வியாபாரியை கடத்தி சென்று தாக்கிய 3 பேர் கைது

வியாபாரியை கடத்தி சென்று தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.
வியாபாரியை கடத்தி சென்று தாக்கிய 3 பேர் கைது
Published on

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா நோக்கன் கோட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது32). மதுரை அப்பன் திருப்பதியை சேர்ந்தவர் தங்க பிரகாஷ். இருவரும் கட்டிடங்களுக்கு தேவை யான பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.

இதனால் தொழில் போட்டி காரணமாக இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று 5 பேர் கொண்ட கும்பல் முத்துக்குமாரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். இதுகுறித்து கே.புதூர் போலீஸ் நிலையத்தில் முத்துகுமாரின் சகோதரர் குமரன் சேதுபதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முத்துக்குமாரை சிலர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில் முத்துக்குமாரின் இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார் அங்கிருந்து அவரை மீட்டு வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அப்பன்திருப்பதியை சேர்ந்த தங்கபிரகாஷ், தங்கம், சர்வேயர் காலனி சரவணன், கே.புதூர் முன்னமலை, எஸ்.கொடிக் குளம் ராமர் ஆகிய 5 பேர் அவரை கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கப்பிரகாஷ், தங்கம், சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com