search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி"

    • சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விழுப்புரம்:

    கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர்கள் ஜோய்ஆண்டனி (வயது 50), முரளி தாஸ் (48). இருவரும் நண்பர்கள். இவர்கள் திண்டிவனத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி சோபா செட் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஜோய்ஆண்டனி பலத்த ரத்த காயங்களுடன் தனியார் தங்கும் விடுதி வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக சென்ற போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக அவரது நண்பர் முரளி தாசை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் மது அருந்தியபோது, ஏற்பட்ட தகராறில் ஜோஸ்ஆண்டனி பலத்த காயம் அடைந்தது தெரியவந்தது. இருவருமே மது போதையில் இருப்பதால், போலீசாரால் சரியான முறையில் விசாரணை நடத்தமுடியவில்லை. அவர்களின் போதை தெளிந்தபின்னர் விசாரணை நடத்த போலீ சார் திட்டமிட்டுள்ளனர். காயமடைந்த ஜோஸ்ஆண்டனியில் கழுத்தில் காயம் உள்ளதால் அவ ரால் பேசமுடியவில்லை. அவருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருகே கட்டிப்பாளை யத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (50). பால் வியாபாரி.
    • சம்பவத்தன்று இரவு இவர் மாவுரெட்டிப்பட்டி அருகே வடுகபாளையத்தில் உள்ள முனியப்ப சாமி கோவில் திருவிழாவிற்கு சென்றார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருகே கட்டிப்பாளை யத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (50). பால் வியாபாரி. சம்பவத்தன்று இரவு இவர் மாவுரெட்டிப்பட்டி அருகே வடுகபாளையத்தில் உள்ள முனியப்ப சாமி கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு செல்ல தனது மொபட்டில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத இருவரில் பின்னால் அமர்ந்து வந்த ஒருவர் கட்டையால் பாலுசாமியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த அவரது உறவினர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாலுசாமி சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வேலகவுண்டம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பாலுசாமியை கட்டையால் தாக்கிவிட்டு தலைமறைவான நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணிக்கம் மொரட்டாண்டியில் வாடகை வீடு எடுத்து தங்கி பாய் வியாபாரம் செய்து வருகிறார்.
    • புதுவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.

    விழுப்புரம்:

    திருச்சி மாவட்டம் துவாரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 70). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள மொரட்டாண்டியில் வாடகை வீடு எடுத்து தங்கி பாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பாய் வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்பினார். வானூர் அருகேயுள்ள டோல்கேட்டை கடந்து வீட்டிற்கு செல்ல முயற்சித்தார். அப்போது திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணிக்கத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், இன்று காலை அவர் இறந்து போனார். இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வம் தினமும் குடித்து விட்டு மனைவியும் பிள்ளை களையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
    • செல்வம் தன் மனைவியை பார்ப்ப தற்காக விஜயபுரத்திற்கு வந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் விஜயபுரத்தை சேர்ந்த மலர் (வயது 50). இவருடைய மகள் ராசாத்தி (30) இவரது கணவர் செல்வம் (45) ஆடுகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செல்வத்துக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் தினமும் குடித்து விட்டு மனைவியும் பிள்ளை களையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படு கிறது. இதனால் மனம் உடைந்த ராசாத்தி சின்ன சேலம் விஜயபுரத்தில் உள்ள தனது தாயார் மலர் வீட்டில் தன் பிள்ளை களுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் செல்வம் தன் மனைவியை பார்ப்ப தற்காக விஜயபுரத்திற்கு வந்தார்.பின்னர் மனைவி ராசாத்தியிடம் நகைகளை கேட்டார். இதனால் இரு வருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த செல்வம் தனது மனைவி ராசாத்தி மற்றும் அவரது தாய் மலரையும் கட்டையால் தாக்கினார். இதில் மாமியார் மலரின் மண்டை உடைந்தது. இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ராசாத்தி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்த னர்.

    • 5 பேருக்கு வலைவீச்சு
    • சிறிது நேரத்தில் 2 பைக்குகளில் வந்த 4 பேர் வில்சனுடன் சேர்ந்து தங்கராஜை கையால் தாக்கினர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் மரமடியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் வில்சன். தற்போது இவர் ரீத்தாபுரம் பேரூராட்சி ஒற்றப்பனவிளையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கராஜ் குளச்சல் துறைமுக பழைய பாலம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வில்சன், தங்கராஜிடம் பேசுவதற்கு செல்போன் கேட்டார். செல்போனில் காசு தீர்ந்து போச்சு பேச முடியாது என தங்கராஜ் கூறினார். இதனால் வில்சனுக்கு தங்கராஜ் மீது முன் விரோதம் ஏற்பட்டது. நேற்று மதியம் தங்கராஜ் வழக்கம்போல் துறைமுக பழைய பாலம் பகுதியில் நண்பர் மரிய ஜாணுவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மீண்டும் வந்த வில்சன் போனில்,அவரது நண்பர்களை செல்போனில் அழைத்தார். பின்னர் சிறிது நேரத்தில் 2 பைக்குகளில் வந்த 4 பேர் வில்சனுடன் சேர்ந்து தங்கராஜை கையால் தாக்கினர்.

    இதை தடுத்த மரிய ஜாணையும் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் தங்கராஜிக்கு கன்னங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தங்கராஜ் குளச்சல் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மரிய ஜாண் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து குளச்சல் போலீசார் வில்சன் 2 பைக்குகளில் வந்த கண்டால் தெரியும் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வியாபாரியை கடத்தி சென்று தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா நோக்கன் கோட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது32). மதுரை அப்பன் திருப்பதியை சேர்ந்தவர் தங்க பிரகாஷ். இருவரும் கட்டிடங்களுக்கு தேவை யான பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.

    இதனால் தொழில் போட்டி காரணமாக இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று 5 பேர் கொண்ட கும்பல் முத்துக்குமாரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். இதுகுறித்து கே.புதூர் போலீஸ் நிலையத்தில் முத்துகுமாரின் சகோதரர் குமரன் சேதுபதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முத்துக்குமாரை சிலர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில் முத்துக்குமாரின் இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார் அங்கிருந்து அவரை மீட்டு வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அப்பன்திருப்பதியை சேர்ந்த தங்கபிரகாஷ், தங்கம், சர்வேயர் காலனி சரவணன், கே.புதூர் முன்னமலை, எஸ்.கொடிக் குளம் ராமர் ஆகிய 5 பேர் அவரை கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கப்பிரகாஷ், தங்கம், சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

    • அரை கிலோ தக்காளி ரூ.100-க்கு வாங்குவதற்கு பதிலாக ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்குவதால் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது
    • ஒரே நாளில் ரூ.30, 50 என கூடுதலாகி தற்போது தக்காளி கிலோ ரூ.180-லிருந்து ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    தக்காளி விலை கடந்த 2 மாதமாக கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புதுவை அருகே பொதுமக்கள் ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்கி குழம்பு, ரசம், சட்னிக்கு பயன்படுத்தும் சுவாரசிய சம்பவம் நடந்து வருகிறது.

    ஆசியாவிலேயே பெரிய மார்க்கெட் என்று அழைக்கப்படும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்து வருவதால் கடந்த ஜூன் மாதம் 1 கிலோ தக்காளி ரூ.100-யை தொட்டது. தொடர்ந்து தக்காளியின் விளைச்சல் குறைவு காரணமாக வரத்து குறைந்ததால் ஒரே நாளில் ரூ.30, 50 என கூடுதலாகி தற்போது தக்காளி கிலோ ரூ.180-லிருந்து ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு தக்காளி வாங்கி வரப்பட்டு இங்கு மொத்தம் மற்றும் சில்லறைக்கு விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் இருந்து புதுவை மட்டுமல்லாது புதுவை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் இங்கிருந்து மூட்டை கணக்கில் மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரிகள் தக்காளியை வாங்கி கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    தற்போது தக்காளியின் விலை கிலோ ரூ.180-லிருந்து ரூ.200-ஐ எட்டி உள்ள நிலையில் புதுவை அருகே தமிழக பகுதியான பட்டானூர் பகுதியில் ஒரு சிலர் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் வாங்கி அதனை சட்னி, குழம்பு, ரசம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தினக்கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் சமையலுக்கு தக்காளி பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர்.

    தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 110 கிராம் தக்காளி (டொமோட்டோ சாஸ்) சாஸ் ரூ.15-க்கு கிடைக்கிறது. 100 கிராம் தக்காளி சாஸ் செய்வதற்கு 300 கிராமிலிருந்து இருந்து அரை கிலோ வரை தக்காளி தேவைப்படும்.

    அரை கிலோ தக்காளி ரூ.100-க்கு வாங்குவதற்கு பதிலாக ரூ.15-க்கு தக்காளி சாஸ் வாங்குவதால் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது. மளிகைக் கடைகளில் விற்கப்படும் தக்காளி சாஸில் இனிப்பு சுவை இருப்பதால் அவற்றுடன் சமையலுக்கு புளி, மிளகாய் ஆகியவற்றை கூடுதலாக சேர்த்து இயற்கையான சுவையை பெற முடிகிறது என்றார். இதனால் இந்த பகுதி மக்கள் ஏராளமானோர் தற்போது தக்காளி சாஸ்க்கு மாறி உள்ளனர்.

    • வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் முகமதுஷாபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் முத்துபால்பாண்டி(வயது 39). இவர் மதுரையில் கண்கண்ணாடி கடை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி.

    நேற்று முத்துபால் பாண்டிக்கு பிறந்தநாள் என்பதால் மனைவி புவனேஸ்வரி, தாய் கமலம் மற்றும் குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று கொண் டாட முத்துபால்பாண்டி முடிவு செய்தார். இதற்காக இரவு 9.30 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்ற னர். நகைபெட்டிகளை அருகேயுள்ள முட்புதர்களில் வீசி சென்றனர்.

    பிறந்தநாள் கொண்டாடத்தினை முடித்துவிட்டு இரவு 10.45 மணிக்கு முத்துபால்பாண்டி குடும்பத்தினருடன் வீடு திரும்பினர்.வீடு திறந்து கிடக்கவே உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

    இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் தலைமையில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகைநிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    சம்பவம் நடைபெற்ற வீடு மதுரை - விருதுநகர் நான்குவழிச்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் திருட்டு சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் முத்துபால் பாண்டி வீட்டில் திருடிய பின்பு நான்குவழிச்சாலை வழியாக தப்பி சென்றி ருக்கலாம் என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் உதவியுடன் திருமங்கலம் டவுன் போலீசார் விசா ரணை நடத்திவருகின்றனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • ராஜசேகர் ரெட்டிக்கு தெரிந்த நபர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லதின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு அவதி அடைந்து வந்தார்.

    இந்நிலையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கடந்த 20 நாட்களில் ராஜசேகர் ரெட்டிக்கு ரூ.30 லட்சம் வருவாய் கிடைத்தது. இதனால் ராஜசேகர் ரெட்டி திடீரென லட்சாதிபதியானார்.

    நேற்று ராஜசேகர் ரெட்டி தக்காளி வியாபாரத்தை முடித்துக் கொண்டு வசூலான பணத்துடன் தனது பைக்கில் வந்தார். அவரை மர்மநபர்கள் வழி மறித்தனர்.

    அவரை கை, கால்களை கட்டி மறைவான இடத்திற்கு கடத்தி சென்றனர். அங்கு ராஜசேகர ரெட்டியிடம் பணத்தைக் கேட்டு அடித்து துன்புறுத்தினர்.

    அவர் பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் ராஜசேகர் ரெட்டியை அடித்து கொலை செய்தனர்.

    பின்னர் பிணத்தை வீசிவிட்டு சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் ராஜசேகர் ரெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ராஜசேகர ரெட்டியிடம் உள்ள ரூ.30 லட்சத்தை பறிக்க அவரை கடத்திச் சென்று துன்புறுத்தியதாகவும் பணம் தர மறுத்ததால் அவரை கொலை செய்து வீசியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    ராஜசேகர் ரெட்டிக்கு தெரிந்த நபர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலத்தில் இருந்து கீழே விழுந்த வியாபாரி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நெல்பேட்டை காயிதே மில்லத் 6-வது தெருவை சேர்ந்தவர் முகமது நாசர். இவரது மகன் முகமது தாஹா (30). இவர் பிளாஸ்டிக் பைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அபியா பேகம் என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

    நேற்று ஏ.வி. மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேகமாக பிரேக் பிடித்துள்ளார். இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது தாஹா பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் முகமது தாஹாவின் மனைவி அபியா பேகம் புகார் செய்தார். போக்குவரத்து புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியின் சுடிதார் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் ரிங்கிள் காணப்பட்டார்.
    • ரிங்கிளுக்கு மது அருந்தும் போது மனநிலை பாதிப்பு ஏற்படுமாம்

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் முளங்கோட்டு விளையைச் சேர்ந்தவர் ரிங்கிள் வயது (வயது 40). இவருக்கு மேரி ஜின்சிரா என்ற மனைவியும் 3 மற்றும் 6 வயதில் 2 மகள்களும் உள்ளனர்.

    ரிங்கிள் அந்த பகுதியில் சொந்தமாக காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று ரிங்கிள் வீட்டின் அறையிலும், மனைவி ஹாலிலும் படுத்துள்ளனர். இந்த நிலையில் அதிகாலையில் அறையில் மின்விசிறியில் மனைவியின் சுடிதார் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் ரிங்கிள் காணப்பட்டார்.

    இதனை கண்ட மேரி ஜின்சிரா அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தவர்கள் உதவியுடன் கணவர் ரிங்கிளை மீட்டு ஆசாரிப்பள்ளம அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரிங்கிள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திருவட்டார் போலீசில், மேரி ஜின்சிரா புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் ரிங்கிளுக்கு மது அருந்தும் போது மனநிலை பாதிப்பு ஏற்படுமாம். நேற்று முன் தினம் காலையில் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு வீட்டினுள் சுற்றிக் கொண்டி ருந்தார். மாலையில் அவரை அருகில் உள்ள சர்ச்சுக்கு அழைத்துச் சென்று ஜெபம் செய்துள்ளனர். பின்னர் மனைவியுடன் நாகர்கோவில் பால்பண்ணை அருகில் உள்ள மனநல மருத்துவ னைக்குச் அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் இல்லாததால் ஆஸ்பத்திரியில் உள்ளவர்கள் மறுநாள் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள். இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    • சமூக வலைதளங்களில் வீடியோ வைரலால் பரபரப்பு
    • திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சி க்கு ட்பட்ட திருவட்டார் பாலத்தின் அருகில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மீன் சந்தை தினமும் காலை 8 மணி முதல் செயல்பட தொடங்கி மதியம் 12 மணி வரை செயல்படும். இத னால் காலையில் மிகவும் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும்.

    மீன் சந்தையின் அருகில் அரசு மதுபானகடை செயல்பட்டு வருகிறது. அரசு மதுபான கடை 12 மணிக்கு தான் செயல்படும். ஆனால் இரவில் கடையில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி அதிகாலை முதல் மறைமுகமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அதிகாலை முதல் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

    மீன் சந்தை வளாகத்தில் அதிகாலை முலே மதுவிற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்நி லையில் இங்கு மீன் வாங்க வந்த பொதுமக்களிடம் மீன் வியாபாரி ஒருவர் மதுபோதையில் மீன் வெட்டும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். 'மீன் வாங்க வந்தால் வெட்டுவேன் என கத்தியை காட்டி அவர் கூறியது மீனையா?, ஆளையா? என்பது தான் தெரிய வில்லை என பொதுமக்கள் கூறி சென்றனர். இந்த காட்சிகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் மொபைல் போனில் படம் பிடித்தனர். தொடர்ந்து அந்த காட்சிகள் சமூக வலைத ளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து தகவலறிந்த திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×