சொந்த செலவில் வகுப்பறைக்கு வர்ணம் பூசிய ஆசிரியர்-மாணவர்கள்

குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி மாணவ, மாணவிகளும் ஊக்கம் அடைந்துள்ளனர்
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

குடிமங்கலம் :

உடுமலை அடுத்த குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி.இவர் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில், தனது சொந்த செலவில் வகுப்பறைக்கு வர்ணம் பூசி, சக ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதேநேரம், இவரது செயலைக்கண்ட மாணவ, மாணவிகளும் ஊக்கம் அடைந்துள்ளனர்.இதன் காரணமாக பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து, தாங்கள் சேமித்த தொகையை திரட்டி, அவர்களே வகுப்பறைக்கு பெயின்ட் அடித்து ஆசிரியர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளின் செயலை தலைமையாசிரியர் பழனிசாமி, ஆசிரியர் உட்பட பலரும் வாழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com