search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்காட்டுப்பள்ளியில் நடக்க இருந்த மறியல் போராட்டம் ரத்து
    X

    திருக்காட்டுப்பள்ளியில் நடக்க இருந்த மறியல் போராட்டம் ரத்து

    • பூதலூர் தாலூகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
    • மணல் ஏற்றி செல்லும் லாரிகளில் நேரக்கட்டுப்பாடு கொண்டு வர நடவடிக்கை.

    பூதலூர்:

    பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி மாணவ - மாணவி களுக்கு இடையூறாகவும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் மணல் ஏற்றி செல்லும் லாரிகளின் நேரத்தை காலை (8.30 முதல் 9.30) மாலை (3.30 முதல் 5.30) வரை தடுத்திடவும், மணல் லாரியின் மேல் தார் படுதா போட்டு மூடி ச்செல்லவலியுறுத்தி திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகில் சாலை மறியல் போராட்டம் நாளை (11.7.23)நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு அமைதி பேச்சுவார்த்தை பூதலூர் தாலூகாஅலுவலகத்தில் தாசில்தார் பெர்ஷியா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தஞ்சாவூர சுரங்கவியல் மற்றும் கண்காணிப்புக் கோட்ட உதவி செயற்பொறியாளர், ராஜா, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் ஏட்டு நெடுஞ்செழியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்காந்தி, கலைச்செல்வி, பூதலூர் வடக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ரமேஷ் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் மணல் லாரியின் மேல் தார் படுதா போடாமல் வருபவர்கள் மீது உரிய அபராதத்தொகை காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலம் விதிக்கப்படும்.

    குவாரிகளில் இருந்து மணல் ஏற்றி செல்லும் லாரிகளின் நேரத்தை காலை 9.30 மணிவரையும் மாலை (3.30 முதல் 5.30) தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பள்ளி மாணவ -

    மாணவிகளுக்கு இடையூறு இல்லாமலும் பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பின்றியும் வேக்கட்டுப்பாட்டுடன் லாரிகளை இயக்கிட அறிவுறுத்தப்படும் முடிவெடுக்க ப்பட்டதை தொடர்ந்து நாளை நடத்தயிருப்பதாக இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    Next Story
    ×