search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IT Staff"

    • சென்னையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகள் விருந்தினர்களின் வருகையால் நிரம்பி வழிகின்றன.
    • விடுதிகளின் அருகில் அறை கிடைக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    புயல் மழை காரணமாக சென்னையில் தரை தளங்களில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் உடனடியாக வடிந்து விடும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மழை ஓய்ந்து 4 நாட்களாகியும் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை.

    வீடுகளில் இருந்து வெள்ளம் வடிந்த இடங்களில் கூட வீடுகளுக்கும் அனைத்து பொருட்களும் சேதமாகி குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. ஓரிரு நாட்கள் மாடிகளில் இருந்த வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள் உணவு, குடிநீர் பிரச்சினை காரணமாக மின்சாரம் இருக்கும் உறவினர்களில் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல இயலாதவர்கள் லாட்ஜுகளில் அறை எடுத்து தங்குகிறார்கள். இதனால் சென்னையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகள் விருந்தினர்களின் வருகையால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து ஓட்டல்களுக்கு செல்கிறார்கள். முன்பதிவு செய்து சென்றாலும் பல லாட்ஜுகளில் அவர்கள் தங்குவதற்கு அறை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் விடுதிகளின் அருகில் அறை கிடைக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். சிலர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

    சென்னையில் லாட்ஜுகளுக்கு தட்டுப்பாடு நிலவியதால் பல லாட்ஜுகளில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் ஆக உயர்ந்தது. மேலும் ஓட்டல்களில் அறை கிடைத்தாலும் பால் மற்றும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்களின் உணவுத் தேவையை அவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

    ×