பாலத்தில் இருந்து கீழே விழுந்த வியாபாரி பலி

பாலத்தில் இருந்து கீழே விழுந்த வியாபாரி பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலத்தில் இருந்து கீழே விழுந்த வியாபாரி பலி
Published on

மதுரை

மதுரை நெல்பேட்டை காயிதே மில்லத் 6-வது தெருவை சேர்ந்தவர் முகமது நாசர். இவரது மகன் முகமது தாஹா (30). இவர் பிளாஸ்டிக் பைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அபியா பேகம் என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று ஏ.வி. மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேகமாக பிரேக் பிடித்துள்ளார். இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது தாஹா பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் முகமது தாஹாவின் மனைவி அபியா பேகம் புகார் செய்தார். போக்குவரத்து புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com