search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகுப்பறை"

    • பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 1-ம்வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை உள்ளது. 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    வகுப்பறை கட்டிடம் : இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புகளான 11,12-ம்வகுப்பு மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லை.இதையறிந்த முன்னாள் மாணவர்கள் குழு 2 வகுப்பறைகள் கட்ட முடிவு செய்தனர். இதையடுத்து பள்ளியில் படித்தமுன்னாள் மாணவர்கள் பலரும் நிதி உதவி அளித்தனர். இதன் மூலம் ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இது குறித்து முன்னாள் மாணவரும் பள்ளி வளர்ச்சி குழு தலைவருமான ரத்தினசாமி கூறியதாவது:- 1950ம் ஆண்டுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியின் வளர்ச்சியை எங்களின் வளர்ச்சியாகவே கருதுகிறோம். ஆரம்பத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலை ,அதைத்தொடர்ந்து உயர் நிலை என்று இன்றைக்கு மேல்நிலையாக வளர்ந்து ள்ளது. இந்த பள்ளியோடு சுற்று வட்டாரத்தில் தொடங்கப்பட்ட பல பள்ளிகள் இன்னும் அதே நிலையில் உள்ளதுடன், சில பள்ளிகள் மூட வும் செய்யப்பட்டு விட்டன.

    பொதுத்தேர்வில் தேர்ச்சி : ஆனால் பொல்லிக்காளிபாளையம் பள்ளி ஆலமரத்தின் விழுது களாக வளர்ந்து நிற்கிறது. நாங்கள் படித்த காலத்தில் சராசரியாக 300 பேர் படித்தார்கள். தற்போது தனியார் பள்ளிகளுடன் போட்டி போடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி, பிளஸ்-2வகுப்பில் கடந்த 5 ஆண்டுகளாக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் சூழல் தொடர்கிறது என்றார்.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியை அனிதா கூறுகையில், பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் குழு பக்க பலமாக உள்ளனர் என்றார். 

    • போதிய வகுப்பறை வசதிகளின்றி மாணவர்கள் மிகவும் சிரமம்.
    • விரைவில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சகடமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேலப்போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேஷமூலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

    பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் அரசாணையின் அடிப்படையில் இடிக்கப்ப ட்டுவிட்ட நிலையில், போதிய வகுப்பறை வசதி இன்றி மாணவர்கள் மிகுந்த சிரமங்களுடன் படித்து வருகின்றனர்.

    தற்காலிக கூடாரங்களிலும் தனியார் கட்டடங்களிலும் தற்போது பல பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    எனவே, விரைவில் இந்தப் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அரசு ஒதுக்கியுள்ள சிறப்பு நிதியின் மூலம் விரைவில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆய்வின் போது, தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வ.செங்கு ட்டுவன், வி.சி.க. ஒன்றிய செயலாளர் கு.சக்திவேல் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.
    • விரைவில் கழிவறை, விளையாட்டு மைதானத்துடன் கூடிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தரப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-வது நிதிகுழு சுகாதார மானியத்தின் (சுகாதார மானியம்) கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதை தொடர்ந்து கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்டது.

    தற்போது தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருவதை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விரைவில் கழிவறை, விளையாட்டு மைதானத்துடன் கூடிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என உறுதி அளித்தார்.

    இந்த ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல்,
    திட்டச்சேரி திமுக நகர செயலாளர் முகமது சுல்தான், கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,
    துணைத்தலைவர் சோபா பாரதிமோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் இடிக்கப்பட்டன.
    • ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் சேதம் அடைந்ததால் அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    இதனால் அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க ஷாநவாஸ் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் திருமருகல் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், சுல்தான் ஆரிப், கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன், ஊராட்சி செயலர் சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணி நேற்று தொடங்கியது.
    • பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.27 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணியையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஜே.எஸ்.டபுள்யூ. நிறுவனம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணி நேற்று தொடங்கியது.

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணை தலைவர் வேலுச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல், ஜே.எஸ்.டபுள்யூ நிறுவனம் சார்பில் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.27 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    • சாமிக்கவுண்டம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • சுவர்களில் செடிகள் முளைத்தும், கட்டடத்தில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரம் செம்மிபாளையம் ஊராட்சி, சாமிக்கவுண்டம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டடம் சுவர்களில் செடிகள் முளைத்தும், கட்டடத்தில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பள்ளி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது திடீரென பள்ளி கட்டட மேற்கூரையில் இருந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆசிரியரின் மேஜை மீது விழுந்தது.இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மேற்கூரை சிமெண்ட் பூச்சு சிறிது விழுந்துள்ளது. அப்போது மாணவர்கள் யாரும் வகுப்பறையில் இல்லை. ஆகவே யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.பழுதான கட்டடத்தின் பட்டியலில் இந்த கட்டடம் உள்ளது. 6 மாதத்துக்குள் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை மாணவர்களை தற்காலிகமாக அருகிலுள்ள உயர்நிலை பள்ளி கட்டடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி
    • மாணவ, மாணவிகளும் ஊக்கம் அடைந்துள்ளனர்

    குடிமங்கலம் :

    உடுமலை அடுத்த குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி.இவர் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    சமீபத்தில், தனது சொந்த செலவில் வகுப்பறைக்கு வர்ணம் பூசி, சக ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதேநேரம், இவரது செயலைக்கண்ட மாணவ, மாணவிகளும் ஊக்கம் அடைந்துள்ளனர்.இதன் காரணமாக பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து, தாங்கள் சேமித்த தொகையை திரட்டி, அவர்களே வகுப்பறைக்கு பெயின்ட் அடித்து ஆசிரியர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளின் செயலை தலைமையாசிரியர் பழனிசாமி, ஆசிரியர் உட்பட பலரும் வாழ்த்தினர்.

    • ஆரம்பப் பள்ளியில் ஆசிரியா் ஒருவா் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாா்.
    • பள்ளி மேற்கூரையில் மறைந்திருந்த பாம்பை சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினா் உயிருடன் பிடித்தனா்.

    தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்பாளையத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியா் ஒருவா் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்குள்ள பெஞ்சுக்கு அடியில் பாம்பு இருப்பதை பாா்த்த மாணவா்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடினா்.

    தகவலின்பேரில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து பள்ளியின் மேற்கூரையில் மறைந்திருந்த 6 அடி நீள நாக பாம்பை சுமாா் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் பிடித்தனா்.

    தாராபுரம் இறைச்சி மஸ்தான் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையில் பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். கட்டடத்தில் சுமாா் ஒரு மணி நேரம் தேடியும் பாம்பு கிடைக்கவில்லை. அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்திருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். முன்னதாக அங்கன்வாடி கட்டடத்தில் பாம்பு புகுந்த தகவலை அறிந்த பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்றனா்.

    • சேதமடைந்த வகுப்பறையில் சமையல் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • குழந்தைகளின் நலன்கருதி விரைவில் பணிகளை செய்து முடிக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுங்குராம்பட்டி கிராமம் உள்ளது. வடகரை பஞ்சாயத்திற்குட்பட்ட இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. 2 ஆசிரியர்கள் உள்ளனர். 50 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் ஒரு ஆசிரியரும், சமையலரும் உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையில் அங்கன்வாடி மைய சமையல் அறை இடிந்து விழுந்தது. இதனால் குழந்தைகளுக்கு சமையல் செய்ய இயலவில்லை.

    இதனை தொடர்ந்து அங்கன்வாடி மையத்திற்குள் குழந்தைகள் படிக்கும் அறையில் தற்போது சமையல் பணிகள் நடந்து வருகின்றன. இதே போல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓட்டு கட்டிடங்கள் மழைக்கு ஒழுகத் தொடங்கியதால் மழைகாலங்களில் மாணவ-மாணவிகள் திறந்தவெளியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வடகரை பஞ்சாயத்து கவுன்சிலர் பெரியகருப்பன் கூறுகையில், அங்கன்வாடி மையத்தின் சமையல் அறை சேதம் மற்றும் பள்ளிக்கட்டிடம் மழைநீருக்கு ஒழுகுவது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளேன். பஞ்சாயத்திலும் தகவல் கூறியுள்ளேன். குழந்தைகளின் நலன்கருதி விரைவில் பணிகளை செய்து முடிக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.

    • முத்தூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 16.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்.
    • தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் முத்தூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 16.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

    அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் முத்தூர் பேரூராட்சித்தலைவர் சுந்தராம்பாள் உள்ளனர்.

    • சுல்தான்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 2வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.
    • பள்ளி கட்டிடத்தை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    மங்கலம் :

    மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சுல்தான்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த வளாகத்தில் புதிதாக 2வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்புவிழா நிகழ்ச்சியானது பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.

    கட்டிடத்தை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியன்ட்மணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ராதா நந்தகுமார், ரேவதி முருகன், நடராஜ், பால்ராஜ், ஊராட்சி செயலாளர் ரமேஷ், சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பணன், சில்வர் சி.வெங்கடாசலம், மற்றும் தி.மு.க.வை சேர்ந்த அப்துல் பாரி, கோபால், முபாரக் ராஜா, சிவசாமி, ரவி, திருமூர்த்தி, கிரிபாலு, கோவிந்தராஜ், தேவராஜ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் ,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • அரசு உத்தரவுப்படி 40மாணவருக்கு 1 ஆசிரியர் நியமிக்கப்படவேண்டும்.
    • மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் 4 மட்டுமே உள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகராட்சி 54வது வார்டுக்குட்பட்ட வீரபாண்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது .6ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை மொத்தமாக 1975 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். தற்போது 11ம் வகுப்புக்கு அட்மிஷன் நடைபெறுகிறது. இப்பள்ளியில் அரசு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் மொத்தம் 38.இதில் பணிபுரிவோர்கள் 33.காலிப்பணியிடம் 5 உள்ளது.

    அரசு உத்தரவுப்படி 40மாணவருக்கு 1 ஆசிரியர் நியமிக்கப்படவேண்டும். அப்படிெயன்றால் 50ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 33 ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். வகுப்பறைகள் இருப்பது 22.வகுப்பறைகள் தேவை 21.மேல்நிலை கல்விக்கு தேவையான இயற்பியல். வேதியியல். உயிரியல் உட்பட்ட எந்த ஆய்வகமும் இல்லை. விளையாட்டு மைதானமும் இல்லை.900க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் பெண் உடற்கல்வி ஆசிரியரும் இல்லை.மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் 10. ஆனால் 4கழிப்பிடம் மட்டுமே உள்ளது.மாணவர்களுக்கு தேவையான கழிப்பிடம் 10.ஆனால் 2 கழிப்பிடம் மட்டுமே உள்ளது. இப்படி எல்லாவற்றிற்கும் தேவை இருக்கிறது.

    இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் தெரியப்படுத்தியும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பள்ளியில் வகுப்பறை, ஆசிரியர்கள் நியமனம் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×