கொட்டாரம் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த டிரைவர் பலி

திருமணம் ஆகாத விரக்தியில் பரிதாபம்கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

கொட்டாரம் அருகே உள்ள செல்வன்புதூரைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் ரமேஷ் (வயது 29). இவர் டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் வாழ்க்கையில் விரக்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மது போதையில் தனது வீட்டுக்கு வந்து உள்ளார்.இரவுஅவர் தனது வீட்டில்படுத்து தூங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்றுஅவர் வெகு நேரமாகியும் எழும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com