மன்னார்புரம் சந்திப்பில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதிக்கு வரவேற்பு - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு

கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ்காந்தி ஜோதிக்கு திசையன்விளை அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.
மன்னார்புரம் சந்திப்பில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.தலைமையில், நினைவு ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட போது எடுத்தபடம்.
மன்னார்புரம் சந்திப்பில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.தலைமையில், நினைவு ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட போது எடுத்தபடம்.
Published on

திசையன்விளை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ்காந்தி ஜோதிக்கு திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் சந்திப்பில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன், மாநில காங்கிரஸ் விவசாய அணி செயலாளர் விவேக் முருகன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் விஜயபெருமாள், திசையன்விளை நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com