search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரணி"

    • வாணி ஊரணியை பொதுமக்கள் தூர்வாரினர்.
    • தூர்வாரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஊரணியை ஊராட்சி மன்றத் தலைவர் பார்வையிட்டு பாராட்டினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த வாணி கிராமத்தில் மன்னர் காலத்தில் தானமாக வழங்கப்பட்ட குளம் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இதனை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    வாணி ஊரணி பெரிய பரப்பளவை கொண்டதால் அதனை தூர்வார அதிகளவில் நிதி செலவினம் ஆகும். இதனால் தூர்வாறும் பணி தாமதமானது.

    இதுகுறித்து தற்போதைய கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் சக்கரக்கோட்டை ஊராட்சி மூலம் ரூ.2 லட்சம் நிதி வழங்க பரிந்துரைத்தார். அதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் செ.யாழினி புஷ்பவள்ளி நிதியை அனைத்து சமுதாய மக்களிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து வாணி கிராம ஜமாத்தார்கள், அனைத்து சமுதாய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றி ணைந்து வாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் ரூ. 20 லட்சம் வரை திரட்டினர்.

    அதனை தொடர்ந்து ஊரணியை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பொதுமக்களின் சீரிய முயற்சியால் தூர்வா ரப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஊரணியை ஊராட்சி மன்றத் தலைவர் பார்வை யிட்டு பாராட்டினார்.அதனைத் தொடர்ந்து மழை வேண்டி அனைத்து சமுதாய மக்களால் பிரார்த் தனை செய்யப்பட்டது.

    • ராஜபாளையத்தில் ஊரணி சுற்றுப்பாதை பணிகள் நகர்மன்ற தலைவி பார்வையிட்டார்.
    • பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி 27-வது வார்டில் கருப்பஞானியார் கோவில் அருகே வடுக ஊரணி உள்ளது. இந்த ஊரணியை சுற்றி சுற்றுப்பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது நகராட்சி சார்பில் சுற்றுப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சுற்றுப்பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுற்று வட்டார பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அந்த பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்க அவர்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

    இதில் தி.மு.க நகர செயலாளர் ராமமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுமதி ராமமூர்த்தி, வீரலட்சுமி, ராமலட்சுமி, குருசாமி, மாரியப்பன், . நாகேஸ்வரன், கோவில் தர்மகர்த்தா டாக்டர் ஆறுமுகபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊரணியில் மூழ்கி முதியவர் பலியானார்.
    • மூழ்கி பலியானவர் சாத்தங்குடியைச் சேர்ந்த அய்யர் என்பது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள சாத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் இன்று காலை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுபற்றி பொதுமக்கள் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர் பிணத்தை மீட்டனர்.

    விசாரணையில் ஊரணியில் மூழ்கி பலியானவர் சாத்தங்குடியைச் சேர்ந்த அய்யர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊரணியில் கார் மூழ்கியதில் வியாபாரி உயிர் தப்பினார்.
    • காரில் சிக்கியிருந்த ஜான்பாலை மீட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் ஜான்பால். வியாபாரியான இவர் வெளியூர் சென்று விட்டு காரில் ஊருக்கு வந்திருந்தார். சொக்கம்பட்டி விலக்கு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரின் முன் டயர் வெடித்தது.

    இதில் தாறுமாறாக ஓடிய கார் சாலையோர ஊரணியில் விழுந்து மூழ்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனே ஊரணியில் இறங்கி காரில் சிக்கியிருந்த ஜான்பாலை மீட்டனர்.

    மயங்கிய நிலையில் கிடந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தேவகோட்டையில் ஊரணி மற்றும் குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்- நகர் மன்றத்தலைவர் உறுதியளித்தார்.
    • முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அன்பரசன் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தேவகோட்டை,

    தேவகோட்டை நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர் மன்றத்தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அன்பரசன் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ் பேசுகையில், யூனியன் ஸ்டாப் அருகே திருப்பத்தூர் சாலையில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்படும் முன் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டும் என்றார்.

    நகர்மன்றத்தலைவர் பதிலளிகையில், திருப்பத்தூர் சாலையில் ராம்நகரில் இருந்து ஒத்தக்கடை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இதில் நகர்மன்ற உறுப்பினர் பாலமுருகன் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    நகர்மன்ற உறுப்பினர் அய்யப்பன், தனது வார்டில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தியதற்கு நன்றி தெரிவித்தார். நகர்மன்ற உறுப்பினர் முத்தழகு, நகராட்சியில் அதிக வரி விதிப்பு காரணமாக மக்கள் சிரமப்படுகின்றனர். அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அதற்கு ஆணையாளர் தமிழகம் முழுவதும் ஒரே ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது என்றார்.

    நகர் மன்ற உறுப்பினர் பாலமுருகன் நகரில் உள்ள ஊரணி மற்றும் குளங்களை பொதுமக்கள் குடிநீருக்காகவும், குளிப்பதற்காகவும் பயன்படுத்தி வந்தனர் ஆனால் தற்போது ஊரணி, குளங்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது அதனை தூர்வாரி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த நகர் மன்றத்தலைவர் தற்பொழுது கால்வாய்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. அதே போல நகரில் உள்ள ஊரணி மற்றும் குளங்கள் தூர்வாரப்படும் என்றார்.

    • ரூ.31 லட்சம் செலவில் ஊரணியை தூர்வாரி பராமரிக்க பூமிபூஜை நடந்தது.
    • 20ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஊரணி பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட சவக்கட்டு ஊரணி 20ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படாமல் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது. அதனை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து சவக்கட்டு ஊரணி தூர்வாரபட்டு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, கம்பி வேலி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

    நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமை தாங்கினார். இதில் நகர் மன்ற பொறியாளர், கவுன்சிலர்கள் அன்புமணி, சண்முக ராஜன், விஜயகுமார், அயூப்கான், ராமதாஸ், ஆறு சரவணன், கீதாகார்த்திகேயன், மதியழகன், வழக்கறிஞர் ராஜஅமுதன், ஒப்பந்ததாரர் மதி, தொழில்நுட்ப பிரிவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×