என் மலர்

  நீங்கள் தேடியது "AjitJogi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என மாயாவதி தெரிவித்துள்ளார். #ChhattisgarhElections #Mayawati #AjitJogi
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ராமன் சிங் பதவி வகித்து வருகிறார்.

  சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சியினரும் சட்டசபை தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த பகுஜன் சமாஜ் கட்சி ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது என அக்கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சத்தீஸ்கரில் பகுஜன் சமாஜ் கட்சி 35 இடங்களிலும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி 35 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.  இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் அஜித் ஜோகி முதல் மந்திரியாக பதவி வகிப்பார் என தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி தலைவர் அஜித் ஜோகி கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில்
  மாயாவதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார். #ChhattisgarhElections #Mayawati #AjitJogi
  ×