search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரணி மற்றும் குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்
    X

    தேவகோட்டை நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

    ஊரணி மற்றும் குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்

    • தேவகோட்டையில் ஊரணி மற்றும் குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்- நகர் மன்றத்தலைவர் உறுதியளித்தார்.
    • முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அன்பரசன் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தேவகோட்டை,

    தேவகோட்டை நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர் மன்றத்தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அன்பரசன் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ் பேசுகையில், யூனியன் ஸ்டாப் அருகே திருப்பத்தூர் சாலையில் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்படும் முன் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டும் என்றார்.

    நகர்மன்றத்தலைவர் பதிலளிகையில், திருப்பத்தூர் சாலையில் ராம்நகரில் இருந்து ஒத்தக்கடை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இதில் நகர்மன்ற உறுப்பினர் பாலமுருகன் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு வண்டிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    நகர்மன்ற உறுப்பினர் அய்யப்பன், தனது வார்டில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தியதற்கு நன்றி தெரிவித்தார். நகர்மன்ற உறுப்பினர் முத்தழகு, நகராட்சியில் அதிக வரி விதிப்பு காரணமாக மக்கள் சிரமப்படுகின்றனர். அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அதற்கு ஆணையாளர் தமிழகம் முழுவதும் ஒரே ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையில் உள்ளது என்றார்.

    நகர் மன்ற உறுப்பினர் பாலமுருகன் நகரில் உள்ள ஊரணி மற்றும் குளங்களை பொதுமக்கள் குடிநீருக்காகவும், குளிப்பதற்காகவும் பயன்படுத்தி வந்தனர் ஆனால் தற்போது ஊரணி, குளங்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது அதனை தூர்வாரி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதில் அளித்த நகர் மன்றத்தலைவர் தற்பொழுது கால்வாய்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. அதே போல நகரில் உள்ள ஊரணி மற்றும் குளங்கள் தூர்வாரப்படும் என்றார்.

    Next Story
    ×