தமிழ்பால் நிறுவனத்தில் விற்பனை வளர்ச்சியை அதிகப்படுத்திய விநியோகஸ்தர்களுக்கு பரிசளிப்பு விழா

குறிச்சியில் உள்ள தமிழ்பால் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.கூட்டத்தில் அதிக விற்பனை வளர்ச்சியை எட்டி சாதனை படைத்த 3 விநியோகஸ்தர்களை பாராட்டி தலா 2 கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
தமிழ்பால் நிறுவனத்தில் விற்பனை வளர்ச்சியை அதிகப்படுத்திய விநியோகஸ்தர்களுக்கு  செயல் இயக்குனர் தியாகராஜன், ஆலோசகர் செல்வன்ராஜ், விற்பனைதுறை மற்றும் மனிதவள மேம்பாடு ஆலோசகர் கார்த்திக் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
தமிழ்பால் நிறுவனத்தில் விற்பனை வளர்ச்சியை அதிகப்படுத்திய விநியோகஸ்தர்களுக்கு செயல் இயக்குனர் தியாகராஜன், ஆலோசகர் செல்வன்ராஜ், விற்பனைதுறை மற்றும் மனிதவள மேம்பாடு ஆலோசகர் கார்த்திக் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
Published on

தஞ்சாவூர்:

தமிழகத்தின் முன்னணி பால் நிறுவனமான தமிழ்பால் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே குறிச்சியில் உள்ளது. இங்கு விநியோகஸ்தர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிக விற்பனை வளர்ச்சியை எட்டி சாதனை படைத்த 3 விநியோகஸ்தர்களை பாராட்டி தலா 2 கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில் செயல் இயக்குனர் தியாகராஜன், ஆலோசகர் செல்வன்ராஜ், விற்பனைதுறை மற்றும் மனிதவள மேம்பாடு ஆலோசகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு விநியோகஸ்தர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

விழாவில் செயல் இயக்குனர் தியாகராஜன் பேசும்போது: -

அடுத்து வரவிருக்கும் அனைத்து விற்பனையின் வளர்ச்சியை ஆரோக்கியமான போட்டியாக எடுத்து கொண்டு அனைத்து விநியோகஸ்தர்களும் பங்கு பெற்று தங்க நாணயம் பெரும்படி வாழ்த்துகிறேன் என்றார்.இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும், தஞ்சை மற்றும் அரியலூர் சேர்ந்த விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர். தமிழ் பால் நிறுவனம் 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்தி வரும் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயிற்சி பட்டறை தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com