என் மலர்
இந்தியா

கேரளா: தொண்டையில் கல்சிக்கி 1 வயது குழந்தை பலி!
- சுவாசக் கோளாறுதான் மரணத்திற்குக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிப்பு
- நடைமுறைகளை முடிக்கப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் மாவட்டம் சங்கரம்குளத்தில் உள்ள தெக்குமூரி பகுதியை சேர்ந்தவர் மஹ்ரூப். இவரது மனைவி ருமானா. இவர்களது மகன் அஸ்லம் நூஹ் (வயது 1). குழந்தை நேற்று கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது தவறுதலாக மண்ணை விழுங்கியுள்ளான். இதில் மண்ணில் இருந்த சிறிய கற்கள் தொண்டையில் சிக்கி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
உடனே குழந்தையை தூக்கி கொண்டு குடும்பத்தினர் சங்கரம்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இருப்பினும், குழந்தையின் உடல்நிலை மோசமாகியதால், சிறப்பு சிகிச்சைக்காக கொட்டக்கலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். ஆனால் நேற்றிரவே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.
தொண்டையில் கல் சிக்கியதால் ஏற்பட்ட கடுமையான சுவாசக் கோளாறுதான் மரணத்திற்குக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூச்சுத்திணறலால் ஏற்பட்ட மரணம் என்பதால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று சங்கரம்குளம் போலீசார் தெரிவித்தனர். நடைமுறைகளை முடித்த பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






