search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "misery"

    • வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது.
    • பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மதுரை:

    மதுரை அவனியாபுரத்தில் உள்ள அயன் பாப்பாக்குடியில் தொடர் மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து அதிக அளவில் கழிவு நீர் வெளியேறி வருகிறது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் மழை நீரோடு கலந்து அயன் பாப்பாக்குடி கண்மாயில் பாசன கால்வாயில் திறந்து விடப்படுகிறது.

    அத்துடன் பல்வேறு பகுதியிலிருந்து திறந்து விடப்படும் கழிவுநீரும் கண்மாயில் கலப்பதால் அயன்பாப்பாக்குடி கண்மாயிலிருந்து வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக செல்வதாலும், மறுகால் பாயும் பாலத்தின் அருகில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து இருப்பதாலும் நீரின் வேகத்தை அந்த ஆகாயத்தாமரைகள் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது.

    இந்த நுரையானது அங்கு மலை போல் பெருகி காற்றில் பறந்து அருகில் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் பறப்பதால் வாகன ஓடிகள் பெரிதும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று வெள்ளைக்கல் நுரை மலைபோல் எழுந்து விமான நிலையம் செல்லும் சாலை முழுவதும் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

    அந்த தினமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் கழிவு நீரால் உருவான நுரையால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 5 நாட்களாக இந்த சிரமத்தை சந்தித்து வரும் அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இனிமேலும் தாமதிக்காமல் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வெள்ளை கல்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஆலம்பூண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று காசிேவல் சென்ற மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    செஞ்சிஅருகே உள்ள பரதன் தாங்கல் என்ற ஊரை சேர்ந்தவர் காசிவேல் (வயது 51). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் ஆலம்பூண்டிக்கு சென்று விட்டு மீண்டும் பரதன்தாங்கல் வந்து கொண்டி ருந்தார். அப்போது செஞ்சியில் இருந்து ஆலம்பூண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று காசிேவல் சென்ற மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த காசிவேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த காசிவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி உஷா கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • அபிராமம் பகுதியில் கடும் வறட்சி காரணமாக 16 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆடு-மாடு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • பெருவாரியான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது வெயில் சுட்டெறிக்க தொடங்கி விட்டது. ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, தொண்டி, நயினார் கோவில், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் உட்பட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் இந்த ஆண்டு மேய்ச்சல் நிலங்களில் புல், செடி, கொடிகள் குறைவாக உள்ளதால் தேவையான இரை கிடைக்காமல் ஆடு, மாடுகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வைகை ஆற்றில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வந்தபோதும் கண்மாய்க ளுக்குச் செல்லும் நீர்வழி தடங்கள், கால்வாய், தடுப்பணைகள் சீரமைக்கப் படாததாலும் ஆக்கிரமிப்பு களாலும் பல கண்மாய்கள் வறண்டுள்ளன. மாவட் டத்தில் பெருவாரியான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன. இதனால் நீராதாரம் பாதிக்கப்படுவதால் மேய்ச்சல் நிலங்களும் வறண்டுள்ளது.

    காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது. பருவகாலங்கள் மாறியதாலும், பருவமழை பொய்த்ததாலும் அடர்ந்த காடுகள் இருந்த இடங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன.

    இந்த காலகட்டத்தில் மரங்களை நம்பி வாழும் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது.

    இதுபற்றி அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் ஒருவர் கூறுகையில், கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் மேய்ச்சல் நிலங்களும் வறண்டு உள்ளது. 10 கிலோ மீட்டர் முதல் 16 கிலோமீட்டர் தூரம் வரை சென்று ஆடு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    போதிய அளவு மேய்ச்சல் நிலம் இல்லாததால் ஆடு , மாடுகள் மிகவும் சிரமப்படுகிறது. இதே நிலைதொடருமானால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களாக மேய்ச்சல் உள்ள பகுதியை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

    • சேதமடைந்த வகுப்பறையில் சமையல் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • குழந்தைகளின் நலன்கருதி விரைவில் பணிகளை செய்து முடிக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுங்குராம்பட்டி கிராமம் உள்ளது. வடகரை பஞ்சாயத்திற்குட்பட்ட இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. 2 ஆசிரியர்கள் உள்ளனர். 50 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் ஒரு ஆசிரியரும், சமையலரும் உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையில் அங்கன்வாடி மைய சமையல் அறை இடிந்து விழுந்தது. இதனால் குழந்தைகளுக்கு சமையல் செய்ய இயலவில்லை.

    இதனை தொடர்ந்து அங்கன்வாடி மையத்திற்குள் குழந்தைகள் படிக்கும் அறையில் தற்போது சமையல் பணிகள் நடந்து வருகின்றன. இதே போல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓட்டு கட்டிடங்கள் மழைக்கு ஒழுகத் தொடங்கியதால் மழைகாலங்களில் மாணவ-மாணவிகள் திறந்தவெளியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வடகரை பஞ்சாயத்து கவுன்சிலர் பெரியகருப்பன் கூறுகையில், அங்கன்வாடி மையத்தின் சமையல் அறை சேதம் மற்றும் பள்ளிக்கட்டிடம் மழைநீருக்கு ஒழுகுவது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளேன். பஞ்சாயத்திலும் தகவல் கூறியுள்ளேன். குழந்தைகளின் நலன்கருதி விரைவில் பணிகளை செய்து முடிக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.

    ×