என் மலர்

  செய்திகள்

  மத்தியப்பிரதேச சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் கூட்டணியில் மாயாவதி கட்சிக்கு 25 தொகுதி
  X

  மத்தியப்பிரதேச சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் கூட்டணியில் மாயாவதி கட்சிக்கு 25 தொகுதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தியப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையாலான கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.#Congress #BSP

  போபால்:

  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான சட்ட சபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடை பெறுகிறது. இதைதொடர்ந்து எதிர்க் கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

  மத்திய பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. மத்திய பிரதேச சட்டசபையில் 230 தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 17-ந் தேதி போபால் மற்றும் விகிசாவுக்கு வருகை தருகிறார். அதற்கு முன் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. எனவே, காங்கிரஸ் மாநில தலைவர் கமல் நாத் மத்திய பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

  பின்ட், மொரீனா, ரேவா மற்றும் சாத்னா பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி விரும்புகிறது. ஏனெனில் அவை உத்தரபிரதேச மாநிலத்தின் எல்லையில் மிக நெருக்கத்தில் உள்ளது.

  ராகுல்காந்தி வருகையின் போது 70 முதல் 80 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அதற்கான தீவிர முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.

  நீண்ட காலமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜனதா கட்சியை தோற்கடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஆன கூட்டணி கை கொடுக்கும் என நம்புகிறது.

  அதற்கு பதிலடி கொடுக்க பா.ஜனதாவும் தயாராகிறது. தேர்தலில் காங்கிரசுக்கு எதிரான பலமான கூட்டணி அமைக்க பா.ஜனதாவும் தீவிரமாக உள்ளது என அக்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

  பகுஜன் சமாஜ் கட்சி தனது வாக்குகளை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்காது. மேலும் அக்கட்சியில் பெரிய தலைவர்கள் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

  இதற்கிடையே, கடந்த சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 6.42 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 44 சதவீத ஓட்டுகளும் பெற்றுள்ளன. பா.ஜனதாவுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தன.

  மத்திய பிரதேசத்தில் மொத்தம் 81 தனி தொகுதிகள் உள்ளன. அவற்றில் தற்போது பா.ஜனதா வசம் 58 தொகுதிகள் உள்ளன. காங்கிரசிடம் 19 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4 தொகுதிகளும் உள்ளன.

  Next Story
  ×