search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday celebration"

    • ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
    • பாளை காது கேளாதோர் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்டம் சார்பில் மாநகர செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் 50 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

    மேலும் மாநகரில் பல்வேறு பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு, பாளை காது கேளாதோர் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநகர இளைஞரணி தலைவர் மணிமாறன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, மேலப்பாளையம் பகுதி செயலாளர் மாரிமுத்து, பகுதி இணைச் செயலாளர் முருகேஷ் பாண்டியன், பாளை பகுதி இளைஞர் அணி செயலாளர் கே .எஸ். ராஜா, தொண்டரணி பொறுப்பாளர் மாரியப்பன், மேலப்பாளையம் பகுதி இளைஞரணி தலைவர் நாதன், இளைஞர் அணி செயலாளர் செந்தில் மல்லர், மாணவர் அணி பொறுப்பாளர் முத்து பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பைகள், நோட் புத்தகம் வழங்கப்பட்டது.
    • குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    ஊட்டி,

    தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா மஞ்சூர் பஜாரில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பில்லன், கீழ்குந்தா செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பைகள், நோட் புத்தகம், பேனாக்கள், முதியோர்களுக்கு இலவச வேட்டி, சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மற்றும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், செயல் வீரர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டர்.

    • மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே., அப்துல்கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது
    • கல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே., அப்துல்கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன் , பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான், மேலாளர் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் அப்துல்கலாம் கல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.  

    • உழவாலயத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
    • மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பல்லடம் அருகே உள்ள கோடங்கி பாளையத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகமான உழவாலயத்தில் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கட்சித் தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் விழா நகர,வட்டார, காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. பல்லடம் பனப்பாளையம் பகுதியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி,நகர செயல் தலைவர் மணிராஜ், நகரப் பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் பகுதியில், பல்லடம் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவில் வட்டாரத் தலைவர் புண்ணியமூர்த்தி காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.இதேபோல பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் பல்லடம் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்ட ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவில் வட்டாரத் தலைவர் கணேசன் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    • உசிலம்பட்டி: காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைதொடர்ந்து உசிலம்பட்டி-தேனி ரோட்டில் நாடார் உறவின்முறை சார்பாக நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு காமராஜரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் பூமாராஜா, மாநில பேரவை மாநில துணைச்செயலாளர் துரை தனராஜன், வழக்கறிஞர் பிரிவு லட்சுமணன், கோ.ராமநாதன், அடைக்கலம், அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் டோனாவூர் ஜொஸ்டின் திரவியராஜ் தலைமையில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • மாவட்ட வழக்கறிஞரணி சார்பில் ஊச்சிகுளம் சாரோன் சிறுவர் இல்லத்தில் வைத்து காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    ஏர்வாடி:

    தொண்டர்களால் புரட்சிதிலகம் என அழைக்கப்பட்டு வரும் சரத்குமார் பிறந்த நாள்விழா நெல்லை புறநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது.

    நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் டோனாவூர் ஜொஸ்டின் திரவியராஜ் தலைமையில் பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மாவட்ட வழக்கறிஞரணி சார்பில் ஊச்சிகுளம் சாரோன் சிறுவர் இல்லத்தில் வைத்து காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    கலுங்கடி, டோனாவூர், கோதைசேரி, நேதாஜிநகர், கல்லடிசிதம்பரபுரம், தோப்பூர், சிதம்பரபுரம், துவரைகுளம் போன்ற பகுதிகளில் கட்சியின் கொள்கை பாடல்கள் இசைக்கப்பட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

    ஒன்றிய பொருளாளர் ஜெயசீலன், இளைஞரணி செயலாளர் மிக்கேல்துரை, இளைஞரணி துணை செயலாளர் டேனியேல் தலைமையில் களக்காடு கல்லடிசிதம்பரபுரம் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மாவட்ட தலைவர் ஜெபஸ்டின் திரவியராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் சாமுவேல், மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் வக்கீல் வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பெருமாள்குளம் இஸ்ரவேல் ஞானதாஸ், மாவடி துரைபொன்ராஜ், அருள்சேகர் ரவி, கோதைசேரி அரசு, விக்கி, கலுங்கடி தாஸ், ஆல்வின், முத்து கல்லடி ஏபி கேப்டன், மும்பை ஆனந்தமுத்து, கிருஷ்ணன், அருள், அருள்சரவணன் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கோபி அருகே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியபோது வாய்க்காலில் தவறி விழுந்து 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் பவானிசாகர் அணையில் இருந்து 2-ம் போகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதனால் வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி சென்று கொண்டிருக்கிறது.

    தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருப்பதால் ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் கோவை, சேலம், நாமக்கல் போன்ற பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கோபி பகுதிகளுக்கு சுற்றுலா வந்து கொடிவேரி அணை மற்றும் வாய்க்கால்களில் குளித்துக்கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த பகவதி ராஜா (வயது 21) மற்றும் முத்துக்குமரேசன், ஜவகர் (21), ஹரிபிரசாத் (21), சங்கீதா (21), பவித்ரா, கோபி காசிபாளையம் பகுதியை சேர்ந்த மைதிலி (2) ஆகிய 7 பேர் கொண்ட நண்பர்கள் சுற்றுலா செல்ல ஒன்று சேர்ந்தனர்.

    மேலும் வாலிபர் ஜவகருக்கு அன்று பிறந்த நாளையொட்டி பிறந்த நாளை இயற்கையோடு கொண்டாடி மகிழ கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் ஓடும் தடப்பள்ளி வாய்க்காலுக்கு வந்தனர்.

    வாய்க்கால் கரையோரம் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருந்தனர்.

    அப்போது பகவதி ராஜா, முத்துக்குமரேசன் ஆகியோர் எதிர்பாராத விதமாக வாய்க்காலுக்குள் தவறிவிழுந்து விட்டனர். கரையில் இருந்த மற்ற நண்பர்கள் வாய்க்காலில் குதித்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் எவ்வளவோ போராடியும் காப்பாற்ற முடியவில்லை. பகவதிராஜா, முத்துக்குமரேசன் ஆகியோர் வாய்க்கால் தண்ணீர் இழுத்து சென்றது. இதில் அவர்கள் பரிதாபமாக இறந்தனர்.

    அவர்களை காப்பாற்ற முயன்றபோது வாலிபர் ஹரிபிரசாத்தும் சிக்கினார். மற்ற நண்பர்கள் அவரை காப்பாற்றி விட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்தும் கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாய்க்காலில் மூழ்கி பலியான பகவதிராஜா, முத்துக்குமரேசன் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.

    அவர்களின் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இன்று மதியம் அவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
    பிறந்த நாளில் தன்னை நேரில் காண யாரும் வரவேண்டாம் என தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். #K.Anbalagan #DMK #Birthday
    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை வருத்திக்கொண்டு பாடுபட்ட தலைவர் கருணாநிதி, உடல் நலிவுற்று, அண்ணா நினைவிடத்துக்கு அருகில், மீளாத் துயிலில் ஓய்வெடுக்கச் சென்ற நிலையிலும், புயலின் கோரத் தாக்கத்தால், மக்களும், மரங்களும் பெரும் அழிவைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்னலுறும் நிலையில், வருகிற 19-ந்தேதி எனது 97-வது பிறந்தநாள் விழாவினைத் தவிர்த்திட விழைகிறேன்.



    மேலும், என் உடல்நிலை கருதி, அந்த நாளில் கட்சித் தொண்டர்கள், உறவினர்கள், என்னை நேரில் காண்பதை முழுமையாகத் தவிர்க்க அன்புடன் வேண்டுகிறேன். மக்கள் நலம் காக்கும் சமுதாயப் பணிகளையும், இயக்கப் பணிகளையும் தொடர்ந்து ஆற்றிட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அமெரிக்கா டெலவர் மாகாணத்தில் உள்ள டெலவர் தமிழ் நண்பர்கள் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
    வாஷிங்டன்:

    அமெரிக்கா டெலவர் மாகாணத்தில் உள்ள டெலவர் தமிழ் நண்பர்கள் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் முதன்முதலாக நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில், அவரை மையப்படுத்தி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, வினாடி வினா போட்டி, பெரியோர்களுக்கான பேச்சுப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

    விழாவுக்கு வந்தவர்களை தங்கம் வையாபுரி வரவேற்றார். உலகத் தமிழ் கழகத்தின் கிளைத் தலைவர் கோ.அரங்கநாதன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வாஷிங்டனில் இயங்கி வரும் எனர்ஜில் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் மகேந்திரன் பெரியசாமி கலந்துகொண்டு பேசினார்.

    விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியாக, ஒருங்கிணைப்பாளர் துரைக்கண்ணன் நன்றி கூறினார். 
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மாவட்டம் முழுவதும் கட்சியினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் வக்கீல் விசாகன் ராஜா ஏற்பாட்டில் எழும்பூர், சேப்பாக்கம், துறைமுகம் பகுதிகளில் 68 இடங்களில் கட்சி கொடியேற்றப்பட்டு 680 மாணவர்களுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

    680 முதியோருக்கு வேட்டி-சேலை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எழும்பூர் பகுதி செயலாளர் பூங்கா ரமேஷ், சேப்பாக்கம் பகுதி செயலாளர் செந்தில் நாதன், துறைமுகம் பகுதி செயலாளர் ஸ்பாட் ராஜா உள்பட மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மத்திய சென்னை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சீருடை மற்றும் ஏழைகள், முதியோருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

    கோவில்களில் சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் கோவிந்தன், வில்லிவாக்கம் பகுதி செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான பிரபு, அண்ணாநகர் பகுதி நிர்வாகிகள் முத்துகுமார், தனசேகர், கோபிநாத், ராஜம்பாள் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வடசென்னை மாவட்ட செயலாளர் ப.மதிவாணன் ஏற்பாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு சீருடை, கல்வி உதவி தொகை, முதியோர், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சி.எம்.ரவிச்சந்திரன், திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் அரி, பெரம்பூர் பகுதி செயலாளர் எம்.வேல்முருகன், கொளத்தூர் பகுதி செயலாளர் அலெக்சாண்டர் உள்பட மாவட்ட, பகுதி, வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சி.ஆனந்தன் ஏற்பாட்டில் வடபழனி முருகன் கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் ஆதரவற்ற முதியோருக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு சீருடை, கல்வி, உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சைதை அகமது, கூத்த பிரான், புண்ணியமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் ரத்தினம், ராஜ்குமார், மருவை சுப்பு, பிரஸ் பாஸ்கர், நித்யா பாரதி மற்றும் மாவட்ட, வட்ட இணை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி பி.பிரபாகரன் ஏற்பாட்டில் முதியோர் இல்லங்களுக்கு சென்று காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆதரவற்ற பெண்களுக்கு தையல் மிஷின், நிதி உதவி, சுய உதவி குழு பெண்களுக்கு நிதி, மாணவ-மாணவிகளுக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் நாராயணன், விஸ்வநாதன், முருகேசன், சுப்பிரமணி, பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், நாராயணன், செல்வ ஜோதி லிங்கம், சூரியா, ரமேஷ், கலா, செல்வம், முருகன் மற்றும் மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    சென்னை மேற்கு ஜாபர்கான்பேட்டையில் பிறந்தநாள் விழாவின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை மேற்கு ஜாபர்கான் பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (24). மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 25-ந்தேதி இவரது பிறந்த நாளையொட்டி இரவு நண்பர்கள் கேக் வாங்கி வீட்டுக்கு வந்தனர்.

    வீட்டுக்கு வெளியே நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது சதீஷிடம் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்ட கூறினர். அவரும் கத்தியால் கேக்கை வெட்டி நண்பர்களுக்கு கொடுத்தார். முகத்தில் கேக்கை பூசி கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோ காட்சியை பார்த்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக வாலிபர் சதீசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பட்டாக்கத்தியால் நடுரோட்டில் கேக் வெட்டி பொது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “வீடியோவில் சதீசின் நடவடிக்கை பயமுறுத்தும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் இருந்தது.

    அவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மற்ற இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தேவையில்லாத பிரச்சனை உருவாகலாம் என்றனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு அருகே ரவுடி பினு தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் கேக்கை அரிவாளால் வெட்டி கொண்டாடினார். இதையறிந்த போலீசார் அங்கு சென்று ரவுடிகளை மடக்கி பிடித்தனர்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×