என் மலர்
நீங்கள் தேடியது "child"
- குழந்தை தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது.
- குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்ட யம் பகுதியை சேர்ந்த 7 மாத குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அந்த குழந்தை தொடர் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தையை கோட்டயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்ததில், குழந்தையின் நுரையீரலின் கீழ் பகுதியில் ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். அதனால் தான் குழந்தைக்கு தொடர் இருமல் ஏற்பட்டது மட்டுமின்றி, மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குழந்தையின் வலது நுரையீரலில் சிவப்பு நிற சிறிய எல்.இ.டி.பல்ப் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து உடனடியாக அகற்றினர்.
இதன்மூலம் அந்த குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றினர். குழந்தை விளையாடிய பொம்மை யில் இருந்து எல்.இ.டி. பல்ப் தெரியாமல் வாய் வழியாக உடலுக்குள் சென்றிருக்கலாம் என்றும், இதுபோன்ற நிகழ்வு மிகவும் அரிதாக நடக்கக்கூடியது எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். உயிருக்கு ஆபத்தில்லாத விளையாட்டு பொருட்களையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார்.
- கவிதா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் 1-ல் முத்துகிருஷ்ணன் முதல் தெருவில் வசித்து வந்தவர் கவிதா (வயது 47). வளையல் வியாபாரம் செய்து வந்தார். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு உதவியாக இளையமகள் அவரது வீட்டில் தங்கியுள்ளார். கணவனை இழந்த கவிதா 2 பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு, கல்வி மற்றும் திருமண செலவுகளுக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடனை கொடுத்தவர்கள் கவிதாவிடம் பணத்தை திருப்பி கேட்டனர். கடனை திருப்பி அளிக்க முடியாத கவிதா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் சென்றவர் திரும்ப வெளியில் வரவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் இவரை தேடி நேற்று மதியம் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டிலிருந்த மின் விசிறியில் புடவையினால் தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார். இது குறித்த தகவலின் படி திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கிரைண்டர் கல் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்
- சுப்பிரமணி மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
ஊத்துக்குளி,செப்.17-
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பெட்டிக்கடை அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 28). இவர் அங்குள்ள கிரைண்டர் கல் தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் சித்தேஸ்வரன் (வயது 3). சுப்பிரமணி மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வேலை செய்யும் இடத்திற்கு குழந்தையை அழைத்து வந்துள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடி பார்த்த சுப்பிரமணி, அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் சித்தேஸ்வரன் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் சித்தேஸ்வரன் இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆத்திரமடைந்த விஷ்ணு, மனைவி தனது கையில் வைத்திருந்த 3 மாத கைக்குழந்தையை பிடுங்கி தரையில் வீசினார்.
- விஷ்ணுவை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கன்னியாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் குமாரபுரம் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த விஷ்ணு, மனைவி தனது கையில் வைத்திருந்த 3 மாத கைக்குழந்தையை பிடுங்கி தரையில் வீசினார்.
தரையில் வீசப்பட்ட குழந்தை பயங்கரமாக அலறியது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கீழே வீசப்பட்டதில் காயமடைந்த கைக்குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், விஷ்ணுவை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
- சந்தேகம் அடைந்த அச்சரா சம்பவம் குறித்து தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார்.
- குழந்தையை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ரவி (வயது48). டாஸ்மாக் ஊழியர். இவரது மகள் அச்சரா (19). கல்லூரி மாணவி.
சம்பவத்தன்று ரவி வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அச்சரா மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது பர்தா அணிந்தபடி கையில் குழந்தையுடன் பெண் ஒருவர் திடீரென அச்சராவின் வீட்டிற்குள் வந்தார். உடனே அச்சரா நீங்கள் யார்? என்ன வேண்டும் என கேட்டார்.
அதற்கு அவர், எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஒரு குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் குழந்தையை பஸ் நிலையத்தில் படுக்க வைத்து விட்டு வந்துள்ளேன்.
இந்த குழந்தையை நீங்கள் கொஞ்சம் நேரம் வைத்திருந்தால், உடல் நலம் பாதிக்கப்பட்ட எனது மற்றொரு குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுவிட்டு வருவேன்.
பின்னர் வந்து குழந்தையை பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார். இதை உண்மை என நம்பி அச்சராவும், குழந்தையை கொடுங்கள் நீங்கள் வரும் வரை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இதையடுத்து இளம்பெண் அச்சராவிடம் குழந்தையை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
நீண்ட நேரமாகியும் இளம்பெண் திரும்பி வரவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அச்சரா சம்பவம் குறித்து தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவரும் வந்து மகளிடம் விசாரித்து விட்டு, அவர் கூறிய தகவல் படி பஸ் நிலையம் முழுவதும் அந்த பெண்ணை தேடி பார்த்தார்.
ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ரவி தேவாலா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.
அப்போது இளம்பெண் ஒப்படைத்தது பிறந்து ஒரு வாரமே ஆன ஆண்குழந்தை என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் குழந்தையை கொடுத்த சென்ற பெண் யார்? எதற்காக குழந்தையை கொடுத்தார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
மேலும் அந்தபகுதிகளில் சி.சி.டி.வி கேமிராக்கள் இருக்கிறதா என்பதை பார்த்து, அதில் ஏதாவது தகவல்கள் கிடைக்கிறதா என்பதையும் சேகரித்து வருகிறன்றனர்.
இதற்கிடையே சைல்டு லைன் அமைப்பிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு வந்து, குழந்தையை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து குழந்தையை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதலனுடன் மாயமாகி கர்ப்பிணியான பெண்ணுக்கு பிறந்த குழந்தை இறந்தது.
- வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள்தேவன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜக்கம்மாள் (வயது 18). இவர் ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற வாலிபரை தீவிரமாக காதலித்து வந் தார். இதனை அறிந்த அவரது பெற்றோர் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே மகளுக்கு திருமண ஏற்பாடுகளையும் ரகசியமாக செய்து வந்தனர். இதனை அறிந்த ஜக்கம்மாள் கடந்த 23.5.2023 அன்று காதலன் பிரவீன்குமாருடன் வீட்டை விட்டு வெளியே–றினார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு–பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து வன்னியம் பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்து நீதி–மன்றத்திலும் வழக்கு நிலு–வையில் இருந்தது. இதற்கி–டையே மாயமான ஜக்கம் மாள் 7 மாத கர்ப்பிணியா–னார். மேலும் கோர்ட்டில் நடந்த வழக்கில் காதலன் பிரவீன்குமார் விடுதலையா–னார்.கர்ப்பிணியாக இருந்த ஜக்கம்மாள் தனது பெற் றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 1-ந்தேதி ஜக்கம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஓரிரு நாளில் அந்த குழந்தைக்கு மூச்சு, பேச்சு இல்லாமல் போனது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதுதொடர்பாக ஜக்கம் மாள் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
- அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை குழந்தை இல்லாத பெண் பக்தர்கள் சாப்பிட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சு.பொலக்குணம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 19-ம் ஆண்டு ஆடிமாத திருவிழா நேற்று நடைபெற்றது.
ஆடி முதல் வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பின்னர் அம்மன் வீதியுலா, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து, சு.பொலக்குணம் கிராமத்தில் வசிக்கும் பக்தரின் மார்பு மீது உரல் வைத்து அரிசி, மஞ்சள் ஆகியவை கொட்டப்பட்டு உலக்கையால் மாவு இடிக்கப்பட்டது.
உரலில் இடிக்கப்பட்ட மாவை உண்ணுபவர்களுக்கு திருமணம் கைகூடும், குழந்தை பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
இதனால், அம்மனை வேண்டிக்கொண்டு உரலில் இடிக்கப்பட்ட மாவை குழந்தை இல்லாத பெண் பக்தர்கள் சாப்பிட்டனர்.
இதைத்தொடர்ந்து, கோவிலில் அம்மன் ஊஞ்சல் தாலாட்டும், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் நாடகமும் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
- போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தாம்பரம் இந்திய விமானப்படை தளத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா(21).
கர்ப்பமாக இருந்த ஹேமலதாவுக்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை உடன் தாய் ரெட்டியூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.
அங்கு மனைவி மற்றும் பிறந்த ஆண் குழந்தையை பார்த்தார். குழந்தையின் ஜாடை என்னை போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவி ஹேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த, பிளேடால் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த பச்சிளம் குழந்தைக்கு, அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குழந்தையின் தந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- மொட்டைமாடியின் தடுப்பு கைப்பிடி சுவரில் இருந்த இடைவெளிவழியாக 2-வது குழந்தை சியோன் வெளியே வந்தான்.
- மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
மாதவரம் நேருநகர், பெருமாள் கோவில் தெருவில் உள்ள வீட்டின் 3-வது மாடியில் மேல் தளத்தில் வசித்து வருபவர் ராகுல். இவரது மனைவி பூஜா. இவர்களது மகன்கள் பருண், சியோன் (வயது2). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இங்கு வந்து தங்கினர்.
இந்நிலையில் நேற்று மதியம் பூஜா வீட்டின் மாடியில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அவரது அருகே குழந்தைககள் பருண், சியோன் அகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மொட்டைமாடியின் தடுப்பு கைப்பிடி சுவரில் இருந்த இடைவெளிவழியாக 2-வது குழந்தை சியோன் வெளியே வந்தான். இதில் குழந்தை சியோன் 3-வது மாடியில் இருந்து தவறி கிழே விழுந்தான். இதனை கண்டு தாய் பூஜா அதிர்ச்சி அடைந்தார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தை சியோனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை சியோன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
- 2 மணி நேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது.
- அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, குழந்தைக்கு மயக்க மருந்து எனப்படும் அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
2 மணி நேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது.
இந்நிலையில், அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.