search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி"

    • தென்மாவட்டங்களின் வளர்ச்சியே எனது வாழ்நாள் லட்சியம் என்று ராம.சீனிவாசன் பேசினார்.
    • பல போராட்டங்களை முன்னெடுத்தன் மூலம் விரைவில் திருமங்கலத்தில் எய்ம்ஸ் கட்டிடம் எழும்ப உள்ளது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்ப ரங்குன்றம் மதுரை மாநகர் ஆகிய இடங்களில் பா.ஜ.க. மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் பிறந்தநாள் விழா கூட்டம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் முன்னிலை வகித்தார்.

    இதில் கருமுத்து கண்ணன், தென் இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் ஆகியோர் பேசினர். இதில் ராம சீனிவாசன் பேசியதாவது:-

    தமிழகத்தில் தென் மாவட்டங்களின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டும் என்பது தான் எனது வாழ்நாள் ஆசை, லட்சியம், கனவு ஆகும்

    அந்த கனவை நோக்கித் தான் நான் வேகமாக அடியெடுத்து வைத்து கொண்டு இருக்கிறேன்.அதில் முதல்படியாக மதுரைக்கு எய்ம்ஸ் வர வேண்டும் என்று பல போராட்டங்களை முன்னெடுத்தன் மூலம் விரைவில் திருமங்கலத்தில் எய்ம்ஸ் கட்டிடம் எழும்ப உள்ளது. விருதுநகரில் ரூ. 200 கோடியில் ஜவுளி பூங்கா திட்டம் அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்ற முன்வராத மாநில அரசை கண்டித்து அறபோராட்டங்களை செய்ய இருக்கிறேன்.

    அதே போல் கிரானைட் குவாரி ஏழை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க தாமரை யாத்திரை மேற்கொண்டதின் பலனாக விரைவில் குவாரிகள் திறக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க இன்றளவும் பல போராட்டங்களை நடத்தி வருகிறேன்.

    தென்மாவட்டங்களின் சிறுகுறு தொழில், கைவினை தொழிலாளர்கள், வாழ்வாதாரங்களை காக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்திராமனிடம் போராடி ஜி.எஸ்.டி.யை குறைத்தும், பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கும் பெற்று தந்திருக்கிறேன்.

    திரைப்படங்களில் தென்மாவட்டங்களை அடிதடி, ரவுடிசம், என்று ரத்த களறி பூமியாயாக காட்டுகிறார்கள். அந்த மனநிலையை மாற்ற வேண்டும். தென்பகுதிகளில்தான் சுற்றுலா தளங்கள் ஏராளமாக உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்த ஆன்மீக தளங்கள் உள்ளன.

    சிவனை வணங்குவதாக இருந்தால் கூட தென்னாடுடைய சிவனே போற்றி என்றுதான் வணங்குறோம். அவ்வாறாக இயற்யுகையும், ஆன்மீகமும் இணைந்த தென்மாநிலங்கள் வளர்ச்சி அடைய என் உடம்பில் சக்தி இருக்கும்வரை போராடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் 1000 பேருக்கு வேட்டி, சேலைகளும், 1000 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. திருமங்கலம் நகர் ரெட்டி நலசங்கம் சார்பில் பேராசிரியர் ராம.சீனிவாசனுக்கு வாழ்த்து தெரிவித்து மரியாதை செய்யபட்டது. இதில் முரளிராமசாமி, மோனிகா சதீஷ், திருமலை,லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளி தொழிற்கூடங்கள் அமைப்ப–தற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம்வி ளங்குகிறது.

    அரசு இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.

    இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

    தற்போது தொழில்முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து சுற்றுச்சூழலுக்கு எவ்வகையிலும் மாசு ஏற்படுத்தாத நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.

    மேலும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

    இது முதல்-அமைச்சரின் கனவுத் திட்டம் ஆகும்.

    எனவே சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும். தொழில்முனைவோரும்

    வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், அனைத்து தொழில் முனைவோரும் முன்வரவேண்டும்.

    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி- துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம், No:30/3 நவலடியான் காம்ப்ளக்ஸ், முதல் தளம், தாந்தோணிமலை கரூர் - 639005. கைபேசி எண்: 9444656445, 9092590486.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.
    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார். ச.செருக்கலை, இருட்டணை, மேல்சாத்தம்பூர், குன்னமலை வருவாய் கிராமங்களில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது செருக்கலை கிராமத்தில் தரிசு நில மேம்பாடு தொகுப்பில் பருத்தி, சோளம், ஆமணக்கு பயிர்களின் வளர்ச்சி அதன் மூலம் விவசாயிகள் பெற்ற பலன்களை ஆய்வு செய்தார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார். ஆய்வின் போது விவசாயி சுமதி தனது நிலத்தில் உள்ள சீமை கருவேல் மரங்களை வயலில் இருந்து வெட்டி எடுத்து மீண்டும் பயிர் செய்ய உள்ளதை எடுத்துக்கூறினார்.

    விதை கிராம திட்டத்தின் கீழ் மேல்சாத்தம்பூர் கிராமத்தில் நிலக்கடலை டி.எம்.வி-14 (சான்று விதை) விவசாயி சந்திரசேகர் பயிர் செய்துள்ளார் அவரது வயலில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில் நுட்பங்களான விதை நேர்த்தி செய்தல், அடியுரம், மேலுரம், களவன்கள் களைதல், நுண்ணூட்டம் இடுதல், விதை கிராம திட்டத்தின் கீழ் பதிவுகள் செய்யும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    விவசாயிகளுக்கு கோடைஉழவு, விதைசான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது, விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்டங்கள், பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி கரைசல் தெளிப்பு, பருவத்திற்கேற்ற பயிர், பயிர் சுழற்சி, பயிர் இடைவெளியினை பராமரிப்பது, ஊற்றமேற்றிய தொழு உரமிடுதல், உயிர் உரங்களை பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ஜெகதீசன் (மத்தியத்திட்டம்),.ராஜ கோபால் (மாநிலத்திட்டம்) மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி விதை அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஜன், பிரபு, பூபதி, கவுசல்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பிறந்தநாளை யொட்டி காமராஜர் குறித்து பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் திருத்துறை–ப்பூண்டி இணைந்து நடத்திய பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்தங்கராசு தலைமை வகித்தார். சோமநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர், கோ.பழனி, ஊராட்சி மன்றத்தலைவர், இரா.சதீஷ்குமார், ஊராட்சி துணை தலைவர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.தனபாலன் உதவி தலைமை ஆசிரியர் வரவேற்றார். ராய் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முனைவர் நா.துரை ராயப்பன், ரோட்டரி சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

    உத்தமசோழன், ஆசிரியர் கிழக்கு வாசல் சிறப்புரையாற்றினார். காமராஜர் குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ராய் டிரஸ்ட் சார்பாக பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ரோட்டரி சங்கத் தலைவர் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். யோகராசன் பட்டதாரி ஆசிரியர் நன்றி கூறினார். ஏற்பாட்டை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் கோவி. வேதகிருஷ்ணன் மற்றும் ப.வரதராஜன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • பிரதமர் மோடி ஆட்சியில் நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளதாக விழாவில் மத்திய மந்திரி பேசியுள்ளார்.
    • உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலத்தில் இன்று நடந்தது.

    திருமங்கலம்

    உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பா.ஜ.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலத்தில் இன்று நடந்தது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் மற்றும் அடுப்பு, தொழிலாளருக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மத்திய அரசின் பிரதமர் மோடி ஆட்சியில் ஏழை மக்கள், கடைக்கோடி தொண்டனுக்கும் திட்டங்கள் போய் சேருகின்றன. ஜல்சக்தி திட்டத்தின் மூலம் கிராமங்களில் வீடு, வீடாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு ரூ.6 ஆயிரத்தை மோடி வழங்கி வருகிறார்.

    இலவச கேஸ் வழங்கப்பட்டு வருகிறது. வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. டெக்ஸ்டைல் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையில் 8 ஆண்டு களில் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று உள்ளது. தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மருத்துவ வசதி கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை இந்த சாதனைகளில் ஒன்றாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில பொது செயலாளர் சீனிவாசன் மாவட்டத் தலைவர் சுசீந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், நிர்வாகிகள் ஓம்முருகன், சரவணகுமார், தமிழ்மணி, சின்னசாமி, விக்னேஸ்வரன், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • கன்னியாகுமரி மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந் தாய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட ரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    பொது சுகாதாரத்துறை யின் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் முககவசங்கள் மற்றும் கை கழுவும் திரவம் ஆகியவற்றை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பினை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை குறித்த காலத் திற்குள் முடிக்க சம்பந்தப் பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கட்டு மான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்தத்தாரர்களை இனம் கண்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சி சார்பாக செயல்படுத்தி வரும், கூட்டு குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை பணிகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தி னரால் குழாய்கள் அமைக்க தோண்டப்படும் சாலைகளை மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்த ஏற்றவாறு சீர்படுத்தி, சாலை விபத்தினை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.

    குழாய் அமைக்கும்போது தோண்டப்படும் குழிகளால் ஆபத்து ஏற்படாத வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். தங்கள் பணிகளில் மெத்தன போக் காக இருக்கக்கூடாது. அவ்வாறு இருக்கும் பட்சத் தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    பேரூராட்சிகளில் நெகிழி இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு தங்கும் இடங்கள், உணவகங்கள் மற்றும் கடைகளில் செயல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படுவ தோடு, ஒரு மாத காலம் கடைகளை சீல் வைக்க வேண்டும்.

    அனைத்து துறை அலுவலர்களும் நமது மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முழு முயற்சியோடு பாடுபட வேண்டும். பணிகளில் எவ்வித சுணக்கமும், தொய்வுமின்றி செயல்பட வேண்டும். தவறும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசி னார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல் மங்கை உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் சத்துணவு மையத்தில் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு, ஜூலை. 6-

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குள்ளம்பாளையம் மற்றும் சீனாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பெருந்துறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் ரூ.51.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பாதாள சாக்கடை திட்ட வீட்டு இணைப்புகளுக்கு வழங்கும் பணி, பெருந்துறை தினசரி மார்க்கெட் பகுதியில் மூல தன நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு செய்யும் பணி மற்றும் பெருந்துறை அக்ரகார வீதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதி திட்டத்தின் ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் பொது அறிவு சார் மையம் மற்றும் நூலக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.

    முன்னதாக பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் சத்துணவு மையத்தில் உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் துடுப்பதி ஊராட்சியில் செயல்படுத்த ப்பட்டு வரும் 21 விவசாயிகளின் 17.15 ஏக்கர் தரிசு நிலங்களை கலெக்டர் பார்வையிட்டு திட்ட முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஆயிகவுண்டன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.34.20 லட்சம் மதிப்பீட்டில் புதியகு ளம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து குள்ளம்பாளையம் அடுத்த மேட்டு ப்பாளையம் பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் ரூ.4.68 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.30 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர் உறிஞ்சி குழி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.37 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம்,

    ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் தனிநபர் கழிப்பறை மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.6.79 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, குள்ளம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ரேசன் கடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

    முன்னதாக கலெக்டர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த பேறு கால அறுவை சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பிரிவு ரத்த பரிசோதனை மையம் மருத்துவகிடங்கு மையம் மற்றும் கொரோனா சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது பெருந்துறை அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட சமூகநல அலுவலர் சண்முக வடிவு, பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பெருந்துறை வட்டா ரவளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • குறிச்சியில் உள்ள தமிழ்பால் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
    • கூட்டத்தில் அதிக விற்பனை வளர்ச்சியை எட்டி சாதனை படைத்த 3 விநியோகஸ்தர்களை பாராட்டி தலா 2 கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ்பால் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே குறிச்சியில் உள்ளது. இங்கு விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அதிக விற்பனை வளர்ச்சியை எட்டி சாதனை படைத்த 3 விநியோகஸ்தர்களை பாராட்டி தலா 2 கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் செயல் இயக்குனர் தியாகராஜன், ஆலோசகர் செல்வன்ராஜ், விற்பனைதுறை மற்றும் மனிதவள மேம்பாடு ஆலோசகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு விநியோகஸ்தர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    விழாவில் செயல் இயக்குனர் தியாகராஜன் பேசும்போது: -

    அடுத்து வரவிருக்கும் அனைத்து விற்பனையின் வளர்ச்சியை ஆரோக்கியமான போட்டியாக எடுத்து கொண்டு அனைத்து விநியோகஸ்தர்களும் பங்கு பெற்று தங்க நாணயம் பெரும்படி வாழ்த்துகிறேன் என்றார்.இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும், தஞ்சை மற்றும் அரியலூர் சேர்ந்த விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர். தமிழ் பால் நிறுவனம் 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்தி வரும் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    • அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் மைக்கேல் பாளையம், பிரம்மதேசம் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் தொகுப்பு நிலத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

    இதன்படி மானாவாரி நிலங்களில் உள்ள விவசாயிகளை பதிவு செய்து போர்வெல் அமைத்து வேளாண்மை தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் நுண்ணீர் பாசன வசதி செய்து கொடுத்து நிலத்தின் தன்மை, நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிர் சாகுபடி மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

    மேலும் இக்கிராமங்களில் செயல்படும் அனைத்து துறைகளில் மானியத் திட்டங்கள், தென்னங்கன்றுகள், உளுந்து விதைகள், பண்ணைக் குட்டைகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் கல் வரப்பு மற்றும் மண் பரப்பு போன்ற திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு திட்டம் சிறப்பாக செயல்பட ஆலோசனை வழங்கினார்.

    ஆய்வின் போது வேளாண் இணை இயக்குனர் சின்னச்சாமி, துணை இயக்குனர்கள் அசோக், சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, வேளாண் பொறியியல் செயல் பொறியாளர் விஸ்வநாதன், வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தியூர் வட்டார வேளாண் அலுவலர் ஜெயக்குமார், துணை வேளாண் அலுவலர் முருகன் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் மூர்த்தி, செந்தில், பால–முருகன், சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கலெக்டர் நேரில் ஆய்வு
    • மழை நீர் தொட்டிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

     ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை, முதுமலை, சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட புத்தூர் வயல் பகுதியில் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர்அம்ரித் நேரில் பார்வையிட்டார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க, மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம் ஊட்டி, நீலகிரி குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம், ஆகிய 4 நகராட்சிப் பகுதிகளில் பொது மக்களின் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து, அதனை விரைவாகவும், தரமாகவும், முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட புத்தூர்வயல் பகுதியில், பழங்குடியினருக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.3 லட்சம் வீதம், ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் 32 பழங்குடியினர் மக்களுக்காக வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், ஸ்ரீமதுரை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், பயனாளி ஒருவரது வீட்டின் அருகில், ரூ.281 லட்சம் மதிப்பில், 10 ஆடுகள் கொண்டு, ஆட்டுகொட்டாய் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டேன்.

    அதே ஊராட்சியில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வீடுகளையும், முதுமலை ஊராட்சியில், 15-வது நிதிமானிய குழு திட்டத்தின் கீழ், குனில் பகுதியில் ரூ.5.14 லட்சம் மதிப்பீட்டில், மழைநீர் செல்லும் (வடிகால்) கால்வாய் முடிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டேன்.

    அதனைத் தொடர்ந்து, கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சேரங்கோடு ஊராட்சி அய்யன்கொல்லி பகுதியில் ரூ.48.65 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி சந்தை அமைக்கும் பணியினையும், நெலாக்கோட்டை ஊராட்சி, அம்பலமூலாவில் பிரதான் மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.7 கோடி மதிப்பில் அம்பலமூலா முதல் கொட்டாடு வரை மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணியினையும், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அம்பலமூலா பகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும்,

    நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வட்டக்கொல்லி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.2.09 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பண்ணைக் குட்டையினையும் என மொத்தம் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அவ்வாறு கட்டப்படும் வீடுகளில், மழை நீர் தொட்டிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதுபோல மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம் பல்வேறு வளர்ச்சிதிட்டப் பணிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது. பொது மக்களின் தேவைக்கு ஏற்ப 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 4 நகராட்சி பகுதிகளில் இது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் மாவட்டத்தில், இன்று ஒருங்கிணைந்த ேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் சேலம் மாவட்டத்தில் 86 கிராம பஞ்சாயத்துகளின் செயல்படுத்தப்படுகிறது.

    இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியி–யல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச்–சான்று மற்றும் அங்கச் சான்று துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பால்–வளத்–துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மின்சார வாரியம், பட்டு வளர்ச்சித்துறை, கதர் கிராம தொழில் வாரியம், வணிக வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து 86 பஞ்சா–யத்துகளிலும் மீண்டும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று முகாம் நடைபெற்றது.

    முகாமில் பட்டா மற்றும் சிட்டா வழங்குதல், உழவர் கடன் அட்டை விண்ணப்–பங்கள் பெறுதல், தகுதியுள்ள விவசாயிகளிடம் பி.எம்.கிசான் விண்ணப்பங்கள் பெறுதல், வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்கள் பெறுதல், பயிர்க்கடன், கால்நடை கடன் விண்ணப்பங்கள் பெறுதல், பயிர் காப்பீடு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கால்நடை–களுக்கு செயற்கை கருவூட்டல், மண் மாதிரி சேகரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முகாம் பணிகளை மாவட்ட வேளாண்மை அலுவலர் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமத்தி வட்டார கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்சாத்–தம்பூர், நடந்தை, ராமதேவம் மற்றும் கோதூர் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய திட்டங்களை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் வேளாண்மை அலுவலர் பாபு, தோட்டக்கலை அலுவலர் மஞ்சு, வேளாண்மை பொறியியல் துறையின் உதவி பொறியாளர் கோவிந்தன், மற்றும் வேளாண்மை துணை அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் வழங்கினர்.

    முகாமில் மானியத்துடன் கூடிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இடுபொருட்களும் வழங்கப்பட்டது. கோதூர் மற்றும் ராமதேவம் வருவாய் கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் டாக்டர் கலைசெல்வி மற்றும் டாக்டர்அனிதா ஆகியோரால் கால்நடை–களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

    கால்நடைகளுக்கான தடுப்பூசிகள், ஆடுகளுக்கு குடற்புழுநீக்க மருந்துகள், ஆடு மாடுகளுக்கான நுண்ணூட்ட கலவை தூள்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் கிசான் கடன் அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    சிறப்பு முகாம் ஏற்பாடுகளை பரமத்தி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஐன், பிரபு, கவுசல்யா, ரகுபதி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சத்தியராஜ், நவநீதகிருண்னன் மற்றும் அட்மா அலுவலர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தினர்.

    ×