்திரன் மதுகுடிக்க மகனிடம் பணம் கேட்டார். ஆனால் மகன் பணம் தற்போது இல்லை பிறகு தருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

    இதனால் மனவருத்தம் அடைந்த குப்புசாமி தனது வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுக் கொட்டகையில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார். தந்தை தூக்கில் தொங்குவதை கண்ட மகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குப்புசாமியை தூக்கில் இருந்து இறக்கி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குப்புசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கர்நாடக மாநிலத்தில் மூச்சு பரிசோதனைக்காக வாயை ஊதும்படி சொன்ன போலீஸ்காரர்களை வழக்கறிஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KarnatakaLawyer
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் தவாங்கர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ருத்ரப்பா என்ற நபரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனவே, மூச்சு பரிசோதனை செய்வதற்காக அவரிடம் வாயை ஊதச் சொல்லியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் ஒரு வக்கீல், என்னையே சோதிக்கிறாயா? என்று கூறி போலீசாரை திட்டியுள்ளார்.

    ஆனாலும் போலீசார் விடவில்லை. கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்கள். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீஸ்காரர்களை ஆக்ரோஷமாக தாக்கினார். சாலையோரம் உள்ள கடையில் இருந்த டெரகோட்டா பொம்மைகளை தூக்கி அடித்தார். இதில் ஒரு போலீஸ்காரரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. முரட்டுத்தனமாக மோதி கீழே தள்ளிவிட்டதில் மற்றொரு போலீஸ்காரரும் காயமடைந்தார்.



    அங்கிருந்த சிலர் இந்த சம்பவத்தை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகப் பரவி வருகிறது. போலீசாரை தாக்கிய வழக்கறிஞரின் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக  வழக்கறிஞர் ருத்ரப்பாவை போலீசார் கைது செய்தனர். அவர் குடிபோதையில் இருந்தாரா? என்பதை அறிய, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையில் அவர் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டால், அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும். #KarnatakaLawyer

    கோவை அருகே குடி போதையில் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள பிரஸ்காலனி சாந்திமேட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வெங்கடேஷ்குமார் (வயது 26). இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு 8.30 மணியளவில் வெங்கடேஷ் குமார் வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். சாந்திமேடு அருகே சென்ற போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்கள் குடி போதையில் சத்தம் போட்டு கொண்டு இருந்தனர். இதனை பார்த்த வெங்கடேஷ்குமார் சத்தம் போடக்கூடாது என 3 பேரையும் எச்சரித்து அனுப்பினார்.

    பின்னர் வெங்கடேஷ் குமார் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பரை சந்தித்து பேசி விட்டு இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த அந்த 3 வாலிபர்களில் ஒருவர் காரில் இருந்து இறங்கி ஓடி வந்து தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் வெங்டேஷ்குமாரை வெட்டினார்.

    இதில் இடது கை, கழுத்து பகுதிகளில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். பின்னர் அந்த 3 வாலிபர்களும் காரில் தப்பிச் சென்றனர்.

    வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிய வெங்கடேஷ்குமாரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து வெங்கடேஷ்குமார் பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போலீஸ் காரரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற 3 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவையில் கணவர் குடிபோதைக்கு அடிமையானதால் மகனுடன்-பெண் ரெயில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 34). இவர் அந்த பகுதியில் உள்ள வாட்டர் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி குமாரி என்கிற திவ்யா (30). இவர்கள் கடந்த 10 வடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் ஹென்ட்ரி என்ற மகன் உள்ளார்.

    வேலைக்கு செல்லும் அந்தோணி தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை திவ்யா கண்டித்தார். இதனால் அடிக்கடி கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    மேலும் அந்தோணி சம்பள பணம் முழுவதையும் குடித்து செலவு செய்துவிட்டு குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பது இல்லை. இதனால் திவ்யா குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். தனது கணவரிடம் பலமுறை குடிக்க வேண்டாம் என திவ்யா அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை.

    நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய அந்தோணி குடிபோதையில் வந்தார். இதனால் கணவன்-மணைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த திவ்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது மகனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி ரத்தினபுரி அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு தனது மகனுடன் சென்றார். பின்னர் அந்த வழியாக வந்த ரெயிலில் மகனுடன் பாய்ந்து தற்கெலை செய்து கொண்டார். இதில் 2 பேரும் சம்பவஇடத்திலேயே உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தனர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட திவ்யா, ஹென்ட்ரி ஆகியோரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மத்தூர் அருகே மகன்கள் குடிக்க பணம் தராததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள குல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் காசியப்பன் (வயது70). விவசாயியான இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இதனால் தனது மகன்களிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காசியப்பன் தனது மகன்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

    இதனால் மனமுடைந்த காசியப்பன் கடந்த 19-ந்தேதி அன்று வீட்டில் வயலுக்கு அடிக்க பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவரை பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக காசியப்பன் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மது குடித்து வந்து தகராறு செய்த கணவரை அடித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மேலகிருஷ்ணன்புதூர் சிவசக்தி தெருவைச் சேர்ந்தவர் குமரப்பராஜன், (வயது 51), தொழிலாளி.

    குமரப்பராஜனின் மனைவி பானுமதி. குமரப்ப ராஜன் மது பழக்கத்திற்கு அடிமையானவர். அடிக்கடி மது குடித்து விட்டு தெருவில் மயங்கி கிடப்பது வழக்கம். மனைவி மற்றும் உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அப்போது அவர், மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். பின்னர் வீடு அருகே மயங்கி கிடப்பார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல மது குடித்து மயங்கி கிடந்த குமரப்பராஜன் திடீரென இறந்து போனார்.

    அதிக போதை காரணமாக குமரப்பராஜன் இறந்து விட்டதாக அவரது மனைவி பானுமதி தெரிவித்தார். உறவினர்களும் இதனை நம்பினர். 

    குமரப்பராஜன் தெருவில் இறந்து கிடந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனையில் குமரப்பராஜன் தலையில் அடிபட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்ட தகவலை தொடர்ந்து போலீசார் குமரப்பராஜன் சாவு குறித்து ரகசிய விசாரணையில் இறங்கினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. குமரப்பராஜனை அவரது மனைவியே அடித்து கொன்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமரப்பராஜனின் மனைவி பானுமதியை பிடித்து விசாரித்தனர்.

    பானுமதி முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரை தள்ளி விட்டு கம்பால் அடித்ததாகவும் அவர், மயங்கி விழுந்து இறந்து போனதும் தெரியவந்தது. அதன் பிறகே பானுமதி போதையில் கணவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தெரிவித்து நாடகமாடியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பானுமதியை கைது செய்தனர். அவர், போலீசாரிடம் அளித்த வாக்கு மூலம் வருமாறு:-

    நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வருகிறேன். எனது கணவர் குமரப்பராஜன். கூலித் தொழிலாளி. வேலைக்கு சென்று கிடைக்கும் பணம் அனைத்தையும் குடித்தே செலவு செய்தார். குடும்பச் செலவிற்கு பணம் தருவதில்லை. தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வார். என்னையும் அடித்து உதைப்பார். சம்பவத்தன்றும் இதுபோல குடித்து விட்டு வந்து என்னை அடித்து உதைத்தார். அவரிடம் இருந்து தப்பிக்க நான், கணவரை தள்ளி விட்டேன். கம்பலாலும் அடித்து விரட்டினேன். 

    அவர், சத்தம் போட்டப்படி வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னர் தேடிச்சென்ற போது அவர், இறந்து விட்டது தெரியவந்தது. கணவரிடமிருந்து என்னை தற்காத்து கொள்ளவே அவரை தாக்கினேன்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குடிபோதையில் நடந்து சென்ற தொழிலாளி ஆற்றுக்குள் தவறி விழுந்த பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). துப்புரவு பணியாளர். மது குடிக்கும் பழக்கம் உடையவர்.

    நேற்று கல்லணை கால்வாய், அலிவலம் பிரிவு வாய்க்கால் அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் மது குடித்து விட்டு கல்லணை கால்வாய் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென போதையில் நிலைதடுமாறி ஆற்றுக்குள் தவறி விழுந்தார். ஆற்றில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருந்ததால் முருகன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். 

    இதைப் பார்த்த அருகில் இருந்த சிலர் ஆற்றில் குதித்து அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து தஞ்சை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் தேடுதலுக்கு பின்பு முருகன் விழுந்த இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அவரது உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    வீட்டு முன் மது குடித்ததை தட்டி கேட்ட வாலிபர் மீது தாக்குதல் நடத்திய குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையம் கே.கே.பட்டி முத்துமாடன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 46). அதே பகுதியைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவர் சந்திரன் வீட்டின் முன்பு அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரன் அவரை தட்டிக் கேட்டார்.

    குடி போதையில் இருந்த செங்குட்டுவன் ஆத்திரத்தில் சந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் குடி போதையில் வாகனம் ஓட்டிய போலீஸ்காரர் வினோத்தை சஸ்பெண்டு செய்து கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவிட்டு உள்ளார்.
    கோவை:

    கோவை செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் வினோத் (35). இவர் கடந்த வாரம் செல்வபுரம் பகுதியில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.

    அவர் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை ஒட்டி செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை வழி மறித்து நிறுத்தி உள்ளனர்.

    அவர் குடி போதையில் இருப்பதை அறிந்த பொதுமக்கள் போலீஸ்காரராகிய நீங்கள் குடி போதையில் சீருடையில் மோட்டார் கைக்கிளை ஓட்டி செல்கிறீர்களே? என கேட்டு உள்ளனர்.

    அதற்கு போலீஸ்காரர் வினோத் பதில் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். சற்று நேரத்தில் அங்கிருந்து அவர் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

    குடிபோதையில் போலீஸ்காரர் சீருடையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியது. இந்த தகவல் உயர் அதிகாரிகள் மூலம் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா கவனத்துக்கும் சென்றது.

    அவர் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அப்போது போலீஸ்காரர் வினோத் ஏற்கனவே குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றதும் தெரிய வந்தது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    போலீஸ்காரர் வினோத்தை சஸ்பெண்டு செய்து கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவிட்டு உள்ளார். #Tamilnews
    ×