search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் திட்டப்பணிகளை   குடுமியான் மலை இயக்குநர் ஆய்வு
    X

    திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    வேளாண் திட்டப்பணிகளை குடுமியான் மலை இயக்குநர் ஆய்வு

    • பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார்.
    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான் மலை, சமிதி-ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் ஆய்வு மேற்கொண்டார். ச.செருக்கலை, இருட்டணை, மேல்சாத்தம்பூர், குன்னமலை வருவாய் கிராமங்களில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது செருக்கலை கிராமத்தில் தரிசு நில மேம்பாடு தொகுப்பில் பருத்தி, சோளம், ஆமணக்கு பயிர்களின் வளர்ச்சி அதன் மூலம் விவசாயிகள் பெற்ற பலன்களை ஆய்வு செய்தார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இருட்டணை கிராமத்தில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பு ஆய்வு செய்தார். ஆய்வின் போது விவசாயி சுமதி தனது நிலத்தில் உள்ள சீமை கருவேல் மரங்களை வயலில் இருந்து வெட்டி எடுத்து மீண்டும் பயிர் செய்ய உள்ளதை எடுத்துக்கூறினார்.

    விதை கிராம திட்டத்தின் கீழ் மேல்சாத்தம்பூர் கிராமத்தில் நிலக்கடலை டி.எம்.வி-14 (சான்று விதை) விவசாயி சந்திரசேகர் பயிர் செய்துள்ளார் அவரது வயலில் ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில் நுட்பங்களான விதை நேர்த்தி செய்தல், அடியுரம், மேலுரம், களவன்கள் களைதல், நுண்ணூட்டம் இடுதல், விதை கிராம திட்டத்தின் கீழ் பதிவுகள் செய்யும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    விவசாயிகளுக்கு கோடைஉழவு, விதைசான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது, விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்டங்கள், பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி கரைசல் தெளிப்பு, பருவத்திற்கேற்ற பயிர், பயிர் சுழற்சி, பயிர் இடைவெளியினை பராமரிப்பது, ஊற்றமேற்றிய தொழு உரமிடுதல், உயிர் உரங்களை பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ஜெகதீசன் (மத்தியத்திட்டம்),.ராஜ கோபால் (மாநிலத்திட்டம்) மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி விதை அலுவலர்கள் மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஜன், பிரபு, பூபதி, கவுசல்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×