search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்ஜ்"

    • சென்னையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகள் விருந்தினர்களின் வருகையால் நிரம்பி வழிகின்றன.
    • விடுதிகளின் அருகில் அறை கிடைக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    புயல் மழை காரணமாக சென்னையில் தரை தளங்களில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் உடனடியாக வடிந்து விடும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மழை ஓய்ந்து 4 நாட்களாகியும் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை.

    வீடுகளில் இருந்து வெள்ளம் வடிந்த இடங்களில் கூட வீடுகளுக்கும் அனைத்து பொருட்களும் சேதமாகி குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. ஓரிரு நாட்கள் மாடிகளில் இருந்த வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள் உணவு, குடிநீர் பிரச்சினை காரணமாக மின்சாரம் இருக்கும் உறவினர்களில் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல இயலாதவர்கள் லாட்ஜுகளில் அறை எடுத்து தங்குகிறார்கள். இதனால் சென்னையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகள் விருந்தினர்களின் வருகையால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து ஓட்டல்களுக்கு செல்கிறார்கள். முன்பதிவு செய்து சென்றாலும் பல லாட்ஜுகளில் அவர்கள் தங்குவதற்கு அறை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் விடுதிகளின் அருகில் அறை கிடைக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். சிலர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

    சென்னையில் லாட்ஜுகளுக்கு தட்டுப்பாடு நிலவியதால் பல லாட்ஜுகளில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் ஆக உயர்ந்தது. மேலும் ஓட்டல்களில் அறை கிடைத்தாலும் பால் மற்றும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்களின் உணவுத் தேவையை அவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

    • விபசார தடுப்பு போலீசார் பெரியமேடு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • முக்கிய குற்றவாளி தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மீட்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் விபசார தடுப்பு போலீசார் பெரியமேடு லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் மேற்கொண்ட இந்த வேட்டையில் கோவா, அந்தமான், டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் இருந்து வந்து விபசார தொழிலில் ஈடுபட்ட அழகிகள் பிடிபட்டனர்.

    விமானத்தில் வந்து இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ராஜஸ்தான் மாநில தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளி தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • டிரைவர் மீது வழக்கு
    • நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வாத்தி யார்விளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 52). இவர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேலைக்கு வந்த சதீஷ்குமார் அந்த பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சதீஷ்குமார் மீது மோதியது. இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் படுகாயத்துடன் கிடந்த சதீஷ்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலன் இன்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சதீஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது
    • புகாரில் தன்னை சிறை வைத்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

    நாகர்கோவில் :

    கடியப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 55).

    இவர், நாகர்கோவில் அருகே இறச்சகுளத்தில் உணவுப்பொருள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு காய்கறி மீன் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறார். இவருக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த சக்திவேல் (52) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஜெயபால் பணம் கொடுக்காததையடுத்து சக்திவேல் தனது நண்பர்களுடன் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தார்.

    நாகர்கோவிலில் தனது நண்பர்கள் உதவியுடன் ஜெயபாலை தேடினார். அப்போது ஜெயபால் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள லாட்ஜுல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேல் தனது நண்பர்களுடன் அந்த லாட்ஜுக்கு சென்றார். அங்கு அறையில் இருந்த ஜெயபாலுக்கும் சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயபால், சக்திவேல் மற்றும் அவருடன் வந்த வர்களை பிடித்தனர். பிடிபட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப் போது சக்திவேல் தனக்கு ஜெயபால் பணம் தர வேண்டும் என்றும் அவர் நீண்ட நாட்களாக பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் வட சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஜெயபால் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னை சிறை வைத்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

    ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மற்றும் மதுரை மேலூரை சேர்ந்த சுரேஷ் (33), ஜாபர் அலி (35), ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விவேக் (26), பள்ளி விளையைச் சேர்ந்த ஜான் (26), மதுரை மேலூரைச் சேர்ந்த கார்த்திக் (38), நாகர்கோவில் புது குடியிருப்பைச் சேர்ந்த அனீஸ் (28), ராணித் தோட்டம் வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகர் (33) கார்த்திக் (29) ஆகிய 9 பேர் மீதும் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 9 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சாலையோரம் படுத்து உறங்கும் மக்கள்
    • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு எதிரொலி

    கன்னியாகுமரி:

    உலக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் கன்னி யாகுமரியும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். இதனால் தற்போது கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன்களை கட்டி உள்ளது.இதனால் தற்போது கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசிப்பதோடு மட்டுமின்றி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை ஆர்வத்துடன் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். மேலும் பகவதி அம்மன்கோவில், திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள். முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போடுகிறார்கள்.

    இது தவிர கன்னியாகுமரி யில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, சுனாமி நினைவு பூங்கா, பொழுதுபோக்கு பூங்காக்கள், மற்றும் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி போன்றவற்றையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சென்று பார்த்து வருகிறார்கள். மாலையில் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு இரவு கன்னியாகுமரியில் தங்குகிறார்கள்.

    அதன் பிறகு சுற்றுலா பயணிகள் கூடுதலாக ஒருசில நாட்கள் லாட்ஜிகளில் தங்கிஇருந்து கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவி, மாத்தூர்தொட்டி பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, முட்டம்பீச், சொத்தவிளை பீச், வட்டக் கோட்டை போன்ற சுற்றுலா தலங்களையும் பார்வை யிட்டு செல்கிறார்கள்.

    தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம், போன்ற தொடர் விடுமுறை காரண மாகவும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    இதற்கிடையில் மண்டல பூஜையையொட்டி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்கள் கன்னியாகுமரி வந்து செல்கிறார்கள். இதனால் கன்னியாகுமரிக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வரை வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரியில் 106 லாட்ஜ்கள் இருந்த பிறகும் தங்குவதற்கு அறை கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் திண்டாடுகிறார்கள். இந்த சீசனை பயன்படுத்தி கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் அறை வாடகை தாறுமாறாக உயர்ந்துஉள்ளது. சீசன் இல்லாத காலங்களில் ரு.1000 வாடகைகட்டணம் உள்ள 2 படுக்கைகள் கொண்ட சாதாரண அறைவாடகை தற்போது சீசனையொட்டி 3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரத்துக்கு வாடைக்கு விடப்படுகிறது. அதேபோல ரூ.2 ஆயிரம் வாடகை உள்ள 2 படுக்கை கள் கொண்ட"குளுகுளு" வசதியுடையஅறை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7ஆயிரம் வரை வாடகைக்கு விடப்படுகிறது.

    தற்போது இந்த லாட்ஜ்களில் உள்ள அறை கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் லாட்ஜ்களில் தங்குவதற்கு அறை கிடைக்காமல் சாலையோரம் படுத்து தூங்கும் அவல நிலை ஏற்பட்டுஉள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் ஒரு சில சுற்றுலா பயணி கள் கன்னியாகுமரியில் தங்கு வதற்கு அறை கிடைக்காத தால் நாகர்கோவில் போன்ற வெளியூர்களுக்கு சென்று தங்கி இருந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வருகிறார்கள்.

    எனவே கன்னியா குமரியில் சீசன் காலங்க ளில் லாட்ஜ்களில் அறை வாடகையை தாறு மாறாக உயர்த்துவதை கட்டுப்படுத்த வாடகை கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அதே போல கட்டண விவரங்கள் அடங்கிய பட்டியலை அந் தந்த லாட்ஜ்களில் வைக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • கோட்டார் போலீசார் சென்று விசாரணை நடத்தி தாஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் தாஸ் (40). நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மேலாளராக இருந்து வந்தார். சம்பவத்தன்று லாட்ஜில் பணியில் இருந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலிப்ப தாக கூறினார்.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில், தாஸ் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். தாஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தாஸ் சகோதரர் கண்ணன், அளித்த தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • தீயணைக்கும் படை வீரர்கள் மீட்டனர்
    • 4 நபர்கள் மட்டும் செல்லக்கூடிய அந்த லிப்டில் அதிகப்படியாக 9 நபர்கள் ஏறி மேல் மாடிக்கு சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வடக்குத் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த வட மாநில சுற்றுலா பயணிகள் 9 பேர் இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியைக் காண கன்னியாகுமரி கடற்கரைக்கு சென்றனர்.

    அவர்கள் கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு காலை 6.30 மணிக்கு அவர்கள் தங்கி இருக்கும் லாட்ஜுக்கு திரும்பி வந்தனர். இந்த லாட்ஜில் 4 நபர்கள் மட்டும் செல்லக்கூடிய "லிப்ட்" அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அதிகப்படியாக 9 நபர்கள் அந்த லிப்டில் ஏறி மேல் மாடிக்கு சென்றனர்.அப்போது"லிப்ட்" பழுதாகி பாதிவழியில் நின்றது.

    இதனால் அவர்கள் 9 பேரும் அந்த லிப்டில் சுற்றி தவித்துக் கொண்டிருந்தனர். இது பற்றி தகவல் அறிந்த லாட்ஜ் ஊழியர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆரோக்கியதாஸ் தலைமையில் தீயனைக்கும் படை வீரர்கள் அந்த லாட்ஜுக்கு விரைந்து வந்தனர்.

    தீயணைக்கும் படை வீரர்கள் மீட்பு கருவி மூலம் லிப்டில் சிக்கி இருந்த 9 வடமாநில சுற்றுலா பயணிகளை சுமார் 1 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

    • மதுரையில் உள்ள தனியார் விடுதியில் லாட்ஜ் மேலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • அவருக்கு மாரடைப்பு உள்ளிட்ட நோய் இருந்து வந்ததாக தெரியவந்தது.

    மதுரை

    மதுரை டவுன்ஹால் ரோடு, பெருமாள் தெப்பம் வடக்கு தெருவில் ஒரு தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு விருதுநகர் மாவட்டம் பாலவநத்தத்தை சேர்ந்த தர்மராஜ் (வயது 55) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக திடீர்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அங்கு தலை மற்றும் மூக்கில் ரத்தக்காயங்களுடன் லாட்ஜ் மேலாளர் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.

    அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுரை தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

    திடீர்நகர் போலீசாரின் விசாரணையில், 'மதுரை தங்கும் விடுதி மேலாளர் தர்மராஜுக்கு மாரடைப்பு உள்ளிட்ட நோய் இருந்து வந்ததாக தெரியவந்தது.

    அவருக்கு நள்ளிரவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூரில் உள்ள லாட்ஜ் அறையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்து பார்த்தனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையம் அருகே தனியார் லாட்ஜ் உள்ளது. கடந்த 18-ந் தேதி 40 வயது வாலிபர் ஒருவர் தொழில்ரீதியாக தங்குவதற்கு அறை கேட்டுள்ளார். அதன்படி கடந்த 18-ந் தேதி முதல் அறையில் தங்கியுள்ளார். ஆனால் 18 -ந்தேதி அறைக்கு சென்றவர் 2 நாட்களான நிலையில் அறையிலிருந்து வெளியில் வராததால் லாட்ஜில் பணிபுரிந்த ஊழியர்கள் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்து பார்த்த போது அங்கிருந்த பாத்ரூமில் இறந்த நிலையில் கிடந்தார். இதனை தொடர்ந்து இறந்த நபரின் உடலை போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆண்டிமடம் வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் ஜெபஸ்டின் வயது 41 என்பது தெரியவந்தது.

    கடந்த 18-ந் தேதி கடலூருக்கு வந்தவர் மீண்டும் வீட்டிற்கு செல்லாததால் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் அவர்களது உறவினர்கள் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெபஸ்டினை தேடி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்ததற்கான காரணம் என்ன? என்பதனை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    கோவை பெரியகடை வீதியில் உள்ள லாட்ஜில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    மதுரை குன்னத்தூரை சேர்ந்தவர் சடயன்(வயது 23). எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். வேலை வி‌ஷயமாக கடந்த 28-ந் தேதி கோவை வந்த இவர் பெரியகடை வீதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியிந்தார்.

    சம்பவத்தன்று வெகுநேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சடயன் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×