சின்னசேலத்தில் மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய வியாபாரி கைது

செல்வம் தினமும் குடித்து விட்டு மனைவியும் பிள்ளை களையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. செல்வம் தன் மனைவியை பார்ப்ப தற்காக விஜயபுரத்திற்கு வந்தார்.
சின்னசேலத்தில்  மனைவி மற்றும் மாமியாரை தாக்கிய வியாபாரி கைது
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் விஜயபுரத்தை சேர்ந்த மலர் (வயது 50). இவருடைய மகள் ராசாத்தி (30) இவரது கணவர் செல்வம் (45) ஆடுகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செல்வத்துக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் தினமும் குடித்து விட்டு மனைவியும் பிள்ளை களையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படு கிறது. இதனால் மனம் உடைந்த ராசாத்தி சின்ன சேலம் விஜயபுரத்தில் உள்ள தனது தாயார் மலர் வீட்டில் தன் பிள்ளை களுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் செல்வம் தன் மனைவியை பார்ப்ப தற்காக விஜயபுரத்திற்கு வந்தார்.பின்னர் மனைவி ராசாத்தியிடம் நகைகளை கேட்டார். இதனால் இரு வருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த செல்வம் தனது மனைவி ராசாத்தி மற்றும் அவரது தாய் மலரையும் கட்டையால் தாக்கினார். இதில் மாமியார் மலரின் மண்டை உடைந்தது. இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ராசாத்தி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்த னர்.

X

Maalai Malar
www.maalaimalar.com