வானூர் டோல்கேட் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி சாவு

மாணிக்கம் மொரட்டாண்டியில் வாடகை வீடு எடுத்து தங்கி பாய் வியாபாரம் செய்து வருகிறார். புதுவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.
வானூர் டோல்கேட் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி சாவு
Published on

விழுப்புரம்:

திருச்சி மாவட்டம் துவாரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 70). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள மொரட்டாண்டியில் வாடகை வீடு எடுத்து தங்கி பாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பாய் வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்பினார். வானூர் அருகேயுள்ள டோல்கேட்டை கடந்து வீட்டிற்கு செல்ல முயற்சித்தார். அப்போது திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணிக்கத்தை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், இன்று காலை அவர் இறந்து போனார். இது குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com