என் மலர்tooltip icon

    இந்தியா

    • விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
    • இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    ஐதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் உள்ள மிரியால குடா கிராமத்திற்கு அருகே அரசு பேருந்து மீது ஜல்லி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்தில் அரசு பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. மேலும் விபத்தின் போது பேருந்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சப்படுகிறது.

    விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 



    • தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
    • யார் சிறந்த முதலமைச்சர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தேஜஸ்வி யாதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    ஆட்சியைக் கைப்பற்றும் வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    சட்டமன்ற தேர்தலை ஒட்டி தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு தேஜஸ்வி யாதவ் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? சிலர் இன்னமும் மோடிஜியின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் முலாயம் சிங்கின் பெயரைச் சொல்கிறார்கள். சிலர் அகிலேஷ் யாதவின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரையும் சொல்கிறார்கள். ஆகையால் இப்போது இருப்பவர்களில் யார் சிறந்த முதலமைச்சர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த தேஜஸ்வி, "இப்போது இருப்பவர்களில் எனக்கு ஸ்டாலின் என்று தோன்றுகிறது. நம்முடைய (பீகார்) முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளைக் கொண்டு வருவதை நான் பார்க்கவில்லை. முதலீட்டைக் கொண்டுவருவதற்காக அவர் எதுவும் செய்வதில்லை. ஆனால், ஸ்டாலின் அவர்கள் முயற்சி செய்கிறார். அவர் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்துகிறார், முதலீடுகளைக் கொண்டு வருகிறார்" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை திமுகவினர் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • மத்திய அரசின் வருடாந்திர ஆய்வு அறிக்கை மேற்கொள்ளும் அமைப்பாக ஸ்வச் சர்வேக்ஷன், 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • இந்தூர், சூரத் மற்றும் நவி மும்பை ஆகியவை இந்தியாவின் தூய்மையான நகரங்களாக உருவெடுத்துள்ளன.

    நாட்டின் மிகவும் அசுத்தமான நகரங்களின் முதல் 10 பட்டியலில் தென்னிந்தியாவின் மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

    நகர மற்றும் கிராமப்புற தூய்மையை அளவிடும் மத்திய அரசின் வருடாந்திர ஆய்வு அறிக்கை மேற்கொள்ளும் அமைப்பாக ஸ்வச் சர்வேக்ஷன், 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

    பட்டியலின்படி, தமிழ்நாட்டின் மதுரை 4,823 புள்ளிகளுடன் நாட்டின் மிகவும் அசுத்தமான நகரமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை 6,822 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பெங்களூரு 6,842 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

    கழிவு மேலாண்மை மற்றும் பொது தூய்மை போன்றவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    பட்டியலில் 2வது இடத்தில் லூதியானா, 4வது இடத்தில ராஞ்சி, 6,842 புள்ளிகளுடன் 5வது இடத்தில் பெங்களூரு, 6வது இடத்தில் தன்பாத், 7இல் பரிதாபத், 8வது இடத்தில் 7,419 புள்ளிகளுடன் மும்பை, 9வது இடத்தில் ஸ்ரீ நகர், 10 வது இடத்தில் 7,920 புள்ளிகளுடன் தலைநகர் டெல்லி இடம்பெற்றுள்ளது.

    திட்டமிடப்படாத நகர்ப்புற மேம்பாடு, கழிவுகளை அகற்றுதலில் திறமையின்மை மற்றும் குடிமக்களின் அலட்சியம் ஆகியவைமுக்கிய சவால்களாக இந்த ஆண்டு பட்டியலில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

    இதற்கிடையில், இந்தூர், சூரத் மற்றும் நவி மும்பை ஆகியவை இந்தியாவின் தூய்மையான நகரங்களாக உருவெடுத்துள்ளன. அகமதாபாத், போபால், லக்னோ, ராய்ப்பூர் மற்றும் ஜபல்பூர் போன்ற நகரங்களும் தூய்மையானதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.      

    • சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் நாயைக் கண்டுபிடித்தனர்.
    • நாயின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதாக தெரிவித்தனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சிக்கநாயக்கனஹள்ளி பகுதியில் தெருநாய் ஒன்று இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டிய கொட்டகையில் நாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெல்லந்தூரைச் சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் புகார் அளித்தார்.

    அவர் தனது புகாரில், அக்டோபர் 13 ஆம் தேதி கொட்டகையில் ஒரு கும்பலால் தெரு நாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் தான் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் விலங்கு வதை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்குனர்.

    சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் நாயைக் கண்டுபிடித்தனர். நாயின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனைக்கு பின் உண்மை வெளிவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

    • எண்ணற்ற இளம் பெண்களை அச்சமின்றி கனவு காணவும் ஊக்கப்படுத்தியுள்ளது.
    • நீங்கள் உலகக் கோப்பையை மட்டும் வெல்லவில்லை, ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வென்றுள்ளீர்கள்.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நமது பெண்கள் அணி வரலாறு படைத்து, பில்லியன் கணக்கான இதயங்களைத் தொட்டுவிட்டனர். உங்கள் வீரம், மனோதிடம் மற்றும் நேர்த்தியான ஆட்டம் இந்தியாவுக்குப் புகழைக் கொண்டு வந்துள்ளதுடன், எண்ணற்ற இளம் பெண்களை அச்சமின்றி கனவு காணவும் ஊக்கப்படுத்தியுள்ளது.

    நீங்கள் கோப்பையை மட்டும் தூக்கவில்லை; தேசத்தின் உணர்வுகளையே தூக்கி நிறுத்தியுள்ளீர்கள்.ஜெய் ஹிந்த்! " என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025-இல் அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் குறிப்பிடத்தக்க செயல்பாடு, மன உறுதி மற்றும் குழு செயல்பாடு ஆகியவை தேசத்துக்கு அளப்பரிய பெருமையைத் தேடித் தந்துள்ளது.

    இந்த வெற்றி வெறும் விளையாட்டு மைல்கல் மட்டுமல்ல; இது பெண்களின் சக்தி மற்றும் தலைமைத்துவத்தைப் பறைசாற்றும் ஒரு கொண்டாட்டம். இது மில்லியன் கணக்கானவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.

    முழு தேசமும் இந்த மகத்தான தருணத்தைக் கொண்டாட ஒன்றிணைந்து நிற்கிறது. நீங்கள் உலகக் கோப்பையை மட்டும் வெல்லவில்லை, ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வென்றுள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் பிரகாசமான வெற்றிகரமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்!" என்று தெரிவித்துள்ளார். 

    • மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
    • இந்த தருணம் பெண்கள் கிரிக்கெட்டை இன்னும் உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும்"

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! அவர்கள் முதல் முறையாக அதை வென்று வரலாறு படைத்துள்ளனர்.

    இன்று அவர்களின் திறமைக்கும் செயல்திறனுக்கும் ஏற்ற பலனைப் பெற்றுள்ளனர். இந்த தருணம் பெண்கள் கிரிக்கெட்டை இன்னும் உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும்" என்று தெரிவித்துள்ளார்.  

    • 56 அங்குல மார்பு இருப்பதாக பெருமை பேசும் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் போது டொனால்ட் டிரம்ப் அழைத்தபோது பயந்தார்.
    • மகாத்மா காந்தியைப் பாருங்கள், அவர் ஒல்லியாக தான் இருந்தார்.

    பீகார் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி நேற்று பேகுசராய் மற்றும் ககாரியா பகுதியில் பேரணி சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

    பிரசாரத்தில் பேசிய அவர், "பெரிய மார்பு இருப்பதால் மட்டும் நீங்கள் வலிமையானவராகிவிட மாட்டீர்கள். மகாத்மா காந்தியைப் பாருங்கள், அவர் ஒல்லியாக தான் இருந்தார், அந்தக் காலத்தின் வல்லரசான ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார்.

    ஆனால் 56 இன்ச் மார்பு இருப்பதாக பெருமை பேசும் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் போது டொனால்ட் டிரம்ப் அழைத்தபோது பயந்தார். பின்னர், பாகிஸ்தானுடனான இராணுவ மோதல் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது.

    மோடி டிரம்பிற்கு பயப்படுவது மட்டுமல்லாமல், அம்பானி மற்றும் அதானி ஆகியோரால் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார். 

    1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அமெரிக்கா அச்சுறுத்தியபோது, அவர் பயப்படவில்லை, சரியானதை செய்தார்.

    ஆனால் டிரம்ப் மோடியிடம் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தச் சொன்னபோது, மோடி அதை நிறுத்தினார்" என்று விமர்சித்தார்.

    மேலும் மோடி அரசின் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற முடிவுகள் சிறு வணிகங்களை அழித்து பெரிய வணிகர்களுக்கு பயனளிக்கும் நோக்கில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். 

    • ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் அமிரா என்ற 9 வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார்.
    • சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் அமிரா என்ற 9 வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில், மாணவி அமிரா கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளியின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    போலீசார் விசாரணையில், ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சிறுமி பள்ளியின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது.
    • தீப்தி வீட்டிற்கு வரும்போது, அவருக்கு ஆக்ரா முழுவதும் இருந்து ஒரு பிரமாண்டமான வரவேற்பு கிடைக்கும்.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த வெற்றியை நாடு முழுவதிலும் மக்கள் இரவு நேரத்தில் வீதிகளில் திரண்டு கொண்டாடி வருகின்றனர்.

    டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வீதிகளில் திரண்ட மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனை தீப்தி சர்மாவின் தந்தை, "நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறோம். முழு தேசமும் கொண்டாடுகிறது. தீப்தி வீட்டிற்கு வரும்போது, அவருக்கு ஆக்ரா முழுவதும் இருந்து ஒரு பிரமாண்டமான வரவேற்பு கிடைக்கும். அவர் இன்று மிகவும் சிறப்பாக செயல்பட்டார்" என்று தெரிவித்தார்.   

    • தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார்.
    • இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்பாடு அபார திறமை மற்றும் தன்னம்பிக்கையுடன் அமைந்தது.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில்  நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் பட்டம் பெற்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்பாடு அபார திறமை மற்றும் தன்னம்பிக்கையுடன் அமைந்தது.

    இந்தப் போட்டித் தொடர் முழுவதும் அணி சிறப்பான குழு செயல்பாடு மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்தியது.

    நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று வெற்றி, வருங்கால சந்ததியினர் விளையாட்டுத் துறையை  தேர்ந்தெடுத்து சாம்பியன்களாக ஊக்கமளிக்கும்." என்று பதிவிட்டுள்ளார். 

    மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட பதிவில், "உலக சாம்பியன் ஆன இந்திய அணிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள். ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025-ஐ நமது அணி வென்றுள்ள இந்தத் தருணம், தேசத்திற்கே ஒரு மணிமகுடம் சூட்டியது போல, இந்தியாவின் பெருமையை வானளாவ உயர்த்தியுள்ளது.

    உங்களின் அசாத்தியமான திறமைகள், கோடிக்கணக்கான இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகப் பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த அணிக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

    • தனது வழக்கமான வெள்ளை டீ-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட்டுடன், ராகுல் காந்தி ஏரியில் இறங்கி நீச்சல் அடித்தார்.
    • மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும் மூன்று மாத கால இடைவெளியில், ஒவ்வொரு மீனவக் குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும்.

    பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் மகாபந்தன் (இந்தியா) கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது தேர்தல் பிரச்சாரத்தில் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார்.

    பீகார் மாநிலம் பேகுசராய் பகுதியில் தனது வழக்கமான வெள்ளை டீ-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட்டுடன், ராகுல் காந்தி ஏரியில் இறங்கி நீச்சல் அடித்தார்.

    இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி அங்குள்ள உள்ளூர் மீனவர்களுடன் மீன்பிடித்து மகிழ்ந்தார். மேலும் அவர்களின் பிரச்சனைகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ராகுல் வாகக் கேட்டறிந்தார்.

    இந்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ், மீன் வளர்ப்புக்கு காப்பீட்டுத் திட்டம், மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும் மூன்று மாத கால இடைவெளியில், ஒவ்வொரு மீனவக் குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி ஆகிய வாக்குறுதிகளை குறிப்பிட்டது.

     ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "மீனவர்கள் பீகார் பொருளாதாரத்தின் மிக முக்கிய அங்கம். அவர்களின் உழைப்பும், தொழில் குறித்த ஆழமான புரிதலும் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. அவர்களின் உரிமை மற்றும் கௌரவத்திற்காக நான் உறுதுணையாக இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.  

    • இன்று மாலை அனைவரும் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
    • ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ஹலொடி பகுதியை சேர்ந்த 20 பேர் வேனில் பிகனீர் மாவட்டம் கோலயத் நகரில் உள்ள இந்து மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுள்ளனர்.

    வழிபாட்டை முடித்துவிட்டு இன்று மாலை அனைவரும் வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    அப்போது பலோடா மாவட்டத்தில் உள்ள மடோடாவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியது.

    இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 18 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  விபத்து குறித்த அறிந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நொறுங்கிய வேனில் சிக்கிய காயமடைந்தவர்களை கிராம மக்களின் உதவியுடன் மீட்டனர். ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அதிவேகமாகச் சென்ற சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து  வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

    ×