search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    16 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆடு-மாடு மேய்க்கும் அவலம்
    X

    16 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆடு-மாடு மேய்க்கும் அவலம்

    • அபிராமம் பகுதியில் கடும் வறட்சி காரணமாக 16 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆடு-மாடு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • பெருவாரியான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது வெயில் சுட்டெறிக்க தொடங்கி விட்டது. ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, தொண்டி, நயினார் கோவில், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் உட்பட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் இந்த ஆண்டு மேய்ச்சல் நிலங்களில் புல், செடி, கொடிகள் குறைவாக உள்ளதால் தேவையான இரை கிடைக்காமல் ஆடு, மாடுகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வைகை ஆற்றில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வந்தபோதும் கண்மாய்க ளுக்குச் செல்லும் நீர்வழி தடங்கள், கால்வாய், தடுப்பணைகள் சீரமைக்கப் படாததாலும் ஆக்கிரமிப்பு களாலும் பல கண்மாய்கள் வறண்டுள்ளன. மாவட் டத்தில் பெருவாரியான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன. இதனால் நீராதாரம் பாதிக்கப்படுவதால் மேய்ச்சல் நிலங்களும் வறண்டுள்ளது.

    காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது. பருவகாலங்கள் மாறியதாலும், பருவமழை பொய்த்ததாலும் அடர்ந்த காடுகள் இருந்த இடங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன.

    இந்த காலகட்டத்தில் மரங்களை நம்பி வாழும் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது.

    இதுபற்றி அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் ஒருவர் கூறுகையில், கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் மேய்ச்சல் நிலங்களும் வறண்டு உள்ளது. 10 கிலோ மீட்டர் முதல் 16 கிலோமீட்டர் தூரம் வரை சென்று ஆடு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    போதிய அளவு மேய்ச்சல் நிலம் இல்லாததால் ஆடு , மாடுகள் மிகவும் சிரமப்படுகிறது. இதே நிலைதொடருமானால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களாக மேய்ச்சல் உள்ள பகுதியை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

    Next Story
    ×