என் மலர்
சினிமா செய்திகள்

'ஜன நாயகன்' பட விவகாரம்... பொங்கலன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
- படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
- மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஜன.21-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுநாள் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை படத்தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்தே 'ஜன நாயகன்' படம் தொடர்பான வழக்கு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.






