search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜீவ்காந்தி"

    • திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
    • முருகனை அழைத்து வர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உள்பட நான்கு பேரை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முருகன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவரது பூர்வீகம் இலங்கை என்பதால் அவர் திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

    இதையடுத்து திருச்சி முகாமில் இருக்கும் முருகன், லண்டன் செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தனபால் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என தெரிவித்தார்.

    மேலும், இலங்கை நாட்டின் துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டும் தான் முருகனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முருகனை அழைத்து வர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.

    முன்னதாக உயர்நீதிமன்ற கிளையில் முருகன் தாக்கல் செய்த மனுவில் "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எனக்கும், என் மனைவி நளினிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவால் விடுதலை செய்யப்பட்டோம். நான் முகாமிலும், என் மனைவி, மகள் தனியாகவும் வசித்து வருகின்றனர். எனது மகள் லண்டனில் உள்ளார்."

    "32 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். எஞ்சியுள்ள காலத்தில் லண்டனில் உள்ள மகளுடன் வசிக்க ஆசைப்படுகிறோம். இதற்காக பாஸ்போர்ட் பெற பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும், ஆன்லைன் வழியாக இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும்," என்று கூறப்பட்டு இருந்தது.

    • ராஜபாளையத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
    • எஸ்.சி துறை தலைவர் கோவிந்தன், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் அய்யனார் தலைமையில் பொதுசெயலாளர் செல்வராஜ், ராஜபாளையம் நகர் காங்கிரஸ் துணைதலைவர் தனசேகரன் முன்னிலையில் ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பொதுகுழு உறுப்பினர் குமாரசாமிராஜா, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், அண்ணாதுரை, ஜ.என்.டி.யு.சி தலைவர் தங்கவேல், விவசாய பிரிவு மாநிலசெயலாளர் மணிகண்டன், செட்டியார் பட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராமர், நாக செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் கோவிந்தன், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார்.
    • ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.

    • கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ்காந்தி ஜோதிக்கு திசையன்விளை அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    திசையன்விளை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ்காந்தி ஜோதிக்கு திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் சந்திப்பில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன், மாநில காங்கிரஸ் விவசாய அணி செயலாளர் விவேக் முருகன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் விஜயபெருமாள், திசையன்விளை நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் விழா நகர,வட்டார, காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. பல்லடம் பனப்பாளையம் பகுதியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி,நகர செயல் தலைவர் மணிராஜ், நகரப் பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் பகுதியில், பல்லடம் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவில் வட்டாரத் தலைவர் புண்ணியமூர்த்தி காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.இதேபோல பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் பல்லடம் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்ட ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவில் வட்டாரத் தலைவர் கணேசன் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    ×