search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "க.அன்பழகன்"

    அன்புமணி ராதாஸ் - முல்லை வேந்தன் சந்திப்பு நிகழ்ந்த நிலையில், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். #MullaiVenthan #DMK
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

    தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் செந்தில்குமாரும், அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாசும், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் களம் காண்கின்றனர். தருமபுரி தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அன்புமணி, திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனைச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.



    கடந்த 2014 தேர்தலுக்கு பிறகு திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட முல்லை வேந்தன் அதிருப்தி காரணமாக தேமுதிக-வில் இணைந்தார். பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் திமுக-வுக்கு திரும்பினார். கோவை மக்களவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட இவர், சமீப காலமாக மீண்டும் அதிருப்தியில் இருந்துள்ளார். இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் - முல்லை வேந்தன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். #MullaiVenthan #DMK

    பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #DMKApplications
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேசமயம், போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் அதிமுக சார்பில் 40 தொகுதிகளில் இருந்தும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதேபோல் தேமுதிகவும் 40 தொகுதிகளில் இருந்தும் விருப்ப மனுக்களை வழங்கலாம் என கூறியுள்ளது. நாளை முதல் மார்ச் 6-ம் தேதி வரை விருப்ப மனுக்களை கட்சி தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்காக 25-ம் தேதி விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது. 

    இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


    மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 25-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அண்ணா அறிவாலயத்தில் 1000 ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. 

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கு, விண்ணப்ப கட்டணம் செலுத்தியிருந்தால், அது திருப்பி கொடுக்கப்படும்.

    இதேபோல் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரும் மார்ச் 1-ம் தேதி முதல் 7-ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LSPolls #DMKApplications
    பிறந்த நாளில் தன்னை நேரில் காண யாரும் வரவேண்டாம் என தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். #K.Anbalagan #DMK #Birthday
    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்களின் மேம்பாட்டுக்காக, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை வருத்திக்கொண்டு பாடுபட்ட தலைவர் கருணாநிதி, உடல் நலிவுற்று, அண்ணா நினைவிடத்துக்கு அருகில், மீளாத் துயிலில் ஓய்வெடுக்கச் சென்ற நிலையிலும், புயலின் கோரத் தாக்கத்தால், மக்களும், மரங்களும் பெரும் அழிவைச் சந்தித்து, பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்னலுறும் நிலையில், வருகிற 19-ந்தேதி எனது 97-வது பிறந்தநாள் விழாவினைத் தவிர்த்திட விழைகிறேன்.



    மேலும், என் உடல்நிலை கருதி, அந்த நாளில் கட்சித் தொண்டர்கள், உறவினர்கள், என்னை நேரில் காண்பதை முழுமையாகத் தவிர்க்க அன்புடன் வேண்டுகிறேன். மக்கள் நலம் காக்கும் சமுதாயப் பணிகளையும், இயக்கப் பணிகளையும் தொடர்ந்து ஆற்றிட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். #TKSElangovan #DMK
    சென்னை :

    திமுக செய்தித்தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    திமுக சார்பாக ஊடக நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் என க.பொன்முடி, ஆர்.எஸ் பாரதி, செல்வகணபதி, ஆ.ராசா, ஜெ. அன்பழகன், பழ.கருப்பையா மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட 7 பேர் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் தலைமை கழகம் இன்று வெளியிட்டது.

    இந்நிலையில், திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் பொருப்பில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அமைப்பு செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் வேறு ஒருவர் உடனடியாக நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #TKSElangovan #DMK
    ×