search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BSP"

    பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. #JanaSena #BSP #AndhraPradesh #Telangana #Mayawati #PawanKalyan
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இதுதொடர்பாக, உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இரு கட்சி தலைவர்களும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாயாவதி கூறுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், ஜன சேனா கட்சியும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தொகுதி ஒதுக்கீடுகள் இறுதி நிலையை அடைந்துள்ளன. மேலும் ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என குறிப்பிட்டார்.



    இதேபோல், ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் கூறுகையில், ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். நம் நாட்டிற்கு சகோதரி மாயாவதிஜி பிரதமராக பதவியேற்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள். அதை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். #JanaSena #BSP #AndhraPradesh #Telangana #Mayawati #PawanKalyan
    டெல்லியில் உள்ள ஆடம்பர ஹோட்டலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து அட்டகாசம் செய்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யின் மகனை ஒருநாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #AshishPandey #DelhiCourt #PoliceCustody
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு சென்ற ஆஷிஷ் பாண்டே என்பவர் துப்பாக்கியுடன் சென்று, அங்கு இருந்தவர்களை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இந்த வழக்கு குறித்து டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராகேஷ் பாண்டேவின்  மகன் ஆஷிஷ் பாண்டே என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் தலைமறைவாக இருந்த் ஆஷிஷ் பாண்டே டெல்லி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.



    இந்த வழக்கில் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கு அவசியம் இல்லை என ஆஷிஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் முழுமையாக விசாரித்த நீதிமன்றம், ஆஷிஷ் பாண்டேவை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. #AshishPandey #DelhiCourt #PoliceCustody
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என மாயாவதி தெரிவித்துள்ளார். #ChhattisgarhElections #Mayawati #AjitJogi
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சியினரும் சட்டசபை தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த பகுஜன் சமாஜ் கட்சி ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது என அக்கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சத்தீஸ்கரில் பகுஜன் சமாஜ் கட்சி 35 இடங்களிலும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி 35 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.



    இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் அஜித் ஜோகி முதல் மந்திரியாக பதவி வகிப்பார் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி தலைவர் அஜித் ஜோகி கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில்
    மாயாவதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். #ChhattisgarhElections #Mayawati #AjitJogi
    மத்தியப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையாலான கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.#Congress #BSP

    போபால்:

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடை பெறுகிறது. இதைதொடர்ந்து எதிர்க் கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. மத்திய பிரதேச சட்டசபையில் 230 தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 17-ந் தேதி போபால் மற்றும் விகிசாவுக்கு வருகை தருகிறார். அதற்கு முன் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. எனவே, காங்கிரஸ் மாநில தலைவர் கமல் நாத் மத்திய பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

    பின்ட், மொரீனா, ரேவா மற்றும் சாத்னா பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி விரும்புகிறது. ஏனெனில் அவை உத்தரபிரதேச மாநிலத்தின் எல்லையில் மிக நெருக்கத்தில் உள்ளது.

    ராகுல்காந்தி வருகையின் போது 70 முதல் 80 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதற்கான தீவிர முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.

    நீண்ட காலமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜனதா கட்சியை தோற்கடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஆன கூட்டணி கை கொடுக்கும் என நம்புகிறது.

    அதற்கு பதிலடி கொடுக்க பா.ஜனதாவும் தயாராகிறது. தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான பலமான கூட்டணி அமைக்க பா.ஜனதாவும் தீவிரமாக உள்ளது என அக்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சி தனது வாக்குகளை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்காது. மேலும் அக்கட்சியில் பெரிய தலைவர்கள் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

    இதற்கிடையே, கடந்த சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 6.42 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 44 சதவீத ஓட்டுகளும் பெற்றுள்ளன. பா.ஜனதாவுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தன.

    மத்திய பிரதேசத்தில் மொத்தம் 81 தனி தொகுதிகள் உள்ளன. அவற்றில் தற்போது பா.ஜனதா வசம் 58 தொகுதிகள் உள்ளன. காங்கிரசிடம் 19 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4 தொகுதிகளும் உள்ளன.

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று கட்சிகளும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கைகோர்க்கின்றன. #2019elections #UttarPradeshAntiBJP
    லக்னோ:

    நடப்பு பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடையும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஆளும் பா.ஜ.க.வை இந்த தேர்தலில் எப்படியும் வீழ்த்தியே தீர வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்துடன் உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தேர்தல் கூட்டணிக்கான காய் நகர்த்தல்களை தொடங்கி விட்டது.

    மாநிலவாரியாக பலமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள ராகுல் காந்தி தீர்மானித்துள்ளார்.

    இதில் முதல்கட்டமாக நாட்டின் மிகபெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில்  காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்  ஆகிய மூன்று கட்சிகள் கைகோர்க்கும் மெகா கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் இன்று குறிப்பிட்டுள்ளன.

    எனினும், சித்தாந்த வேற்றுமை காரணமாக சிவசேனா கட்சியுடன் மட்டும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்னும் முடிவில் காங்கிரஸ் மேலிடம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

    பிரதமர் பதவி யாருக்கு? என்பதை தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்னும் சமரச திட்டத்தின்படி நாட்டின் பிற மாநிலங்களிலும் பா.ஜ.க. மீது அதிருப்தியில் இருக்கும் வலுவான எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. 

    இதன் அடிப்படையில், விரைவில் சட்டசபை தேர்தல்களை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் மந்திரி வேட்பாளர்கள் யார்? என்பதை முன்கூட்டியே அறிவிக்க மாட்டோம் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. #2019elections #UttarPradeshAntiBJP #UttarPradeshGrandAlliance 
    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பூர்வீகம் குறித்து கிண்டல் செய்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத்தலைவரை பதவிநீக்கம் செய்து மாயாவதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். #Mayawati
    லக்னோ:

    பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத்தலைவராக சமீபத்தில் ஜெய் பிரகாஷ் சிங் நியமிக்கப்பட்டார். நேற்று கட்சி உறுப்பினர்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜெய் பிரகாஷ் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பதால் ஒருபோதும் ராகுல்காந்தியால் இந்தியாவில் வெற்றி பெற முடியாது என சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

    இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, ஜெய் பிரகாஷ் சிங்கை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கட்சி தலைவரின் பூர்வீகம் குறித்து அவதூறாக பேசியது பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், அதனால், அவரை தேசிய துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், ஜெய் பிரகாஷ் சிங்கை தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Mayawati
    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக மாயாவதி கட்சியுடன் கூட்டணியைத் தொடரவும், சில தொகுதிகளை விட்டுக்கொடுக்கவும் சமாஜ்வாடி கட்சி முன்வந்துள்ளது. #Akhilesh #UPAlliance
    ஆக்ரா:

    உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு மூன்றாவது அணி அமைக்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இது புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. உ.பி. இடைத்தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டு சேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்தியது.

    இதேபோல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. இதற்காக சில தொகுதிகளை பகுஜன் சமாஜ் கட்சிக்கு விட்டுக்கொடுக்கவும் சமாஜ்வாடி கட்சி முன்வந்துள்ளது.

    இதுபற்றி சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும். பா.ஜ.க.வின் தோல்வியை உறுதி செய்வதற்காக நாங்கள் 2 முதல் 4 தொகுதிகள் வரை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தால், அதனையும் செய்வோம். இந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம்.

    சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்த எங்கள் மெகா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக நடந்த 4 இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. முக்கிய தொகுதியான கைரானா மக்களவை தொகுதி, நூபூர் சட்டமன்றத் தொகுதியை சமீபத்தில் இழந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    கூடுதல் இடங்கள் கொடுத்தால் மட்டுமே பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று மாயாவதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Akhilesh #UPAlliance
    முலாயம் சிங், அகிலேஷ் யாதவை தொடர்ந்து உ.பி. முன்னாள் முதல் மந்திரி மாயாவதி தான் வசித்து வந்த அரசு பங்களாவை விட்டு இன்று மாலை வெளியேறினார். #Mayawati #residence
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் கடந்த சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை கடந்த 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதனை அடுத்து, முன்னாள் முதல்வர்கள் 15 நாட்களில் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.

    பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மற்றொரு வீடு கிடைப்பது கடினம் என்பதால் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோர் மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், மாநில அரசு அதற்கு பதிலளிக்காத நிலையில், இன்று இருவரும் இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

    அரசு பதவிகளில் இல்லாதவர்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளை உடனடியாக காலி செய்தாக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்தது.

    இதையடுத்து, அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தங்களது அரசு வீடுகளை இன்று காலை காலி செய்தனர். மிக முக்கியமான பிரமுகர்கள் (VVIP) தங்கும் அரசு விருந்தினர் விடுதியில் அவர்கள் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

    இதைதொடர்ந்து, முன்னாள் முதல் மந்திரி மாயாவதியும் 13-ம் எண் கொண்ட மால் அவென்யூ அரசு பங்களாவை விட்டு இன்று மாலை வெளியேறினார். அந்த வீட்டை மறைந்த தலைவர் கன்சிராமின் நினைவு இல்லமாக ஆக்கிவிட்டதாக முன்னர் குறிப்பிட்டிருந்த மாயாவதி, அங்கிருந்து வெளியேறியதற்கான கடிதத்தை நினைவு இல்ல பொறுப்பாளரிடம் அளித்தார். அந்த வீட்டை பாதுகாக்கும் பொறுப்பு இனி மாநில அரசை சேர்ந்தது என தெரிவித்துள்ளார். #Mayawati #residence
    ×