search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி"

    • பூதலூர் தாலூகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
    • மணல் ஏற்றி செல்லும் லாரிகளில் நேரக்கட்டுப்பாடு கொண்டு வர நடவடிக்கை.

    பூதலூர்:

    பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி மாணவ - மாணவி களுக்கு இடையூறாகவும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் மணல் ஏற்றி செல்லும் லாரிகளின் நேரத்தை காலை (8.30 முதல் 9.30) மாலை (3.30 முதல் 5.30) வரை தடுத்திடவும், மணல் லாரியின் மேல் தார் படுதா போட்டு மூடி ச்செல்லவலியுறுத்தி திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகில் சாலை மறியல் போராட்டம் நாளை (11.7.23)நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு அமைதி பேச்சுவார்த்தை பூதலூர் தாலூகாஅலுவலகத்தில் தாசில்தார் பெர்ஷியா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தஞ்சாவூர சுரங்கவியல் மற்றும் கண்காணிப்புக் கோட்ட உதவி செயற்பொறியாளர், ராஜா, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் ஏட்டு நெடுஞ்செழியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்காந்தி, கலைச்செல்வி, பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ரமேஷ் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் மணல் லாரியின் மேல் தார் படுதா போடாமல் வருபவர்கள் மீது உரிய அபராதத்தொகை காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலம் விதிக்கப்படும்.

    குவாரிகளில் இருந்து மணல் ஏற்றி செல்லும் லாரிகளின் நேரத்தை காலை 9.30 மணிவரையும் மாலை (3.30 முதல் 5.30) தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பள்ளி மாணவ -

    மாணவிகளுக்கு இடையூறு இல்லாமலும் பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பின்றியும் வேக்கட்டுப்பாட்டுடன் லாரிகளை இயக்கிட அறிவுறுத்தப்படும் முடிவெடுக்க ப்பட்டதை தொடர்ந்து நாளை நடத்தயிருப்பதாக இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டியில் லாரி வந்து கொண்டிருந்தது.
    • பேரிகார்டு மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை டிரைவர் திருப்பியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    கரூரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவர் கரூரில் இருந்து நாகைக்கு கட்டிட வேலைக்காக லாரியில் ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

    தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கிப்பட்டியில் லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அதில் இருந்த ஜல்லி முழுவதும் சாலையில் கொட்டியது. லாரியை ஒட்டி வந்த டிரைவர் ரத்தினகுமார் காயம் அடைந்தார்.

    உடனடியாக அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே ரத்தினகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

    முதல் கட்ட விசாரணையில் செங்கிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையின் உயர்மட்ட பாலம் சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் ஏற்கனவே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    விபத்துக்குள்ளான லாரி மேம்பாலம் அருகில் வந்த போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை டிரைவர் ரத்தினகுமார் திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்தது.

    இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெடுஞ்சாலை மத்தியில் வெள்ளை கோடு போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒரு வழியை அடைத்து அந்த இடத்தில் ஒரு வழிச்சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
    • கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தியது.

    பல்லடம்:

    கரூர் அருகே உள்ள பசுபதி பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சரண் (வயது 22). இவர் கோவை தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றவர், நேற்று கரூரில் இருந்து கோவை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். பல்லடத்தை அடுத்த பெரும்பாலி என்ற இடம் அருகே சென்ற போது, நெடுஞ்சாலை மத்தியில் வெள்ளை கோடு போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒரு வழியை அடைத்து அந்த இடத்தில் ஒரு வழிச்சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    அந்த வழியாக சென்ற போது, கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தியது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சரண் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சரண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து சரணின் தந்தை செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.
    • சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உளுந்தூர்பேட்டை:

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எருமை மாடுகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன. இவ்வாறு கேரளாவிற்கு கொண்டு செல்லும் எருமை மாடுகள், லாரிகளில் ஏற்றப்பட்டு நள்ளிரவு நேரங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை கடந்து செல்கிறது.

    அதேபோல, இன்று அதிகாலை 2 மணியளவில் 150-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை ஏற்றிக் கொண்டு 4 லாரிகள் உளுந்தூர்பேட்டை வழியாக வந்தன.

    இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து மகா சபை நிர்வாகிகள் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த லாரிகளை மடக்கி சிறை பிடித்தனர்.

    மாடுகள் சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், அதனை பிடித்து வைத்திருப்பதாகவும் புகார் செய்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் 4 லாரிகளையும் சோதனையிட்டனர். லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து லாரிகளை மடக்கி பிடித்த இந்து மகா சபை நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எருமை மாடுகளை சட்ட விரோதமாக கொண்டு சென்றால், அவைகள் கோசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் லாரி டிரைவர்களிடம் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து இந்து மகா சபா நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் எருமை மாடுகளை கேரளாவிற்கு கொண்டு செல்வதற்கான ஆவணங்களை போலீசாரிடம் லாரி டிரைவர்கள் காட்டினர். இதைத்தொடர்ந்து லாரிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • கோவையில் இருந்து கரூா் நோக்கி சென்ற லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன
    • படுகாயம் அடைந்த கார் ஒட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    காங்கயம்:

    காங்கயம், முத்தூா் பிரிவு அருகே கரூரில் இருந்து கோவை நோக்கி வந்த காரும், கோவையில் இருந்து கரூா் நோக்கி சென்ற லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. அப்போது, அருகிலிருந்தவா்கள் படுகாயமடைந்த காா் ஓட்டுநா், கரூா் மாவட்டம், வடக்கு காந்தி நகரைச் சோ்ந்த சக்திவேல் (35) என்பவரை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனா். 

    • டிரைவர் மீது வழக்கு
    • நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வாத்தி யார்விளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 52). இவர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேலைக்கு வந்த சதீஷ்குமார் அந்த பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சதீஷ்குமார் மீது மோதியது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் படுகாயத்துடன் கிடந்த சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் இன்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சதீஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
    • அரசின் கவனத்தை ஈர்க்க, கல்குவாரிகளுக்கு சொந்தமான 700க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளோம்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில் அனுமதி வழங்க வேண்டும், லைசென்ஸ் வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் ,சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் கடந்த 4 நாட்களாக பல்லடம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் இயங்கவில்லை. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் ஒரே இடத்தில் 700க்கு மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் கல்குவாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட குவாரி உரிமை யாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: -

    15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். சட்டத்திற்கு உட்பட்டு முறையான அனுமதி பெற்றுக்கொண்டு கல்குவாரிகள் நடத்தி வருகிறோம். சட்டவிரோதமாக கல்குவாரிகள் இயங்க வில்லை. கல்குவாரி தொழில் தொடர்ந்து நடத்த முடியாமல் கடுமையான சூழல் இருந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    அரசின் கவனத்தை ஈர்க்க, கல்குவாரிகளுக்கு சொந்தமான 700க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளோம். போராட்டத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரடியாக சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 2 லட்சம் தொழிலாளர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்த வாகனங்கள்
    • சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஒழுகின சேரி பகுதியில் பழைய ஆற்றின் மேல் பழமை வாய்ந்த குறுகலான பாலம் உள்ளது. இந்த பகுதியில் தினமும் காலை. மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    இதை சரி செய்ய போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க ஒழுகினசேரி பகுதியில் அடிக்கடி வாக னங்கள் பழுதாகி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. இன்று காலையிலும், நாகர்விலில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று ஒழுகினசேரி பகுதியில் மின் வயர் மீது உரசி நடுவழியில் நின்றது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவிலில் இருந்து நெல்லை சென்ற வாகனங்கள் வடசேரி வரையிலும், நெல்லையிலிருந்து நாகர் கோவில் வந்த வாகனங்கள் அப்டா மார்க்கெட் வரையிலும் நீண்ட வரிசையில் நின்றன. சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் நடுரோட்டில் மின் வயரில் சிக்கி நின்ற லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ½ மணி நேரத்திற்கு பிறகு லாரி நடுரோட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்கு வரத்து சீரானது. ஒழுகினசேரி பகுதியில் அமைந்துள்ள இரட்டை ரெயில் பாதை பணிக்காக பாலம் அமைக்கும் பணியும் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இருபுறமும் தூண்கள் அமைக்கப்பட்டு மணல்கள் நிரப்பும் பணி நடந்து வரு கிறது. பாலத்தின் மேல் தளம் கான்கிரீட் அமைப்பதற்கான பணி கிடப்பில் கிடக்கிறது. அந்த பணியை துரிதப்படுத்தி வேகமாக பாலத்திற்கான மேல் தளத்தை அமைத்து பஸ் போக்குவரத்தை பாலத்தின் வழியாக விடும்போது போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அந்த பால பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது

    • விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரிகள் தொடங்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் கல் குவாரிகளில் இருந்து தினமும் கேரளாவிற்கு கனிம வளங்கள் கனரக லாரிகளில் அதிகளவில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதற்கு தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரிகள் தொடங்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரிய கனரக லாரிகளுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என கூறியிருந்த நிலையில் இரவு நேரங்களில் புளியரை சோதனை சாவடி வழியாக ஆலங்குளம் வரையில் பிரம்மாண்ட லாரிகள் மின்னல் வேகத்தில் படையெடுத்து வருகின்றன.

    இதற்கு அதிகாரிகள் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக கூறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அவ்வப்போது கனிமவள லாரிகளை சிறை பிடித்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவில் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் இருந்து கேரளாவிற்கு எம்.சான்ட் ஏற்றி சென்ற லாரியின் தொட்டியில் இருந்த துவாரம் வழியாக எம். சாண்ட் மணல் சாலையில் கொட்டி கொண்டே சென்றதால் அதன் பின்னால் சென்ற வாகன ஓட்டிகளின் கண்களை எம்.சாண்ட் மண் பதம் பார்த்தது. உடனடியாக சில சமூக ஆர்வலர்கள் அந்த கனரக லாரியை பாவூர்சத்திரம் அடுத்து உள்ள கல்லூரணி விலக்கு அருகே வைத்து சிறை பிடித்தனர். மேலும் இது குறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், கேரளாவிற்கு தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மின்னல் வேகத்தில் செல்வதாகவும், விதிமுறைக்கு புறம்பாக கூடுதல் கனிம வளங்களை ஏற்றி செல்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தேங்காய் சிரட்டை முழுவதும் சாலையில் கொட்டியது.
    • மிகப்பெரிய விபத்து அந்த இடத்தில் தவிர்க்கப்பட்டது.

    பல்லடம் :

    காங்கேயம் பகுதியில் இருந்து பல்லடம் நோக்கி தேங்காய் சிரட்டை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென சாலையில் கவிழ்ந்து விழுந்தது.

    இதில் தேங்காய் சிரட்டை முழுவதும் சாலையில் கொட்டியது. இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த இடத்தில் கோவை மற்றும் பல்லடம் பகுதிக்கு செல்வதற்கான பேருந்து நிறுத்தம் என்பதால் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். அதிகாலை நேரம் என்பதால் அங்கு யாரும் இல்லை. இதனால் மிகப்பெரிய விபத்து அந்த இடத்தில் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • லாரியின் முன் பகுதியில் தாா்ப்பாய் தொங்கி கொண்டிருந்துள்ளது.
    • இரவு 7 மணிக்கு சங்ககிரிக்கு திரும்புவதற்காக லாரியை ஸ்டாா்ட் செய்துள்ளாா்.

    காங்கயம் :

    மதுரை மாவட்டம், இரவாடநல்லூரைச் சோ்ந்தவா் கண்ணன் (வயது 38). இவா், சங்ககிரியில் உள்ள தனியாா் டிரான்ஸ்போா்ட் கம்பெனியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் காங்கயத்தில் உள்ள அரிசி ஆலைக்கு நெல் லோடு இறக்குவதற்காக புதன்கிழமை வந்துள்ளாா். நெல் லோடு இறக்கிய பின் இரவு 7 மணிக்கு சங்ககிரிக்கு திரும்புவதற்காக லாரியை ஸ்டாா்ட் செய்துள்ளாா்.

    அப்போது லாரியின் முன் பகுதியில் தாா்ப்பாய் தொங்கி கொண்டிருந்துள்ளது. பின்னா், லாரியில் இருந்து இறங்கி தாா்ப்பாயை சரி செய்துள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக முன்னோக்கி நகா்ந்த லாரி எதிரே இருந்த சுவரின் மீது மோதியது. இதில், ஓட்டுநா் கண்ணன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக காங்கயம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    லாரி மோதி வாலிபர் பலியானார்.
    மதுரை

    மதுரை பொன்மேனி நேரு நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 21). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் சம்மட்டிபுரம்- காளவாசல் பைபாஸ் சந்திப்பு பகுதியில் சென்ற போது பின்புறமாக வந்த லாரி மோதியது. 

    இதில் ஆரோக்கியராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது லாரியின் பின் சக்கரம் தலையில் ஏறியது. இதில் படுகாயமடைந்த ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான வாலிபர்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு   மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து  லாரி டிரைவர் பிரபு என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×