search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்துல்கலாம்"

    • அப்துல்கலாம் வேடமணிந்து வந்த பிளஸ்-1 மாணவன் தீபக் லியோ ரோச் தேசியகொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
    • மாணவர்களுக்கு முதல் 3 பரிசுகள் பள்ளி தலைவரால் வழங்கப்பட்டது.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் செயல்பட்டு வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்க லாம் பிறந்த நாள் கொண்டா டப்பட்டது. பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முது நிலை முதல்வர் முன்னிலை வகித்தார்.சிறுவயதில் தமிழ் வழி கல்வி பயின்று விண்வெளி துறையில் சாதனைகள் படைத்த அப்து ல்கலாமின் பொன்மொழிகள், கவிதை, சிறப்புரை துணுக்கு முதலான பல நிகழ்ச்சிகள் காலை கூடுகையில் நடை பெற்றன. அப்துல்கலாம் வேடமணிந்து வந்த பிளஸ்-1 மாணவன் தீபக் லியோ ரோச் தேசியகொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். அப்துல்கலாம் போல் வேடமணிந்து வந்த மாண வர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு முதல் 3 பரிசுகள் பள்ளி தலைவரால் வழங்கப்பட்டது.

    இந்தியாவின் ஏவுகணை யின் நாயகன் அப்துல்க லாமின் படைப்புகளை நினைவு கூறும் வகையில் மழலையர்களின் படைப்பு களான ராக்கெட் கண்காட்சி மழலையர்களால் விளக்க வுரையுடன் நடத்தப்பட்டது. மேலும் மழலையர்களால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • நரிக்குடியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பிரவீன் சுந்தர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் சாலை இலுப்பைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 93-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திலகவதி, உதவி ஆசிரியை செல்வி மேரி தலைமை தாங்கினர். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார்.

    நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பிரவீன் சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    அங்கு வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள், எழுது பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் நம்பிராஜன், பிரவீன் சுந்தர் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்யை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனைதொடர்ந்து, ராமேசுவரம் பேக்கரும்பு அப்துல்கலாம் நினைவிடத் தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொள்வதற்காக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் ராமேசுவரம் வருகை தந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றனர். இதனைதொடர்ந்து, மாரத்தான் போட்டியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முதல் போட்டி 21 கிலோ மீட்டர், இரண்டாவது போட்டி 5 கிலோ மீட்டர், மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி 3 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெ.தங்கதுரை, உதவி கலெக்டர் சிவானந்தம், கலாம் பேரன் சேக்சலீம், நகர்மன்ற தலைவர் நாசர் கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா மற்றும் உள்ளாட்சி பிரநிதிகள் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

    • அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • மரக்கன்றுகள் நடவு செய்யவும், சுற்றுச்சூழலை பாது காக்கவும் உறுதிமொழி எடுத்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அன்னை நர்சிங் கல்லூரி சார்பாக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி தலைமை தாங்கி அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்.

    உடன் கல்லூரி மாண விகள் வெள்ளை சீருடைய அணிந்து மவுன அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்தனர். மேலும் கல்லூரி மாணவிகள் தங் களது வீடுகளுக்கு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடவு செய்ய வும், சுற்றுச்சூழலை பாது காக்கவும் உறுதிமொழி எடுத்தனர்.

    • 1,221 கியூப்களை பயன்படுத்தி அப்துல் கலாம் உருவம் வடிவமைக்கப்பட்டது.
    • மணி–மண்டபத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனை–வரும் பார்த்து வியந்து மாணவனை பாராட்டி சென்றனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் அருகே தங் கச்சிமடம் ஊராட்சி பகு–திக்கு உட்பட்ட பேய்க்க–ரும்பு என்ற பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மணி–மண்டபம் அமைந்துள் ளது. இந்த மணிமண்டபத்தில் இன்று அவரது எட்டாம் ஆண்டு நினைவு தினம் கடை–பிடிக்கப்பட்டு வருகி–றது.

    இதையொட்டி தமிழகத் தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதில் அவர்கள் செய்துள்ள சாதனைகளை விளக்கி மலர் அஞ்சலியும் செலுத்தினர்.

    அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா பான்ஞ் பயா என்ற மாணவர் ராமே சுவரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விளையாட்டு போட் டிகளில் ஏராளமான சாத–னைகளை செய்துள்ளார்.

    இந்த நிலையில் மாணவர் அப்துல்லா பான்ஞ் பயா, முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவப் படத்தையும் அவர் விஞ்ஞானியாக இருந்த–போது முதலில் ஏவிய அக்னி ஏவுகணையும் 1,221 ரூபிக்ஸ் கியூப்களை பயன்ப–டுத்தி வடிவமைத்துள்ளார்.

    இந்த உருவ வடிவத்தை 4 மணி நேரத்தில் அவர் செய்து முடித்துள்ளார் என்பது உலக சாதனையா–கும். அவர் வடிவமைத்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவத்தை அப்துல் கலா–மின் மணிமண்டபத்தில் இன்று அவர் நினைவு தினத்தையொட்டி மண்டப வளாகத்தில் வைத்திருந்த–னர். இந்த உருவத்தை மணி–மண்டபத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனை–வரும் பார்த்து வியந்து மாணவனை பாராட்டி சென்றனர்.

    • அப்துல்கலாமுக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது.
    • ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அறியப்பட்டார்.

    அவருக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனால் அவர்களோடு உரையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின்னரும், பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று தொடர்ந்து பேசி வந்தார்.

    2015-ம் ஆண்டு ஜூலை 27 அன்று மேகாலயா தலைநகர் சில்லாங்கில் உள்ள கல்லூரியில் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்துல்கலாம் இறந்தார். அவரது 8-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதையொட்டி ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், மகன் ஜெயுலாதீன், மருமகன் நிஜாமுதீன், பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா எம்.எல்.ஏ. கீதா ஜெயின், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் வேலூர் இப்ராகிம் ஆகியோரும் பங்கேற்றனர்.

    அரசு சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்றனர்.

    • ராஜஸ்தான் அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு அனுவ்ராட் புரஷ்கார் விருது வழங்கப்பட்டது.
    • இந்த விருதை அவரது பேரன்கள் பெற்றுக்கொண்டனர்.

    ராமேசுவரம்

    ராஜஸ்தானைச் சேர்ந்த சுவாமி ஆச்சார்யா துளசி, அனுவ்ராட் என்ற தனியார் சேவை மையத்தை 1949ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். உலக அமைதி, சமநிலை தன்மை, பூமி பாதுகாப்பு, சாதி மத பேதமின்மை உலகம் முழுவதும் வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பை ஜெயின் சமூகத்தார்கள் இணைந்து வழி நடத்தி வருகிறார்கள்.

    ஆண்டுதோறும் பொது சேவைகளில் சிறந்து விளங்கும் முக்கிய தலைவர்களை கவுரவிக்கும் விதமாக 200 நபர் கொண்ட குழு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனம், முக்கிய நபர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவப்படுத்துகிறது.

    இந்த அமைப்பு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சேவைகளை கவுரவிக்கும் வகையில் அவருக்கு 2022-ம் ஆண்டிற்கான அனுவ்ராட் புரஷ்கார் விருதை அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனுராட் அறக்க ட்டளை அலுவலகத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அப்துல் கலாம் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், பேரன்கள் சேக்தாவூது மற்றும் சேக்சலீம் ஆகியோர்கள் கலந்து கொண்டு விருதை பெற்று கொண்டனர்.

    • மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே., அப்துல்கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது
    • கல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே., அப்துல்கலாம் பிறந்த நாள் விழா மற்றும் உலக மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன் , பொருளாளர் லதா கார்த்திகேயன், பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான், மேலாளர் மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் அப்துல்கலாம் கல்வியில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்திய நுண்ணறிவுமிக்க விரிவுரைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.  

    • மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவரின் உருவப்படத்திற்கு மாணவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர்.
    • இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் அவர் விதைத்த பல்வேறு கருத்துக்கள் பற்றிய குறும்படங்கள் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அருகே உள்ள இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மாணவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர்.

    அதன் தொடர்ச்சியாக விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை செய்த கலாமின் வாழ்க்கை வரலாறு மற்றும் குடியரசுத் தலைவராய் அவர் இருந்த காலகட்டங்களில் இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் அவர் விதைத்த பல்வேறு கருத்துக்கள் பற்றிய குறும்படங்கள் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு நாமும் பாடுபட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சாதனைப்பயணம் பற்றி தலைமை ஆசிரியர் சாவித்திரி மற்றும் ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர்.

    • அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதன்படி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நகராட்சித் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில், நகராட்சி ஆணையாளர் விநாயகம், சுகாதார ஆய்வாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், மற்றும் அலுவலர்கள், திமுக நகர பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, பல்லடம் சுவாமி விவேகானந்தா, ப்ளூ பேர்ட், கண்ணம்மாள், யுனிவர்சல், பாரதி உள்ளிட்ட தனியார் பள்ளிகளிலும், அரசு அரசுப் பள்ளிகளிலும், அப்துல் கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    ×