search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காந்திநகர்"

    • நிழற்குடையை மறைத்து தனியார் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
    • மர்ம ஆசாமிகள் நிழற்குடையை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அதில் பொரு த்தப்பட்ட இருக்கைகள் சேதம் அடைந்து வருவதுடன் நிழற்குடையை சுற்றிலும் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில்;-

    பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பொது மக்களை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நிழற்குடை போதிய பராமரிப்பின்மை காரணமாக சேதம் அடைந்து வருகிறது. மேலும் நிழற்குடையைச் சுற்றிலும் புதர்மண்டி உள்ளதுடன் இருக்கைகளும் சேதம் அடைந்து உள்ளது. இந்த சூழலில் நிழற்குடையை மறைத்து தனியார் சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதை சாதகமாக கொண்டு மர்ம ஆசாமிகள் நிழற்குடையை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியவாறு காத்திருக்க வேண்டி உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் ஏற்படும் சூழலும் நிலவு கிறது.

    பராமரிப்பு இல்லாமல் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்தும் அதன் முன்பாக வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்று வதற்கும் அதிகாரிகள் முன் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 27 கடைகள் அதிரடியாக இடிக்கப்பட்டது.
    • கடையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் மற்றும் சாக்கடை கால்வாயை மூடி கட்டப்பட்டுள்ள கடைகள் ஆகியவற்றை அகற்ற மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

    அதன் அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இன்று காலை திருப்பூர் காந்தி நகர் 80 அடி ரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை உதவி கமிஷனர் சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் ஹரி மற்றும் அதிகாரிகள் மூலம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

    அந்தப் பகுதியில் சாக்கடை கால்வாய் மற்றும் ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 27 கடைகள் அதிரடியாக இடிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சிலர் கடையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    • மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே., அப்துல்கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது
    • கல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே., அப்துல்கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன் , பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான், மேலாளர் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் அப்துல்கலாம் கல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.  

    • மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தங்களது அன்பினை வாழ்த்துக்கள் மூலம் வெளிப்படுத்தினர்.
    • இசை, நடனம், நாடகம், பேச்சு போன்ற பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திக்கேயன் அருள்ேஜாதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திக்கேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தங்களது அன்பினை வாழ்த்துக்கள் மூலமும், இசை, நடனம், நாடகம், பேச்சு போன்ற பல்சுவை நிகழ்ச்சி மூலமும் வெளிப்படுத்தினர். முன்னதாக பள்ளியின் மாணவர் மன்ற தலைவி கீர்த்தனா வரவேற்றார். முடிவில் பள்ளியின் மாணவர் மன்ற துணை தலைவி ரிதுமிகா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர். 

    • பெரம்பலூர் மாவட்டம் சார்பில் தேசபக்தன் விருது வழங்கப்பட்டது.
    • நமது தாய்நாட்டின் பற்றுணர்வை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கீதப்பாடலை தமிழில் பாடிய மாணவன்.

     திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவன் ரெ.ஜெயோஷ் கிேஷார்.

    இவர் நமது தாய்நாட்டின் பற்றுணர்வை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கீதப்பாடலை தமிழில் பாடியதால் அவற்றினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்ச்சங்க இலக்கிய ஆய்வு நடுவம் பெரம்பலூர் மாவட்டம் சார்பில் தேசபக்தன் விருது வழங்கப்பட்டது.

    இதையடுத்து மாணவன் ஜெயோஷ் கிஷோரை ஏ.வி.பி.டிரஸ்ட் பப்ளிக்சீனியர் செகண்டரி பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பள்ளி முதல்வர் ஜி.பிரமோதினி, பள்ளி ஒருங்கிணைப்பாளர் வி.மோகனா மற்றும் ஆசிரிய,ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • சர்வதேச புலிகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினர் புலிகள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் சர்வதேச புலிகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திக்கேயன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் ரவீந்திரன் காமாட்சி கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் பிரமோதினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினருக்கு பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா மரியாதை செலுத்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் புலிகள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார். 

    • மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவு நாள், உலக இயற்கை பாதுகாப்பு தின நிகழ்ச்சி பள்ளியின் நேச்சர் நியூட்டரர்ஸ் கிளப் சார்பில் நடைபெற்றது.
    • மூலிகை செடிகளின் பயன்களையும், அதனை பாதுகாக்கும் முறைகளையும் விளக்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவு நாள், உலக இயற்கை பாதுகாப்பு தின நிகழ்ச்சி பள்ளியின் நேச்சர் நியூட்டரர்ஸ் கிளப் சார்பில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், ஒருங்கிணைப்பாளர் லதா கார்த்திக்கேயன் கலந்து கொண்டனர். கிளப் ஆசிரியர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் மூலிகை செடிகளை பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் சக்தி மிருதுளா ஆகியோர் வழங்கி மூலிகை செடிகளின் பயன்களையும், அதனை பாதுகாக்கும் முறைகளையும் விளக்கினர்.  

    • குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர்.
    • மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வடைய செய்து வகுப்புகளை ஆரம்பித்தனர்.

    திருப்பூர்,

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டது. குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர். ஆசிரியர்கள் வரவேற்று ஆடல் பாடல்களுடன் மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வடைய செய்து வகுப்புகளை ஆரம்பித்தனர். பள்ளிதாளாளர் கார்த்திக்கேயன், பொருளாளர் லதா கார்த்திக்கேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் சக்தி மிருதுளா ஆகியோர் மாணவர்களை வரவேற்று உற்சாகப்படுத்தினர். 

    ×