காந்திநகர் ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தங்களது அன்பினை வாழ்த்துக்கள் மூலம் வெளிப்படுத்தினர். இசை, நடனம், நாடகம், பேச்சு போன்ற பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆசிரியர்  தினவிழா நடைபெற்ற காட்சி.
ஆசிரியர் தினவிழா நடைபெற்ற காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திக்கேயன் அருள்ேஜாதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திக்கேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தங்களது அன்பினை வாழ்த்துக்கள் மூலமும், இசை, நடனம், நாடகம், பேச்சு போன்ற பல்சுவை நிகழ்ச்சி மூலமும் வெளிப்படுத்தினர். முன்னதாக பள்ளியின் மாணவர் மன்ற தலைவி கீர்த்தனா வரவேற்றார். முடிவில் பள்ளியின் மாணவர் மன்ற துணை தலைவி ரிதுமிகா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com