search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுல்தான்பேட்டை  அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு
    X

    மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி   

    சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

    • சுல்தான்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 2வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.
    • பள்ளி கட்டிடத்தை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    மங்கலம் :

    மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சுல்தான்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த வளாகத்தில் புதிதாக 2வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்புவிழா நிகழ்ச்சியானது பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.

    கட்டிடத்தை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியன்ட்மணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ராதா நந்தகுமார், ரேவதி முருகன், நடராஜ், பால்ராஜ், ஊராட்சி செயலாளர் ரமேஷ், சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பணன், சில்வர் சி.வெங்கடாசலம், மற்றும் தி.மு.க.வை சேர்ந்த அப்துல் பாரி, கோபால், முபாரக் ராஜா, சிவசாமி, ரவி, திருமூர்த்தி, கிரிபாலு, கோவிந்தராஜ், தேவராஜ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் ,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×