search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி"

    • மேலூர் அருகே இன்று நடந்த விபத்தில் கார் மோதி பழ வியாபாரி பலியானார்.
    • பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம் பட்டியை அடுத்துள்ள அய்யாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் புயல்ராஜ் என்ற ராஜீவ்காந்தி (வயது38). இவர் அங்குள்ள நான்கு வழிச்சாலையில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    இன்று காலை ராஜீவ்காந்தி நான்கு வழிச்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக புயல்ராஜ் மீது மோதிவிட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து கொட்டாம்பட்டி ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புயல்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை மேலூர் அருகே போலீசார் விரட்டி பிடித்தனர். காைர ஓட்டி வந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் உள்ள காற்றாலை அருகே இறந்து கிடந்தார்
    • தேவஅருள் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட்டை சேர்ந்தவர் தேவ அருள் (வயது 53). இவர் நெசவாளர் காலனி பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவரது மகனுக்கு திருமணம் நடந்தது. அதன்பிறகு தேவஅருள் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்நிலையில் அவர் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் உள்ள காற்றாலை அருகே இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து இறந்திருப்பது தெரியவந்தது. இது பற்றி அக்கம் பக்கத்தினர் ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து தேவஅருள் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • கஞ்சா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகிறார்கள்
    • 100-க்கு மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    கன்னியாகுமரி,நாகர்கோவில்,தக்கலை,குளச்சல் சப்-டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தனி படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கஞ்சா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்து வருகிறார்கள். பலர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வர்களின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    கடந்த 6 மாதத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.10-க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 100-க்கு மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கஞ்சா வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் கொரியர் மூல மாக கஞ்சா புழக்கத்திற்கு வருவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கொரியர் நிறுவனங்களிலும் போலீ சார் சோதனை மேற் கொண்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.

    ரெயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. ெரயில்வே போலீசார் உதவியுடன் ரெயில்களிலும் போலீசார் அதிரடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தீப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவிலுக்கு வந்த ரெயிலில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது பேக் ஒன்று அனாதை யாக கிடந்தது.

    அந்த பேக்கை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தபோது சிறிய சிறிய கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அதிலிருந்து ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.கஞ்சாவை கொண்டு வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது.
    • பூ மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் அருகே பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. பின்னர் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இதனால் அங்கு செயல்பட்டு வந்த பூக்கடைகள் திருப்பூர் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்தது.

    இந்தநிலையில் வீரராகவப்பெருமாள் கோவில் பூ மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் திருப்பூர் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்த பூக்கடை வியாபாரிகள் அங்கு செல்லவில்லை. மேலும் காட்டன் மார்க்கெட் வளாகத்திலேயே பூ மார்க்கெட் செயல்படும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து காட்டன் மார்க்கெட் பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில், காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட் கடைகள் அனைத்தும் தொடர்ந்து இதே வளாகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி-வியாபாரி உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காமராஜர் நகரை சேர்ந்தர் லட்சுமி(வயது40). இவரது மகள் முனீஸ்வரி(20). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே செல்போன் டவர் அமைத்தபோது அதில் வேலை செய்த ஒருவருடன் முனீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வியாபாரி

    மல்லாங்கிணறு அருகே உள்ள கண்டியநேந்தல் பகுதியை சேர்ந்தவர் அஜித்(21). காய்கறி வியா பாரம் செய்து வருகிறார்.வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து அஜித்தின் தாய் மாரி யம்மாள் மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி

    ஏழாயிரம்பண்ணை தேவர் நகரை சேர்ந்தவர் மோகன்(56). இவரது முதல் மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அப்போது 4 மாத பெண் குழந்தையை அவர் தத்தெடுத்து வளர்த்தார்.அதன்பின்னர் பாண்டிசெல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. வளர்ப்பு மகள் தற்போது 10-ம் வகுப்பு முடித்துள்ளார். பிளஸ்-1 சேர்ப்பதற்காக சாத்தூரில் உள்ள பள்ளிக்கு அழைத்து செல்வதாக அவரிடம் மோகன் கூறியுள்ளார்.

    அதிகாலையில் பார்த்தபோது மகளை காணவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்ைல. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஏழாயிரம்பண்ணை போலீசில் மோகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னறர்.

    மாணவன்

    சாத்தூர் சத்திரப் பட்டியை சேர்ந்தவர் பொன்னுகிளி. இவரது மகன் சாத்தூர் பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறார். குருலிங்காபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு திரு விழாவுக்காக சென்றார். அவரது கையில் ரூ.1000 பணம் கொடுத்து பாட்டி ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்ை. இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் பொன்னுகிளி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குருக்கள்பட்டியை சேர்ந்த அய்யாத்துரை மளிகை கடை நடத்தி வந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 65). இவர் அங்கு மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று மாலை அங்குள்ள மெயின் ரோட்டில் அய்யாத்துரை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அய்யாத்துரை தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். கார் நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    அதை ஓட்டி வந்த வேப்பங்குளத்தை சேர்ந்த அருணாசலம் மற்றும் அவருடன் வந்த 2 பேர் என 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன் கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அய்யாத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆடைகள் வாங்கியதற்கான பணத்தை காசோலையாக கொடுத்தனர்.
    • திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் உற்பத்தியாளர்கள் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் திருப்பூரில் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் சிறிய அளவில் நடத்தி வருகிறோம். எங்களிடம் சென்னை தி.நகரில் ஆடை விற்பனை நிறுவனம் நடத்தி வந்த ராமச்சந்திரன், ராஜேஷ், ரத்தன் ஆகியோர் ஆடைகள் வாங்கி தொழில் செய்து வந்தனர்.

    ஆடைகள் வாங்கியதற்கான பணத்தை காசோலையாக கொடுத்தனர். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாமல் ரிட்டன் ஆகி விட்டது. அவர்கள் இது போல் திருப்பூரில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களிடம் ரூ.11கோடியே 62 லட்சத்து 64ஆயிரத்து 218க்கு ஆடைகள் வாங்கி பணம் கொடுக்காமல் உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இது பற்றி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பண மோசடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • கோழி வியாபாரி மாயமானார்.
    • அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் சண்முகா நகரை சேர்ந்த கோழி வியாபாரி சந்திரகுமார் (வயது55). இவருடைய மனைவி நாகரஞ்சனி. இவர்களது ஒரே மகன் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சந்திரகுமார் கரிசல்பட்டியில் உள்ள தனது உறவினர் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். மனைவி நாகரஞ்சனி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் வீட்டில் இல்லை. அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    அதில் வேலை விசயமாக வெளியூருக்கு போகிறேன் என்று எழுதியிருந்தார். இதையடுத்து தனது கணவரை நாகரஞ்சனி பல இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்காததால், தனது கணவர் மாயமானது குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.
    • எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    மதுரை:

    வெங்காயம் இல்லாத உணவை வீடுகளில் பார்க்க முடியாது. சமையலின் அத்தியாவசிய பொருட்களான வெங்காயம் தமிழகத்தில் போதிய அளவு விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    மதுரையில் கீழவெளி வீதியில் வெங்காயம் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயம் பல்வேறு பகுதிகளுக்கு மூட்டை மூட்டையாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    வெங்காயம் குளிர்கால பருவ பயிராகும். தற்போது இந்தியா முழுவதும் கோடை காலம் என்பதால் வெங்காய பயிர் விளைச்சல் குறைந்துள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்து மதுரை வெங்காய மார்க்கெட்டுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கு குறையாமல் வெங்காய மூட்டைகள் வருகின்றன.

    அவ்வாறு வரும் வெங்காயம் இங்கு நிலவும் அதிக வெப்ப சூழ்நிலை காரணமாக அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் இருந்து மதுரைக்கு லாரிகளில் வந்த சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் அழுகிவிட்டன. இதன் காரணமாக அதனை வைத்துக் கொள்ள முடியாமல் வியாபாரிகள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டினர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறோம். ஆனால் இங்கு நிலவும் வெப்பம் காரணமாக வெங்காயம் தாக்குபிடிக்க முடியாமல் அழுகி விடுகிறது. இதனால் எங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது என கவலையுடன் தெரிவித்தனர்.

    • வியாபாரியை வெட்டிய 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோபாலா. இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அனுப்பாண்டி, அழகு பாண்டி மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஆகிய 3 பேரும் மனோபாலாவின் கடைக்கு சென்று மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் மனோபாலாவுடன் தகராறில் ஈடுபட்டதோடு அரிவாளால் அவரை வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந் அவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின்பேரில் மனோபாலாவை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • காரைக்குடி அருகே தலையில் கல்லைபோட்டு காய்கறி வியாபாரி கொலை செய்யப்பட்டார்.
    • போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையை அடுத்த பெரியகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 45). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், முருகே சன் (22) என்ற மகனும் உள்ளனர். சூரக்குடி பகுதி யில் அடைக்கலம் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் தான் பார்த்து வந்த வியாபாரத்தை விட்டு விட்டு சில ஆண்டு களுக்கு முன்பு அடைக்கலம் வேலைக்காக திருப்பூருக்கு சென்றார். அங்கு ஒரு கம்பெனியில் வேலை பார்த்தபோது அடைக்கலத்துக்கும், வேறொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அடைக்கலம் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெரியகோட்டைக்கு அடைக்கலம் அந்த பெண்ணை அழைத்து வந்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த செயல் மகன் முருகேசனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக தந்தை-மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று இரவும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த முருகேசன் தந்தை அடைக்கலம் தலையில் கல்லை போட்டு தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை குறித்து தகவலறிந்த சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் முருகேசனை கைது செய்த னர்.

    வேறொரு பெண்ணை திருமணம் செய்து ெகாண்டு குடும்பம் நடத்தியதால் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஊரணியில் கார் மூழ்கியதில் வியாபாரி உயிர் தப்பினார்.
    • காரில் சிக்கியிருந்த ஜான்பாலை மீட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் ஜான்பால். வியாபாரியான இவர் வெளியூர் சென்று விட்டு காரில் ஊருக்கு வந்திருந்தார். சொக்கம்பட்டி விலக்கு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரின் முன் டயர் வெடித்தது.

    இதில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோர ஊரணியில் விழுந்து மூழ்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனே ஊரணியில் இறங்கி காரில் சிக்கியிருந்த ஜான்பாலை மீட்டனர்.

    மயங்கிய நிலையில் கிடந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×