பல்லடத்தில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நடைபெற்ற காட்சி.
ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா நடைபெற்ற காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடத்தில், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் விழா நகர,வட்டார, காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. பல்லடம் பனப்பாளையம் பகுதியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி,நகர செயல் தலைவர் மணிராஜ், நகரப் பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் பகுதியில், பல்லடம் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவில் வட்டாரத் தலைவர் புண்ணியமூர்த்தி காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.இதேபோல பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் பல்லடம் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்ட ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவில் வட்டாரத் தலைவர் கணேசன் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com