search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்ட"

    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    • ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். துணை தலைவி சண்முகவடிவு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அருண்காந்த், பிரேமலதா, ராஜேஷ், ஆரோக்கிய சவுமியா, பால்தங்கம், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் ஹெலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் சாலை, குடிநீர் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ரூ.20 லட்சம்‌ மதிப்பில்‌ கட்டப்பட்டு வரும்‌ ஒர்கிங்‌ சென்டர்‌ கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
    • உதவி செயற்பொறியாளர்கள்‌, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌, பொதுமக்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறை ஊராட்சி மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், மாங்கோடு மற்றும் புலியூர் சாலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பில் ரூ.10.40 லட்சம் மதிப்பில் மறு சீரமைக்கப்பட்டு வரும் கட்டிட பணிகளை பார்வை யிட்டேன். பணிகளை விரைந்து முடித்து குடியி ருப்பு பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மணியங்குழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணியும் ஆய்வு செய்யப்பட் டது.அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுய உதவி குழு கட்டிட பணி களை ஆய்வு மேற்கொண்ட தோடு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    கட்டுமான பணிகளின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட மாங்கோடு ஊராட்சி பகுதியில் பிர தான் மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.69 கோடி மதிப்பில் வெள்ளாடிச்சிப்பாறை-ஓடவள்ளி முதல் நெட்டா வரை 2,400 மீட்டர் நீளத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள தார் சாலையை பார்வை யிட்டேன். சாலை யின் தரம் ஆய்வு செய்யப் பட்டது. மேலும், புலி யூர்ச்சாலை ஊராட்சி யில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டி டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டு பேசியதாவது,

    தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி, நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது 2022-23-ம் ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகமாகும்.

    விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை திட்டம் விளக்குகிறது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டு பயிர் கடன் ரூ.4961.95 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ.1238.07 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ.115.34 கோடி, இதர விவசாய கடன்கள் ரூ.136.90 கோடி, விவசாயத்துக்கான கடன் மொத்த மதிப்பீடு ரூ.6452.27 கோடியாகவும், சிறுகுறு நடுத்தர தொழில் கடன் ரூ.3657.75 கோடி, ஏற்றுமதி கல்வி மற்றும் கடன் வசதிக்கான கடன் மதிப்பீடு ரூ.294.79 கோடி ஆகும்.

    அடிப்படை கட்டுமான வசதிக்கான கடன் ரூ.66 கோடி ஆகும். மகளிர் சுய உதவி குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் ரூ.757.80 கோடி என அனைத்து துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.11,274 கோடி கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்து அதற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப் படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்ற உதவும்.

    வேளாண்மையில் எந்திரமயமாக்கல் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். வங்கிகள் இது போன்ற முதலீடுகளுக்கு துணையாக இருக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் அளவில் முறையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி செயலாளர் ரமேஷ், முன்னாடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஓய்வூதியர்களின் முறையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஓய்வூதிய குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் (ஓய்வூதிய இயக்குநரகம்) ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.
    • 13315 ஓய்வூதிய புதிய மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை ஓய்வூதியர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல், நிலுவையில் உள்ள ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையிட்டு மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஓய்வூதிய குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தலைமையில், அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் (ஓய்வூதிய இயக்குநரகம்) ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஓய்வூதி யம், குடும்ப பாதுகாப்பு நிதி, புதிய மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு இனங்களில் பெறப்பட்ட 19 மனுக்கள் மீது உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி 6 பயனாளிகளுக்கு ரூ.74,297 மதிப்பிலான திருப்பப்பட்ட காசோலைகளை வழங்கினர். மேலும் 13315 ஓய்வூதிய புதிய மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை ஓய்வூதியர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. பின்னர் 5 ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் திரு.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அபர்ணா தேவி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாம் செல்லபிள்ளைகுட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட அனைத்து அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்பு முகாம் செல்லபிள்ளைகுட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் வரவேற்றார்.

    ஒன்றிய ஆணையர் சுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், முன்னிலையில் நடைபெற்ற முகாமில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் மற்றும் கூடுதல் துணை ஆட்சியர் கீதாபிரியா தலைமை வகித்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    இந்த முகாமில் வருவாய்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட அனைத்து அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    • கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அளுக்குளி திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 288 குடியிரு ப்புகளை மேலாண்மை இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • மேலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் அருகாமையில் உள்ள ேரஷன் கடை பற்றிய விபரங்களை மக்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 30 திட்டப்பகுதிகளில் 11,890 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதில் 1,184 குடியிருப்புகள் முடிவுற்று 997 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு குடியேற்றப் பட்டுள்ளார்கள்.

    பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7689 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 6316 கட்டிட பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் அளுக்குளி திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 288 குடியிரு ப்புகளை ஆய்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புதாரர்களிடம் குறைகளை கேட்டறிந்து உடன் சரிசெய்ய அதிகாரி களிடம் அறிவுறித்தினார்.

    மேலும் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி மற்றும் அருகாமையில் உள்ள ேரஷன் கடை பற்றிய விபரங்களை மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஈரோடு மாநகராட்சி க்குட்பட்ட பவானி சாலை பகுதி திட்டப்பகுதியில் அனை வருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் 336 குடியிருப்புகள் கட்டும் பணிகளைஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் மற்றும் பெரியார் நகர் திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 1072 குடியிருப்புகளை ஆய்வு செய்து குடியிருப்புகளை பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்க வீட்டுவசதி துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள ஆலமரத்து மேடு திட்டப்பகுதியில் ஆய்வு செய்து மக்களிடம் கலந்துரையாடி நிலுவை தொகையினை செலுத்தி விற்பனை பத்திரங்களை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுருத்தினார்.

    மேலும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டப்பணிகளைஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை வேளாண்மை இயக்குனரக கூடுதல் வேளாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் மைக்கேல் பாளையம், பிரம்மதேசம் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் தொகுப்பு நிலத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

    இதன்படி மானாவாரி நிலங்களில் உள்ள விவசாயிகளை பதிவு செய்து போர்வெல் அமைத்து வேளாண்மை தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை மூலம் நுண்ணீர் பாசன வசதி செய்து கொடுத்து நிலத்தின் தன்மை, நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பயிர் சாகுபடி மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

    மேலும் இக்கிராமங்களில் செயல்படும் அனைத்து துறைகளில் மானியத் திட்டங்கள், தென்னங்கன்றுகள், உளுந்து விதைகள், பண்ணைக் குட்டைகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் கல் வரப்பு மற்றும் மண் பரப்பு போன்ற திட்டங்களை ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு திட்டம் சிறப்பாக செயல்பட ஆலோசனை வழங்கினார்.

    ஆய்வின் போது வேளாண் இணை இயக்குனர் சின்னச்சாமி, துணை இயக்குனர்கள் அசோக், சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, வேளாண் பொறியியல் செயல் பொறியாளர் விஸ்வநாதன், வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தியூர் வட்டார வேளாண் அலுவலர் ஜெயக்குமார், துணை வேளாண் அலுவலர் முருகன் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் மூர்த்தி, செந்தில், பால–முருகன், சக்திவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    சேலம் மாவட்டத்தில், இன்று ஒருங்கிணைந்த ேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த திட்டம் சேலம் மாவட்டத்தில் 86 கிராம பஞ்சாயத்துகளின் செயல்படுத்தப்படுகிறது.

    இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியி–யல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச்–சான்று மற்றும் அங்கச் சான்று துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பால்–வளத்–துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மின்சார வாரியம், பட்டு வளர்ச்சித்துறை, கதர் கிராம தொழில் வாரியம், வணிக வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகள் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து 86 பஞ்சா–யத்துகளிலும் மீண்டும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று முகாம் நடைபெற்றது.

    முகாமில் பட்டா மற்றும் சிட்டா வழங்குதல், உழவர் கடன் அட்டை விண்ணப்–பங்கள் பெறுதல், தகுதியுள்ள விவசாயிகளிடம் பி.எம்.கிசான் விண்ணப்பங்கள் பெறுதல், வண்டல் மண் எடுக்க விண்ணப்பங்கள் பெறுதல், பயிர்க்கடன், கால்நடை கடன் விண்ணப்பங்கள் பெறுதல், பயிர் காப்பீடு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கால்நடை–களுக்கு செயற்கை கருவூட்டல், மண் மாதிரி சேகரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முகாம் பணிகளை மாவட்ட வேளாண்மை அலுவலர் கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பரமத்தி வட்டார கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்சாத்–தம்பூர், நடந்தை, ராமதேவம் மற்றும் கோதூர் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய திட்டங்களை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் வேளாண்மை அலுவலர் பாபு, தோட்டக்கலை அலுவலர் மஞ்சு, வேளாண்மை பொறியியல் துறையின் உதவி பொறியாளர் கோவிந்தன், மற்றும் வேளாண்மை துணை அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் வழங்கினர்.

    முகாமில் மானியத்துடன் கூடிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இடுபொருட்களும் வழங்கப்பட்டது. கோதூர் மற்றும் ராமதேவம் வருவாய் கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் டாக்டர் கலைசெல்வி மற்றும் டாக்டர்அனிதா ஆகியோரால் கால்நடை–களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

    கால்நடைகளுக்கான தடுப்பூசிகள், ஆடுகளுக்கு குடற்புழுநீக்க மருந்துகள், ஆடு மாடுகளுக்கான நுண்ணூட்ட கலவை தூள்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் கிசான் கடன் அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    சிறப்பு முகாம் ஏற்பாடுகளை பரமத்தி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஐன், பிரபு, கவுசல்யா, ரகுபதி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சத்தியராஜ், நவநீதகிருண்னன் மற்றும் அட்மா அலுவலர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தினர்.

    ×