search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முந்திரி பயிர்களுக்கு காப்பீடுதிட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்
    X

    முந்திரி பயிர்களுக்கு காப்பீடுதிட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

    அரியலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் முந்திரி பயிர்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்

    அரியலூர்,

    அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர்

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து: அரியலூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான மக்காச்சோளப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் விவசாயிக ளுக்கு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கத்தில் யூரியா தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன்: அரியலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டரில் முந்திரி விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது முந்திரி கொட்டைக்கு விலையில்லாத தால் விவசாயிகள் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மானியத்தில் முந்தி ரிக்கு அணைப் போட்டு (கரை அமைத்து)கொடுக்க வேண்டும். முந்திரிக்கு காப்பீடு திட்டம் கொண்டு வரவேண்டும்.மக்காச்சோளம் பயிரால் நஷ்டமடைந்த விவசாயிக ளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்.

    அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம்: அரியலூர் மாவட்டத்தி லுள்ள காவிரி டெல்டா பகுதிகளில் நிகழாண்டு சாகுபடி செய்ய இயலாத விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொ)பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபா சங்கரி மற்றும் அனைத்து துறை அலுவ லர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×