search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது"

    • ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.
    • தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு ஒரு குவாட்டர், கோழி பிரியாணியுடன் ரூ.500 வரை வழங்கப்படுகிறது.

    பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினருக்கு இரவு நேரங்களில் மது விருந்து அளிக்கப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கர்னூல் அருகே உள்ள எமிங்கனூரில் பிரசாரம் செய்தார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்ட னர்.

    ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தின் ஒரு பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களை அழைத்து வந்த ஒவ்வொருவருக்கும் தலா ஒரு குவாட்டர் மது பாட்டில், கோழி பிரியாணி பொட்டலம் மற்றும் ரூ.300 முதல் 500 வரை பணம் வழங்க தொடங்கினர்.

    கூட்டத்தில் இதனை அவர்கள் பகிங்கரமாக வினியோகம் செய்து கொண்டிருந்தனர். இதனை வாங்கிய குடிமகன்கள் உற்சாகமடைந்தனர்.அவர்களில் சிலர் மது குடிக்க தொடங்கினர்.

    இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்
    • குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்

    சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்.

    இந்நிலையில் அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர். அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடத்தொடங்கினார். குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.

    இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

    • ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் விரைந்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், முஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புடானில் உள்ள நைத்துவா கிராமத்தில், மது அருந்துவதை தடுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட முனீஸ் சக்சேனா மதுவுக்கு அடிமையானவர். நேற்று இரவு முனீஸ் சக்சேனா குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.

    அவரது மனைவி ஷனோ (40), முனீஸ் மேலும் மது அருந்துவதை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ், தனது மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து, ஷனோ மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

    இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷனோவின் மாமியார் முன்னி தேவி, ஷனோவை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில், அவருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது.

    ஷனோ தீயில் எரிவதை கண்டு அவரது குழந்தைகள் கத்தி கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் தீயை அணைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஷவேனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அவரது மாமியார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினர்.

    • சம்பவத்தன்று அதிக அளவில் மது குடித்த நிலையில் தூங்க சென்றார்.
    • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை, நவ.19-

    மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். விஜயன் கொடுங்குளத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அதிக அளவில் மது குடித்த நிலையில் தூங்க சென்றார். பின்னர் காலையில் அவர் எழும்பவில்லை.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்தபோது விஜயன் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சிறிது நேரத்திற்கு பிறகு வார்டன் ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கிருஷ்ணகிரியில் இருந்து அழைத்து வரப்பட்ட இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு மது வாங்கி கொடுக்கப்பட்டதா? என்பது தெரியவரும்.

    சேலம்:

    ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசிங் (வயது 35). இவரை அரிசி கடத்தல் வழக்கு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து கடந்த 22-ந் தேதி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதற்கான ஆணையை எடுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகிரி கிளை சிறைக்கு சென்றார். அங்குள்ள சிறையில் குண்டர் தடுப்பு சட்ட கைதிகளை வைக்கக் கூடாது என்பதால் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி கிளை சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கிருஷ்ணசிங்கை அழைத்து வந்தனர்.

    அப்போது சேலம் சிறை வார்டன்கள் கிருஷ்ணசிங்கை சோதனை செய்தனர். அவர் மீது மது வாசனை வந்தது. இது பற்றி சிறை அதிகாரிகளிடம் வார்டன்கள் தெரிவித்தனர். பின்னர் சிறை மருத்துவர் அங்கு வந்து கிருஷ்ணசிங்கை பரிசோதனை செய்தபோது அவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து ரத்த பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். இதில் சிறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சிறிது நேரத்திற்கு பிறகு வார்டன் ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்று பார்த்தபோது கைதிக்கு 3 லிட்டர் தண்ணீரை வாங்கிக் கொடுத்ததும், மதுவாடையை போக்குவதற்காக வாயை சுத்தப்படுத்து வதற்கான ஸ்பிரே வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. இதுபற்றி வார்டன், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கைதிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ரத்த மாதிரியை எங்களிடம் தர வேண்டும். நாங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அதன் முடிவை பெற்று தருகிறோம் என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அதேபோல் சிறை அதிகாரிகளும் எங்களுக்கும் ஒரு ரத்த மாதிரி தாருங்கள். நாங்களும் பரிசோதனை செய்து கொள்கிறோம் என்றனர்.

    இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இரவு 11.30 மணியளவில் ரத்த மாதிரி சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கைதியிடம் குண்டர் தடுப்பு சட்டத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டரும், சிறை வார்டனும் ரத்த மாதிரியை ஆய்வகத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கான முடிவு நாளை கிடைத்த பிறகே கைதி மது அருந்தினரா? கிருஷ்ணகிரியில் இருந்து அழைத்து வரப்பட்ட இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு மது வாங்கி கொடுக்கப்பட்டதா? என்பது தெரியவரும்.

    இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், கைதியின் ரத்த மாதிரி அறிக்கை கிடைத்த பிறகு அதில் அவர் மது குடித்து இருந்தார் என தெரிவிக்கப்பட்டு இருந்தால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • டாஸ்மாக் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.
    • கைது செய்தவர்களிடமிருந்து 10 மது பாட்டில்கள், ரூ.560ஐ போலீசார் கைப்பற்றினர்

    முத்தூர்:

    காங்கயம் அருகே நெய்க்காரன்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காங்கயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காங்கயம் போலீசார் நேற்று காலை காங்கயம் மற்றும் நால்ரோடு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நெய்க்காரன் பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த சிவகங்கை மாவட்டம் , என்.புதூர் பகுதியை சேர்ந்த பொன்துரைபாண்டியன் (30) என்பவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்கள், ரூ.560ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாகேந்திரனிடம் 5 பாட்டில்களும், மேரியிடம் 18 பாட்டில்களும் மது பானம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • போலீசார் நாகேந்திரன் மற்றும் மேரி-யை கைது செய்து மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தக்கலை கடைவிளை பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் (வயது 58), பாகோடு ஏலாகரை பகுதியைச் சேர்ந்த மேரி (70) ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் பிடித்து சோதனை செய்த போது நாகேந்திரனிடம் 5 பாட்டில்களும், மேரியிடம் 18 பாட்டில்களும் மது பானம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் நாகேந்திரன் மற்றும் மேரி-யை கைது செய்து மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.

    • இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.
    • பொதுமக்கள் நடவடிக்கை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

    இரணியல், அக்.10-

    இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை வேளையில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை நடப்பதாக இரணியல் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.

    இரணியல், திங்கள்நகர், பேயன் குழி, மைலோடு, தலக்குளம், செட்டியார் மடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள் ரகசியமாக கண்காணிக்கபட்டது.

    இந்த நிலையில் இரணியல் சந்திப்பில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அடுத்து கோழி இறைச்சி விற்பனை செய்த கடையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 54) என்பவர் எந்த விதமான அரசு அனுமதியின்றி மது ஊற்றி கொடுப்பது தெரியவ ந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.அதுபோல திங்கள்நகர் நேசமணி பூங்கா எதிராக உள்ள பெட்டி கடையில் அரசு அனுமதி இன்றி மது ஊற்றி கொடுத்த எழிலரசி (56) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் சுகந்தி ஆகிய அதிகாரிகள் நடவடிக்கைக்கு வரவேற்பு அளித்த பொதுமக்கள் நடவடிக்கை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

    • மோட்டார் சைக்களில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • சோதனையில் அவரிடம் 16 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    இரணியல் :

    இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் இரணி யல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த னர். அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்களில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் 16 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து அரசு அனுமதி இன்றி கொண்டு வந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் நிஷாந்தை (வயது 24) கைது செய்தனர்.

    மேலும் அந்த வழியாக நடந்து வந்த மற்றொருவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ஒரு பையில் 10 மது பாட்டில்கள் அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்ய வைத்தி ருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் சதாசிவம்பிள்ளை (37) என்பவரை கைது செய்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்ற 20 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என சத்தியமங்கலம், அம்மா பேட்டை, ஈரோடு தெற்கு, கொடுமுடி, ஈரோடு டவுன், வெள்ளி திருப்பூர், சென்னி மலை, வெள்ளோடு, பெரு ந்துறை, அந்தியூர், அப்பா கூடல், சித்தோடு, சிறுவலூர், பவானி, காஞ்சி கோவில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஈரோடு மாவட்ட பகுதிகளில் அனும தியின்றி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சத்தியமங்கலம் நஞ்சப்ப கவுண்டர் புதுரை சேர்ந்த ராம் செட்டி மகன் பூஜா (வயது 38), பவானி சிங்கம்பேட்டையைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ஜம்பு (54), புதுக்கோட்டை மாவட்டம் அமராவதி பகுதியைச் சேர்ந்த முருகே சன் மகன் சரவணன் (32), விழுப்புரம் மாவட்டம் பொறையூர் சேர்ந்த அண்ணாமலை (46), புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த பழனி ச்சாமி மகன் விஜயகுமார் (32), அந்தியூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் (65), ராமநாதபுரம் மாவட்டம் கருங்குடியைச் சேர்ந்த திருவரசு மகன் ராமநாதன், பெருந்துறை வெள்ளோ ட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் செந்தில் என்ற கிருஷ்ணமூர்த்தி (48), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் நித்தியானந்தம் (32), சிவகங்கை மாவட்டம் மூலக்கரை முத்துவேல் (50), அதே மாவட்டத்தைச் சேர்ந்த திருவேங்கம் புதூர் தங்கவேல் மகன் ராஜீவ் காந்தி (34), அந்தியூர் புது மேட்டூர் சுப்பிரமணி மகன் கோபாலகிருஷ்ணன் (48), சத்தியமங்கலம் சிக்கர சம்பாளையம் ஆண்டிய ப்பன் மகன் ரவி (40), பவானி தளவாய்பேட்டை முருகேசன் மனைவி விஜய லட்சுமி (50), சித்தோடு அழகேசன் மகன் பொ ன்னன் (55), சூரியம்பாளையம் சி.எம்.நகர் செல்லத்துரை மகன் லோகநாதன் (39), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் சுந்தரம் மகன் பாண்டி, பவானி குமரேச சாமி கவுண்டர் மகன் மாதே ஸ்வரன் (53), பவானி சிகா மணி மகன் ரஜினி (47), சேலம் மாவட்டம் கரட்டு க்காட்டுவலசு மாணிக்கம் மகன் ஞானவேல் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 131 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அடிக்கடி ேராந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அடிக்கடி ேராந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பிரிவு பகுதியில் நேற்று ரோந்து பணி மேற்கொண்ட போது அங்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் ஜெகநாதன் (வயது 36) மற்றும் கருமத்தம்பட்டியை சேர்ந்த செந்தில் என்பவர் மகன் பிரகாஷ் ( 26) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல பல்லடம் அருகே உள்ள அறிகுறி நகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பல்லடம் சேடபாளையம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சித்திரக்கனி ( 43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 12 மதுபான பாட்டில்களும், பள்ளம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற கொடுவாய் நாகலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சிவாச்சலம் மகன் கார்த்திக் ( 32), என்பவரிடமிருந்து 9 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

    • மதுக்கடையால் பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • கடையை அகற்ற வேண்டும்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் ஊருக்கு அருகே டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தும் மதுப்பிரியர்கள் இந்த பகுதி வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×