காந்திநகர் ஏ.வி.பி., பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே., அப்துல்கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டதுகல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அப்துல்கலாம்  உருவப்படத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்திய காட்சி.
அப்துல்கலாம் உருவப்படத்திற்கு பள்ளி ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்திய காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே., அப்துல்கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன் , பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான், மேலாளர் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் அப்துல்கலாம் கல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com