ஊரணி சுற்றுப்பாதை பணிகள் நகர்மன்ற தலைவி ஆய்வு

ராஜபாளையத்தில் ஊரணி சுற்றுப்பாதை பணிகள் நகர்மன்ற தலைவி பார்வையிட்டார். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
பொதுமக்களிடம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் குறைகளை கேட்டறிந்தார்.
பொதுமக்களிடம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் குறைகளை கேட்டறிந்தார்.
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் நகராட்சி 27-வது வார்டில் கருப்பஞானியார் கோவில் அருகே வடுக ஊரணி உள்ளது. இந்த ஊரணியை சுற்றி சுற்றுப்பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது நகராட்சி சார்பில் சுற்றுப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சுற்றுப்பாதை அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுற்று வட்டார பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அந்த பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்க அவர்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

இதில் தி.மு.க நகர செயலாளர் ராமமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுமதி ராமமூர்த்தி, வீரலட்சுமி, ராமலட்சுமி, குருசாமி, மாரியப்பன், . நாகேஸ்வரன், கோவில் தர்மகர்த்தா டாக்டர் ஆறுமுகபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com