என் மலர்
செய்திகள்

ஆடம்பர ஹோட்டலில் துப்பாக்கியுடன் நுழைந்து முன்னாள் எம்.பி. மகன் அட்டகாசம் - போலீஸ் காவலில் வைக்க உத்தரவு
டெல்லியில் உள்ள ஆடம்பர ஹோட்டலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து அட்டகாசம் செய்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யின் மகனை ஒருநாள் போலீஸ் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #AshishPandey #DelhiCourt #PoliceCustody
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு சென்ற ஆஷிஷ் பாண்டே என்பவர் துப்பாக்கியுடன் சென்று, அங்கு இருந்தவர்களை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து இந்த வழக்கு குறித்து டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் அவரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கு அவசியம் இல்லை என ஆஷிஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் முழுமையாக விசாரித்த நீதிமன்றம், ஆஷிஷ் பாண்டேவை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. #AshishPandey #DelhiCourt #PoliceCustody

இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராகேஷ் பாண்டேவின் மகன் ஆஷிஷ் பாண்டே என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால் தலைமறைவாக இருந்த் ஆஷிஷ் பாண்டே டெல்லி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

Next Story