அரசு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

பிறந்தநாளை யொட்டி காமராஜர் குறித்து பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Published on

திருத்துறைப்பூண்டி:

நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் திருத்துறை–ப்பூண்டி இணைந்து நடத்திய பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்தங்கராசு தலைமை வகித்தார். சோமநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர், கோ.பழனி, ஊராட்சி மன்றத்தலைவர், இரா.சதீஷ்குமார், ஊராட்சி துணை தலைவர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.தனபாலன் உதவி தலைமை ஆசிரியர் வரவேற்றார். ராய் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முனைவர் நா.துரை ராயப்பன், ரோட்டரி சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

உத்தமசோழன், ஆசிரியர் கிழக்கு வாசல் சிறப்புரையாற்றினார். காமராஜர் குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ராய் டிரஸ்ட் சார்பாக பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ரோட்டரி சங்கத் தலைவர் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். யோகராசன் பட்டதாரி ஆசிரியர் நன்றி கூறினார். ஏற்பாட்டை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் கோவி. வேதகிருஷ்ணன் மற்றும் ப.வரதராஜன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com