பல்லடத்தில் அப்துல்கலாம் நினைவுநாள் நிகழ்ச்சி

அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி.
அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்ட காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதன்படி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நகராட்சித் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில், நகராட்சி ஆணையாளர் விநாயகம், சுகாதார ஆய்வாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், மற்றும் அலுவலர்கள், திமுக நகர பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, பல்லடம் சுவாமி விவேகானந்தா, ப்ளூ பேர்ட், கண்ணம்மாள், யுனிவர்சல், பாரதி உள்ளிட்ட தனியார் பள்ளிகளிலும், அரசு அரசுப் பள்ளிகளிலும், அப்துல் கலாமின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com