search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரபாண்டி அரசு பள்ளியில் வகுப்பறைகள் இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்
    X

    இடம் இல்லாததால் 6-ம்வகுப்புகளுக்கு ஓரே இடத்தில் ஓரே நேரத்தில் வகுப்புகள் நடைபெற்றதை படத்தில் காணலாம்.

    வீரபாண்டி அரசு பள்ளியில் வகுப்பறைகள் இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்

    • அரசு உத்தரவுப்படி 40மாணவருக்கு 1 ஆசிரியர் நியமிக்கப்படவேண்டும்.
    • மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் 4 மட்டுமே உள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகராட்சி 54வது வார்டுக்குட்பட்ட வீரபாண்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது .6ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை மொத்தமாக 1975 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். தற்போது 11ம் வகுப்புக்கு அட்மிஷன் நடைபெறுகிறது. இப்பள்ளியில் அரசு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் மொத்தம் 38.இதில் பணிபுரிவோர்கள் 33.காலிப்பணியிடம் 5 உள்ளது.

    அரசு உத்தரவுப்படி 40மாணவருக்கு 1 ஆசிரியர் நியமிக்கப்படவேண்டும். அப்படிெயன்றால் 50ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 33 ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். வகுப்பறைகள் இருப்பது 22.வகுப்பறைகள் தேவை 21.மேல்நிலை கல்விக்கு தேவையான இயற்பியல். வேதியியல். உயிரியல் உட்பட்ட எந்த ஆய்வகமும் இல்லை. விளையாட்டு மைதானமும் இல்லை.900க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் பெண் உடற்கல்வி ஆசிரியரும் இல்லை.மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் 10. ஆனால் 4கழிப்பிடம் மட்டுமே உள்ளது.மாணவர்களுக்கு தேவையான கழிப்பிடம் 10.ஆனால் 2 கழிப்பிடம் மட்டுமே உள்ளது. இப்படி எல்லாவற்றிற்கும் தேவை இருக்கிறது.

    இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் தெரியப்படுத்தியும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பள்ளியில் வகுப்பறை, ஆசிரியர்கள் நியமனம் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×