search icon
என் மலர்tooltip icon

    அரியலூர்

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு ஜெயங்கொண்டம் அருகே கருப்பு கொடி காட்டுவதற்கு விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டிருந்தனர்.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

    ஜெயங்கொண்டம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து அவர் கார் மூலம் மயிலாடுதுறை புறப்பட்டு சென்றார்.

    ஜெயங்கொண்டம் வழியாக மயிலாடுதுறை மாவட்டம் சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கருப்பு கொடி காட்டுவதற்கு விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டிருந்தனர்.

    இதற்காக அவர்கள் ஜெயங்கொண்டம் குறுக்குரோடு சந்திப்பில் திரண்டனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் கருப்பு கொடி காட்ட திரண்டிருப்பது, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனை தொடர்ந்து போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நல்ல தம்பி வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
    • வந்தவர்கள் ஏன் காரை எரிக்காமல் பைக்கை எரிந்தனர் என்பதும் தெரியவில்லை.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தெத்தேரி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி சிவசங்கரி, ஆலத்தியூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆவார்.

    இன்று அதிகாலை நல்லதம்பியின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக் எரிக்கப்பட்டது. இதுகுறித்து தளவாய் போலீசார் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் டாஸ்மாக் பார் ஏலம் மற்றும் மணல் குவாரி தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளருக்கும் இவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    அதனால் பைக் எரிக்கப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நல்ல தம்பி வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பைக் பக்கத்தில் கார் இருந்துள்ளது.

    வந்தவர்கள் ஏன் காரை எரிக்காமல் பைக்கை எரிந்தனர் என்பதும் தெரியவில்லை. கிராமத்தில் மற்ற இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் ஏதாவது பதிவுகள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    • மோசடியின் பின்னணியில் உள்ள பீகார் கும்பல் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகர், கீரைக்கார தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன் (வயது 47). இவர் பிரபல தனியார் துரித உணவகத்தின் கிளையை அரியலூரில் தொடங்குவதற்காக முடிவெடுத்தார். இதற்காக இணையதளம் ஒன்றில் பதிவு செய்தார். இதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் அந்த இணையதளத்தில் பதிவு செய்தார்.

    இந்நிலையில் அவரை செல்போனில் தொடர்புகொண்ட சிலர் பல்வேறு காரணங்களை கூறி பணம் செலுத்த கூறியுள்ளனர். முன்தொகை மற்றும் தடையில்லா சான்று, பதிவுச்சான்றுக்கு என ரூ.66.20 லட்சத்தை பல்வேறு தவணைகளில் பெற்றனர்.

    ஆனால் துரித உணவகம் திறக்க எந்தவித அனுமதியும் கிடைக்கவில்லை. மேலும் அந்த இணையதளம் போலி என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கொளஞ்சிநாதன் இலவச இணைய குற்ற புகார் எண் 1930-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

    இதனைதொடர்ந்து திருச்சி மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்பேரில், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில், அரியலூர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவநேசன்(தொழில்நுட்பம்), போலீசார் சுரேஷ்குமார், சுதாகர், ரஞ்சித்குமார், அரவிந்தசாமி, செல்வமாணிக்கம், வசந்தி ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து முதற்கட்டமாக குற்றம்புரிய பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்த ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்தை போலீசார் முடக்கினர். மேலும் குற்றவாளிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கடந்த 9-ந்தேதி பெங்களூருக்கு சென்று பிரபல தனியார் உணவகத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முகமது இத்ரீஸ் (39), தருண் (21) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பல்வேறு வங்கிகளில் மொத்தம் 15 வங்கி கணக்குகளை தொடங்கி, 10 சிம்கார்டுகள் உதவியுடன், பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பீகாரில் உள்ள முக்கிய குற்றவாளிக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனைதொடர்ந்து, முகமது இத்ரீஸ், தருண் ஆகியோரிடம் இருந்து 2 செல்போன்கள், 4 சிம்கார்டுகள், 4 வங்கி கணக்கு புத்தகங்கள், 5 காசோலை புத்தகங்கள், 5 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்த கும்பல் தமிழகம் முழுவதும் பல்வேறு மோசடியில் ஈடுபட்டிருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    செல்போனில் ஓ.டி.பி. பெற்று மோசடி, ஆன்லைன் லோன் தருவதாக மோசடி, செல்போன் டவர் அமைக்க இருப்பதாக கூறி மோசடி என பல்வேறு நூதனை மோசடிகளை ஆன்லைன் மூலமாக அரங்கேற்றி உள்ளனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மோசடியின் பின்னணியில் உள்ள பீகார் கும்பல் பிடிபட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சிலர் பீகர் செல்ல உள்ளனர். பீகார் போலீசார் உதவியுடன் நூதன மோசடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    • அரியலூரில் குழந்தைகள் தின நடை பயண பேரணி நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட அலுவலக வளாகத்தில், சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகின் சார்பில் குழந்தைகள் தின விழா நடைபயண பேரணியினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கொடி ய சைத்து தொடங்கி வைத்தார்.இப்பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவ லக வளாகத்தில் தொடங்கி அரசினர் தொழிற்பயிற்சி மையம், பல்துறை அலுவலக வளாகம், அரியலூர் பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் முடிவ டைந்தது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா பரி சுகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் ராம கிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலன், சமூக நல அலுவலர் பூங்குழலி, தாசில்தார் (அரியலூர்) ஆனந்தவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் சிமெண்டு ஆலை சுரங்கம் அமைக்கும் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது
    • அரியலூர் கலெக்டர் உத்தரவு

    அரியலூர்,

    அரியலூர்அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சிமென்ட்ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான சுண்ணாம்புக் கல் எடுக்க வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, காட்டுப்பிரிங்கியம், அஸ்தினாபுரம், கல்லங்குறிச்சி, சீனிவா சபுரம், தாமரை க்குளம், நாயக்கர்பாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடம் குறை வான விலைக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

    அப்போது நிலம் அளித்த விவசாய குடும்பத்தின் ஒரு வருக்கு வேலை வழங்கப்ப டும் என்று தெரிவித்த அரசு சிமென்ட் ஆலை நிர்வாகம், இதுவரை யாருக்கும் வேலை வழங்கவில்லை என கூறப்ப டுகிறது.இது தொடர்பாக சம்பந் தப்பட்ட கிராமமக்கள் கோர்ட்டில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுரங்கம் அமைப்பதற்காக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது.அப்போது ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று (செவ்வாய் கிழமை) கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட இருந்த நிலையில், நிலம் கொடுத்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.

    இதனை அறிந்த கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இதில் நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் உரிய இழப்பீட்டு தொகையை வழங்கிவிட்டு கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கருத்துக் கேட்பு கூட்டத்தை ஒத்திவைத்து கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பேச்சுவார்த்தையின் போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், அரசு சிமென்ட் ஆலை நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.

    • விவசாயிகள் தங்கள் நிலங்களை அளித்தார்கள்.
    • விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டடத்தை அறிவித்துள்ளார்கள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு தேவையான மூலப்பொருள்கள் அங்குள்ள விவசாய நிலங்களில் கிடைப்பதால் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க 600 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை அளித்தார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் 30 ஆண்டுகளாக காலம் தாழ்த்துவது கண்டிக்கதக்கது.

    நீதிமன்றம் ஏக்கர் ஒன்றுக்கு 1.20 லட்சம் இழப்பீடும், இதுவரையான வட்டியுடன் சேர்த்து மொத்தமாக 8 லட்சம் வழங்க உத்திரவிட்டது. ஆனால் அதை நிறைவேற்றாமல் அரசு மேல் முறையீடு சென்றது.

    விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டடத்தை அறிவித்துள்ளார்கள். 30 ஆண்டு கால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசும், அரசு சிமெண்ட் ஆலை நிர்வாகமும் உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரியலூரில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
    • பள்ளிகளில் இலக்கிய மன்ற விழா நடத்திட தீர்மானம்

    அரியலூர்,

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைப்பின் செயலாளராக இருந்த செம்மொழி ராமசாமி அமைப்பாளராகவும், துணைத் தலைவராக இருந்த கதிர்கணேசன் செயலாளராகவும் செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டுதோறும் தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு சார்பாக இலக்கிய மன்ற விழா நடத்தி மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வருதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அமைப்புச் செயலாளர் நல்லப்பன், புலவர் இளங்கோவன், பொருளாளர் புகழேந்தி, திருவள்ளுவர் ஞானமன்ற நிறுவனர் பன்னீர் செல்வம், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு நிர்வாகிகள் அஞ்சை ராவணன், ஓவிய கவிஞர் அன்பு சித்திரன், ஜோதிராமலிங்கம், செல்லப்பண்டியன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முடிவில் செய்தி தொடர்பாளர் தமிழ்க்களம் இளவரசன் நன்றி கூறினார்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. மாணவரணி சார்பில் கட்டுரை , பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நேஷ்னல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடந்தது. போட்டியினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    மேலும் போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சட்டத்திட்ட திருத்தக் குழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்ரமணியன், நேஷனல் கல்லூரி தாளாளர் சிலம்புச்செல்வன், நகர செயலாளர் வெ கொ. கருணாநிதி,மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஆர்.ராமராஜன் மற்றும் பல்வேறு கல்லூரி மற்றும் அரசு பள்ளியில் இருந்து மாணவி மாணவிகள் திரளாக வளர கலந்து கொண்டனர்.

    • திருமானூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருமானூர், சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர், கல்லூர், கீழ குளத்தூர், திருப்பெயர், மஞ்சமேடு, கரைவெட்டி பரதூர், வேட்டக்குடி, விழுப்பனங்குறிச்சி, ஏலாக்குறிச்சி, பெரியமறை, அழகிய மணவாளன், மாத்தூர், மேலராமநல்லூர், கீழராமநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணியில் இருந்து பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • அரியலூரில் 596 வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா முகாம்களில் ஆய்வு நடத்தினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது.திருமானூர் ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வாரண வாசி அரசு உயர்நி லைப்பள்ளி, கீழப்பழுவூர் அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இம்முகாமானது அரியலூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 306 வாக்குச்சாவடி மையங்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 290 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 596 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.கலெக்டர் ஆய்வின் போது, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ஜெயங்கொண்டம் அருகே வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

    இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உடன் ஜெயங்கொண்டம். தாசில்தார் கலியலூர் ரகுமான், தேர்தல் துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், கிராம உதவியாளர் தனசேகர் மற்றும் குண்டவெளி பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் ஜெயங்கொண்டம் நேஷனல் தொழில் பயிற்று நிறுவனம் மாணவர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திரளாக பேரணியில் கலந்துக் கொண்டு வாக்காளர் சுருக்க முறை திருத்தம்- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று மற்றும் நாள தேர்தல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இது குறித்தும் அதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், புதிய வாக்காளர் அடையாளத்தை பெறுதல் ,தொகுதி மாற்றம் செய்தல், ஆதார் அட்டை இணைத்தல் குறித்து பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர். வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு ஆரம்பித்து அரசு மேல் நிலைப்பள்ளி வளாகம் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அரியலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் முந்திரி பயிர்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

    அரியலூர், 

    அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர்

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து: அரியலூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் விவசாயிக ளுக்கு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன்: அரியலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டரில் முந்திரி விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது முந்திரி கொட்டைக்கு விலையில்லாத தால் விவசாயிகள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மானியத்தில் முந்தி ரிக்கு அணைப் போட்டு (கரை அமைத்து)கொடுக்க வேண்டும். முந்திரிக்கு காப்பீடு திட்டம் கொண்டு வரவேண்டும்.மக்காச்சோளம் பயிரால் நஷ்டமடைந்த விவசாயிக ளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்.

    அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம்: அரியலூர் மாவட்டத்தி லுள்ள காவிரி டெல்டா பகுதிகளில் நிகழாண்டு சாகுபடி செய்ய இயலாத விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொ)பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபா சங்கரி மற்றும் அனைத்து துறை அலுவ லர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×